Sunday, November 8, 2009

பேராண்மை: சமூகநீதியின் வெற்றி!தமிழ் அல்லது இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை காடுகளும் மலைகளும், மலை சார்ந்த பகுதியும் ஒன்று நாயகன் நாயகி காதல் காட்சிக்குப் பயன்படும் அல்லது, திகில் காட்சி, சண்டைக் காட்சிகளுக்குப் பயன்படும். அவ்வாறே, மலைவாசி பூர்வகுடி மக்கள் என்போர் "ஜும்பாலே.. ஜும்பாலே.." பாடியபடி நடனமாடி நாயகன் நாயகிக்கு மாலை சூடவோ, அல்லது நகைப்புக்குரிய மனிதர்களாக காட்டவோ பயன்படுவர்.
பேராண்மை' படமும், காட்டையும், காட்டு மக்களையும் சுற்றித்தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால்
இதுவரை தமிழ்ப் படங்கள் காணாத நாயகன், காணாத இடங்கள் என ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிற்கிறது படம். திரைத் தொழில்நுட்பமும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சமூக அக்கறையும் கொண்ட 'மக்கள் இயக்குநர்' ஜனநாதனின் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் 'பேராண்மை'.
என்.சி.சி. பயிற்சிக்காக மலைப்பகுதிக்கு வருகிறார்கள் கல்லூரி மாணவிகள். அவர்களின் பேராசிரியராக ஊர்வசி. அக்காட்டுப் பகுதிக்கு ரேஞ்சராக கணபதி ராம் என்ற கதாபாத்திரத்தில் பொன்வண்ணன். 2000 ஏக்கர் காட்டுக்கு பொறுப்பாளராகவும், மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மலைவாழ் சமூகத்திலிருந்து படித்து முன்னேறி பதவிக்கு வந்திருக்கும் இளைஞர் துருவனாக ஜெயம் ரவி. அலுவலகப் பணியாளராக வடிவேலு.
மாணவிகள் பயிற்சிக்கு வரும் வழியில், மலை வாழ் மக்களுடன், கோவணம் தரித்தபடி எருமை மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் துருவனைப் பார்க்கிறார்கள். பின்னர் அவரே தங்களுக்கு பயிற்சியாளராக வருவது கண்டு
'இந்தக் காட்டுவாசியா நமக்கு கற்றுத் தருவது? ரிசர்வேசன் கோட்டாவில படிச்சுட்டு வந்த இவனுக்கு என்ன தெரியும்?' என்று வெறுப்புக் கொள்கிறார்கள் அதில் சில மாணவிகள்.
எப்படியேனும் துருவனை தங்களுக்கு பயிற்சியளிப்பதில் இருந்து மாற்றிவிட வேண்டும்' என்று அய்ந்து மாணவிகள் புகார் அளிக்கவும், பழி சுமத்தவும் செய்கிறார்கள். ஏற்கெனவே துருவனின் மீது ஜாதி ரீதியாக வெறுப்பும் ஏளனமும் கொண்டிருக்கும் கணபதிராம் அதனைப் பயன்படுத்தி துருவனை மட்டம் தட்டவும், தண்டனை வழங்கவும் முன்வருகிறார். எதையும் பொறுமையுடன் சமாளிக்கும் துருவன், முதல் கட்டப் பயிற்சி முடித்து காட்டுக்குள் செல்லும் பயிற்சிக்காக மாணவிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, சரியாகப் பயிற்சி எடுக்காத அந்த அய்ந்து மாணவிகளுக்குத் தான் பயிற்சி தேவை என்று அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்.
அதே வேளையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இயற்கை வேளாண்மைக்கு உதவுவதற்காக பசுமை -1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த இருக்கிறது. இயல்பாகவே குறும்புத் தனமும், துருவன் மேல் அசூயையும் கொண்டுள்ள மாணவிகள் (துருவன் மீது நேசப் பார்வை வீசும் அஜிதா தவிர), துருவனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட்டதில், வந்த வாகனத்தையும் இழந்து, மாலையே பயிற்சியகத்திற்கு திரும்ப முடியாதபடி நடுக்காட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். அவ்விரவில், மனித நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில், இரண்டு வெள்ளைக்காரர்கள் உலாவுவதைப் பார்க்கும் ஒரு மாணவி அதுகுறித்து துருவனிடம் சொல்ல, அவர்கள் இருவரல்ல... 16 பேர் இருப்பதைக் காண்கிறார்கள். அவர்களின் திட்டம் ராக்கெட் ஏவுவதைத் தடுப்பதாக இருக்கும் என்பதை ஊகிக்கும் துருவன், மாணவிகள் அய்வரின் துணையுடன் அதை முறியடிக்கத் துணிகிறார்.
உடனடித் தொடர்போ, தகவலோ இன்றி, காட்டுக்குள் சென்ற துருவனும் மாணவியரும் திரும்பி வராததால், துருவன் மீது புகாரை வலிந்து பெற்றுக் கொண்டு, படையுடன் காட்டுக்குள் நுழைகிறார் கணபதிராம். மழைவாழ் மக்களின் இருப்பிடத்திலிருந்து அவர்களை விரட்டியும், தகவல் சொல்ல வந்து சேற்றில் சிக்கி இறந்து போன மாணவி அஜிதாவின் பிணத்தைக் காட்டி, துருவனை சுடுவதற்கு அனுமதி வாங்கியும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.
மறுபுறம் நான்கு மாணவிகளுடன் தன்னால் இயன்ற அளவு, சர்வதேச கூலிப் படையின் சதியைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் துருவன். இரண்டு மாணவிகளின் உயிரைப் பலி கொடுத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக துருவன் உள்ளிட்டோர் போரிடுகிறார்கள்; முடிவில் அவர்கள் முயற்சி வெற்றிபெறுகிறது.
கணபதிராம் வீரதீரச் செயல்களுக்கான விருது பெறுகிறார். அடுத்த கல்லூரி மாணவிகளின் பயிற்சியைத் தொடங்குகிறார் துருவன்.
ஒரு வேளை இந்தக் கரு விஜயகாந்த் கையிலோ, மற்ற இயக்குநர்கள் கையிலோ கிடைத்திருந்தால், சர்வதேச கூலிப்படை- பாகிஸ்தான் சதியாகியிருக்கும். நாயகன் மீதான வெறுப்பு கல்வி அறிவற்ற ஏழை என்ற அளவில் மொன்னையாக காட்டப்பட்டிருக்கும். நாயகிகளின் கனவுப் பாட்டு இரண்டு மூன்றாவது இருந்திருக்கும். அய்யய்யோ... இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்குமோ நினைக்கவே பயமாக இருக்கிறது.
சரி, ஒரு திரைப்படம் என்ற அளவில், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களின் பணியும் வியக்க வைக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என்று அனைவரும் வாயில் படம் எடுத்துக் கொண்டிருக்க, உண்மையில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான வியத்தகு காட்சிகளோடு, அதை சத்தமில்லாமல் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.
பொத்தாம் பொதுவான பார்வையில்லை. எல்லா ஆயுதத்தையும், எதற்கென்றே தெரியா மல் பயன்படுத்தும் படங்கள் மத்தியில், ஒவ்வொரு ஆயுதத்தையும் எதற்கு இது, எப்படிப் பயன்படுத்துவது என்பது வரை சொல்லிக் காட்டுவது ஒன்றே மற்றவற்றிலிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டிவிடும்.
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? நிச்சயம் இருக்கிறது.
உயிரியல் ஆயுதங்களைப் பரிசோதிக்கும் கூடமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஈ' படத்தில் சொன்னது போல, வளரும் நாடுகளை ஒழிக்க நினைக்கும் சர்வதேச முதலாளித்துவத்தை உரித்துக் காட்டும் சர்வதேச அரசியல் குறித்த சிந்தனை இருக்கிறது இந்தப் படத்தில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இருக்கிறது இந்தப்படத்தில். ஆம். இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு வாழ்ந்துவரும் மலைவாழ் மக்கள் மீது, மண்ணின் மைந்தர்கள் மீது வந்தேறிகள் நடத்தும் வன்முறை பதிவாகியிருக்கிறது இந்தப் படத்தில்!
அடக்கி வைக்கப்பட்ட அறிவை வெளிக்கொண்டு வந்தாலும், அதன் மீது தங்கள் அதிகாரத்தைப் பாய்ச்சி நசுக்க நினைக்கும் அதிகார மனநோயாளிகளின் ஆரிய சர்வாதிகாரத்தின் உண்மை முகம் வெளிச்சமிடப்படுகிறது இந்தப் படத்தில்!
உழைப்பைச் சுரண்டிச் சுரண்டியே உயர்ந்து வந்த உலுத்தர்களின் அடையாளம் காட்டப்படுகிறது இந்தப் படத்தில்!
"செருப்புத் தைக்கிறவன் பிள்ளை செருப்பு தான் தைக்கணுமா? மலம் எடுக்கிறவன் பிள்ளை மலம்தான் எடுக்கணுமா? நாங்கள் லாம் படிச்சு அதிகாரியா வரக்கூடாதா?" என்று காலம் காலமாய் தேங்கி நிற்கும் கேள்வி உரத்து கேட்கப்படுகிறது இந்தப் படத்தில்!
ஒரு படத்தில் இத்தனையுமா? ஆம்.. இருக்கிறது... இன்னும் இருக்கிறது!
காரணம்... இதையெல்லாம் சொல்லத் தெரியும் என்பதையும், பன்னீர் செல்வம்' என்று பெயரிட்டு கறுப்பான ஆளைக்காட்டி லஞ்சப் பேர்வழி யாகவும், அங்கவை, சங்கவை என்று கறுப்பான மகளிரை நகைப்பிற்கிடமாகவும் காட்டும் அரசியல் சுஜாதாக்களுக்கு தெரியுமென்றால்...
கறுப்புச் சட்டை அணிவித்து ரவுடி அரசியல்வாதி என்று பாரதிராஜாவை நடிக்க வைக்கும் அரசியல் மணிரத்னங்களுக்கு தெரியுமென்றால்... அதே வழியில் 'டாக்டர் ராம கிருஷ்ணன்' என்று பன்னாட்டு மக்கள் விரோத அறிவியல் ரவுடிகளையும், 'கணபதி ராம்' என்று ஜாதி வெறியர்களையும் அடையாளம் காட்டும் அரசியல் எங்களுக்கும் தெரியும் என்று புரிய வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்!
"அகமும் புறமும் வென்றவன்' - இது தான் பேராண்மைக்கு ஜனநாதன் தந்த விளக்கம்" என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார். அப்படி ஒரு பாத்திரப் படைப்புதான் துருவன். 'நிர்வாணமாய் வரச் சொன்னான்' என்று திட்டமிட்டு குற்றம் சாட்டி, தண்டனை பெற்றுத் தரும்போதும் பொறுமை காத்து, தண்டனையை ஏற்றுக் கொள்ளும் துருவன், பின்னொரு கணத்தில் சொல்வார், "
எங்க மக்களுக்கு தலைப்பிரசவம் பார்க்கிறதுக்கு என்னைதான் கூப்பிடுவாங்க.. என்னுடைய பார்வையில் நிர்வாணம்கிறதே வேற".
"அய்ந்து பெண்களை தனியாய் ஒரு ஆணுடன் அனுப்பும்போது நம்பிக்கையாய் அனுப்ப துருவனை விட்டால் யார் இருக்கிறார்" என்று கல்லூரிப் பேராசிரியையின் நம்பிக்கையும், துருவனை 'ரேப்பிஸ்ட்'டாக சித்தரிக்க முயலும் கணபதிராமிடம்
"கற்பழிப்புங்கிறதே எங்க இனத்தில கிடையாது சார்" என்று பதறும் வடிவேலுவின் தவிப்பும் அகத்தை வென்ற துருவனின் பேராண்மையைப் படம் பிடிக்கின்றன.
மாணவிகளின் குறும்புத் தனத்தைக் காட்டவும், இன்றைய இளைய தலைமுறை யின் போக்கைக் காட்டவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. பொறுத்துக் கொள்ள முடியவில்லை; தவிர்த்திருக்கலாம்.
மலைவாழ் மக்கள் மீதுதான் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மை. பூர்வகுடி மக்களை, அவர்களின் மண்ணிலிருந்து விரட்ட அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு காட்சியில் உணர்த்தி விடுகிறார். துருவன் மீது பழிபோட்டு, அவனைத் தேடுகிறோம் என்று பழங்குடி மக்களை ஊரைக் காலி செய்யச் சொல்லும்போது அதிகாரம் நிகழ்த்துகிற வன்முறை கோபத்தையும், கண்ணீரையும் ஒருங்கே வரவழைக்கிறது. 'நீங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டா நாங்க என்னடா பண்றது?' என்று புத்தகங்களைத் தூக்கிப் போட்டு எரிக்கும்போது பார்ப்பனீயத்தின் விஷ நாக்குகள் எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பது புரியும்.
"படிக்கலைன்னா தான் அடிப்பாங்க... இவங்க படிச்சா அடிக்கிறாங்க" என்றபடி கரும்பலகையைக் காப்பாற்றும் குழந்தைகளின் வசனம், ஏதோ சாதாரணமானதல்ல... முதல் தலைமுறையார் படிக்க ஆவல் கொண்டு பள்ளிக்குப் போன ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனக் குழந்தையும் அனுபவித்த கொடுமை யின் வெளிப்பாடு. அத்தனை வன்முறையையும் நிகழ்த்திவிட்டு, "இப்போ தெரியுதாடா 'அரசு, அரசாங்கம், அதிகாரம்'ன்னா என்னன்னு?" என்று கொக்கரிக்கும்போதும், ஜாதியை வைத்து இழிவு செய்யும் போதும், துருவனின் வெற்றியத் திருடி கணபதிராம் விருது வாங்கும்போதும் திரையரங்கில் மக்களின் கோபத்தின் வெப்பத்தை உணர முடிகிறது. ஆங்காங்கே விளையாடியிருக்கும் சென்சாரின் கத்திரிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணத்தை பெட்டிச் செய்தியில் காண்க.
ஒவ்வொரு காட்சியிலும், ஏதாவதொன்றச் சொல்லிவிடும் தவிப்பு இருக்கிறது இயக்குநரிடம். ஆனால் பிரச்சாரம் என்ற பாணியிலன்றி, வெகு இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவுடைமையின் அடிப்படையை இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா? உழைப்புதான் அத்தனைக்கும் காரணம் என்பதை மிகமிக எளிதாக அரசியல் பொருளாதாரம் என்று வகுப்பாகவே எடுத்துவிடுகிறார். (போனஸ், படி உயர்வு பிரச்சினைகளைத் தாண்டி கம்யூனிஸ்டுகள் கூட இத்தனை ஆண்டுகளில் இதைச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகமே!)
"தமிழனோட வீரத்தை உலகமே பார்த்து வியக்குது" என்ற வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டு திரையரங்கில் ஆரவாரம் கேட்கிறது. இந்திய நாட்டைக் காப்போம் என்ற உறுதியெல்லாம், இங்கு வாழும் உழைக்கும் மக்களைக் குறிக்கிறது என்பதையும், இந்தியா வல்லரசாவதெல்லாம், விவசா யத்தை நம்பி வாழும் மக்களை விட்டுவிட்டு நடக்காது என்பதையும் உணர்த்துகிறார். இயற்கை வேளாண்மை, மலட்டு விதைகள், பசுமைக்காக ராக்கெட், உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்று இந்த வார்த்தைகளை யெல்லாம் கேட்டேயிராத இளைஞர்களின் காதுகளில் சங்காக ஊதி சர்வதேச அரசியலைப் படிக்கச் சொல்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "காட்டுப் புலி அடிச்சு" பாடலின் அந்தக் கடவுள் பொறக்கும் முன்னே இந்த பூமிக்கு வந்தவுக' உள்பட வரிகள் ஒவ்வொன் றும் குறிப்பிடத்தக்கவை.
"கிராமப் பெண்களுக்கு மாராப்பை விலக்கி விலக்கியே காலம் போச்சு; நகரத்துப் பெண்களுக்கு முடியை ஒதுக்கிவிட்டே காலம் போச்சு" என்று தந்தை பெரியாரின் குரல் தான் துருவன் வழி கேட்கிறது. காட்டின் ரகசியத்தை, போரியல் நுணுக்கங்களை சொல்லி வரும் போதும், கன்னிவெடி குறித்து மனிதநேயர் களின் கருத்தை விதைக்கிறார். தவறான கருத்து எங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநரின் அக்கறை புலப்படுகிறது. இன்னும் எடுத்துச்சொல்ல ஏராளம் இருக்கிறது.. பக்கம்தான் இல்லை!
இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் துருவன் காட்டும் பொறுமையை யாரேனும் கேள்விக்குள்ளாக்கலாம். காலமெல்லாம் தன் பிரச்சாரத்திற்கு வந்த எதிர்ப்புகளையும், தனக்கு வந்த இழிவுகளையும் பொறுமையாகக் கையாண்ட தந்தை பெரியாரின் பொது வாழ்க்கை முறையை எண்ணிப்பார்த்தால் துருவனின் நியாய புலப்படும். ஆனால், "ரிசர்வேசன் கோட்டாவில படிச்சு வந்த உங்களுக்கு என்ன தெரியும்?னு நினைச்சுட்டோம் சார். எங்களை மன்னிச்சுடுங்க" என்று சொல்ல வைக்கிறாரே அங்குதான் இருக்கிறது முழுமையான வெற்றி!
இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தியும், திரித்தும், விளங்காமலும் படங்கள் வெளிவந்துள்ள சூழலில் இடஒதுக்கீட்டின் பயனை, தகுதி-திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் வன்மத்தை எடுத்துக் காட்டி வெளிவந்திருக்கும் பேராண்மை படத்தை பார்ப்பதும், பரப்புவதும் சமூகநீதியிலும், ஒடுக்கப்பட்டோர் உரிமையிலும் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
-சமா இளவரசன்

Tuesday, July 21, 2009

தமிழ் படிக்க தெரியுமா?

தமிழ் படிக்க தெரியுமா?

(எங்க.. இத படிங்க பாப்போம்.)

உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!


ஒக்கந்து யோசிப்பாய்ங்கலோ..., அப்படின்னு சொல்லப்படாது..............

I LOVE YOU


I LOVE YOU
எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
English - I love U
Afrikaans - Ek het jou lief
Albanian - Te dua
Arabic - Ana behibak (to male)
Arabic - Ana behibek (to female)
Armenian - Yes kez sirumen
Bambara - M'bi bi
Belarusian - Ya tabe kahayu
Bisaya - Nahigugma ako kanimo
Bulgarian - Obicham te
Chinese - Ngo oiy ney a
Catalan - T'estimo
Danish - Jeg Elsker Dig
Dutch - Ik hou van jou
Esperanto - Mi amas vin
Estonian - Ma armastan sind
Ethiopian - Afgreki'
Faroese - Eg elski teg
Farsi - Doset daram
Filipino - Mahal kita
Finnish - Mina rakastan sinua
French - Je t'aime, Je t'adore
Gaelic - Ta gra agam ort
Georgian - Mikvarhar
German - Ich liebe dich
Greek - S'agapo
Gujarati - Hu tane prem karoo chhoo
Hiligaynon - Palangga ko ikaw
Hawaiian - Aloha wau ia oi
Hebrew - Ani ohev otah (to female)
Hebrew - Ani ohev et otha (to male)
Hiligaynon - Guina higugma ko ikaw
Hindi - Hum Tumhe Pyar Karte hai
Hmong - Kuv hlub koj
Hopi - Nu' umi unangwa'ta
Icelandic - Eg elska tig
Ilonggo - Palangga ko ikaw
Indonesian - Saya cinta padamu
Inuit - Negligevapse
Irish - Taim i' ngra leat
Italian - Ti amo
Japanese - Aishiteru
Kannada - Naanu ninna preetisuttene
Kapampangan - Kaluguran daka
Kiswahili - Nakupenda
Konkani - Tu magel moga cho
Korean - Sarang ஹெயோ
Latin - Te amo
Latvian - Es tevi miilu
Lebanese - Bahibak
Lithuanian - Tave myliu
Malay - Saya cintakan mu / Aku cinta padamu
Malayalam - Njan Ninne PremikunnuMandarin
Chinese - Wo ai ni
Marathi - Me tula prem karto
Mohawk - Kanbhik
Moroccan - Ana moajaba bik
Nahuatl - Ni mits neki
Navaho - Ayor anosh'ni
Norwegian - Jeg Elsker Deg
Pandacan - Syota na kita!!
Pangasinan - Inaru Taka
Papiamento - Mi ta stimabo
Persian - Doo-set daaram
Pig Latin - Iay ovlay ouyay
Polish - Kocham Ciebie
Portuguese - Eu te அமோ
Romanian - Te ubesk
Roman Numerals - 333
Russian - Ya tebya liubliu
Scot Gaelic - Tha gra\dh agam ort
Serbian - Volim te
Setswana - Ke a go rata
Sign Language - (represents position of fingers when signing'I Love You')
Sindhi - Maa tokhe pyar kendo ahyan
Sioux - Techihhila
Slovak - Lu`bim ta
Slovenian - Ljubim te
Spanish - Te quiero / Te amo
Swahili - Ninapenda wewe
Swedish - Jag alskar dig
Swiss-German - Ich lieb டி
Tagalog - Mahal kita
Taiwanese - Wa ga ei li
Tahitian - Ua Here Vau Ia Oe
Tamil - Nan unnai kathalikaraen
Telugu - Nenu ninnu premistunnanu
Thai - Chan rak khun (to male)
Thai - Phom rak khun (to female)
Turkish - Seni Seviyorum
Ukrainian - Ya tebe kahayu
Urdu - mai aap say pyaar karta hoo
Vietnamese - Anh ye^u em (to female)
Vietnamese - Em ye^u anh (to male)
Welsh - 'Rwy'n dy garu
Yiddish - Ikh hob dikh
Yoruba - Mo ni fe..e..

No Language is needed to say that you are in Love – Osho

Tuesday, July 7, 2009

மும்பையில் சீமானின் இனஎழுச்சி பொதுக்கூட்டம்


மும்பையில் சீமானின் இனஎழுச்சி பொதுக்கூட்டம்
மும்பையில் “விழித்தெழு இளைஞர் இயக்கம்” நடத்தும்,
பெரியார் - காமராஜர் பிறந்தநாள் விழா இன எழுச்சிக் கூட்டம்.
நிகழ்வு நாள்: 04- அக்டோபர் -2009.
நிகழ்விடம்: மாநகராட்சி பள்ளி மைதானம், தாராவி குறுக்குச்சாலை
வெளியிடப்படும் நூலின் பெயர் :
தோழர் மதிமாறன் எழுதிய
அண்ணல் அம்பேத்கரின்
“நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை”
கலந்து கொள்வோர்:
திரைப்பட இயக்குனர்,
செந்தமிழன் “சீமான்”
பெரியார் திராவிடர் கழக தலைவர்
“கொளத்தூர் மணி”
எழுத்தாளர் “வே.மதிமாறன்”


தங்கள் பங்களிப்புகளை வழங்கிட, இன எழுச்சிக்கான ஒரு களத்தில் சேர்ந்து பணியாற்றிட தமிழ் தேசிய உணர்வாளர்கள், பெரியாரியல்,அம்பேத்கரின் அன்பர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் முன்வர வேண்டுமாய் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு:
பன்னீர் செல்வம் : +919867488167
சிரீதர் : +919987379815
மகிழ்நன் : +919769137032
பாண்டியன் : +919821072848

http://vizhithezhuiyakkam.blogspot.com/

தமிழ் மக்கள் உரிமை போராளி தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

தமிழ் மக்கள் உரிமை போராளி தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள். ஈழ தமிழர்களின் உயிர் காக்க உயிர் நீத்த போராளிகள் பட திறப்பு விழா .ஈழத்தமிழர் சிக்கலுக்குத்தீர்வு தமிழீழத்தனி அரசே !
மாபெரும் பொதுக் கூட்டம்
நாள்
: 07-07-2009 செவ்வாய் மாலை 5.00 மணி
இடம் : பெரியார் நகர்,திருவொற்றியூர்,சென்னை
சிறப்புரை :
தோழர் தியாகு தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் சீமான் திரைபட இயக்குனர்,
தோழர் விடுதலை ராசேந்திரன் பெரியார் திராவிடர் கழகம்
தோழர் வெள்ளையன், தமிழ் நாடு வணிகர் சங்கம்
தோழர் .ரஜினி காந்த்சாதி ஒழிப்பு முன்னணி
ஒருங்கிணைப்பு : தமிழ் மக்கள் உரிமை கூட்டமைப்பு (உருப்பியகங்கள்)அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
தமிழக ஒடுக்கபட்டோர் விடுதலை இயக்கம்
பெரியார் திராவிட கழகம்
கூலி தொழிலாளர் சங்கம்
வலம்புரி இலக்கிய சோலைசாதி ஒழிப்பு
பொதுஉடைமை முன்னணி
புரட்சிகர தொழிலாளர் முன்னணி
CPI ML மக்கள்
ஆசிரியர் மாணவர் கூட்டமைப்பு
தந்தை பெரியார் படிப்பகம்
அம்பேத்கர் நற்பணி மன்றம்

Tuesday, June 30, 2009

NELLAI.D.S.SRITHAR

விழித்தெழு இளைஞர் இயக்கம்

கல்விக் கொள்ளை சாதனை படைக்கிறார்கள்!

இடஒதுக்கீட்டின் காரணமாக ‘தகுதி திறமை’ சீர்குலை கிறது என்று பார்ப்பனர் முன் வைத்த வாதங்கள் தவிடுபொடி யாகி வருகின்றன.

முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவர் களை தலைமுறை தலைமுறையாக படித்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களோடு சமப் போட்டியில் நிறுத்தி, தகுதி திறமையை மதிப்பிடக் கூடாது என்று periyar, ambedakar தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்..

வாய்ப்புக் கதவுகளை திறந்து விட்டால் - பார்ப்பனரல்லாத மாணவர்களும் சாதனை படைப்பார்கள் என்று இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடுகள் இன்றி திறந்த போட்டியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பெறும் நிறைவு மதிப்பெண் (கட் ஆப் மார்க்) கூடுதலாக இருப்பதால் - அவர்கள் தகுதி திறமையுள்ளவர்கள் என்று ஒரு வாதம் முன் வைக்கப்பட்டது. அத்துடன் திறந்த போட்டியில் தேர்வு பெறுவோர். பல தலை முறையாக படித்த - பார்ப்பன உயர்சாதிப் பிரிவு மாணவர் களாகவே இருந்து வந்தனர். இடஒதுக்கீடு முறை தொடர்ச்சி யாக அமுல்படுத்தப்பட்டு கல்வி பெறும் சூழலால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கும் கிடைக்கப் பெற்றால், இந்தப் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் மதிப்பெண்களை கூடுதலாகப் பெற்றுக் காட்ட முடியும். வாய்ப்பு கிடைக்கப் பெறாமையே இவர்கள் பின் தங்கியதற்கான காரணம் என்பதை இப்போது இவர்கள் உணர்த்தியுள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் பெறும் நிறைவு மதிப்பெண் எண்ணிக்கை - ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்ததிலிருந்தே, இதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தத் தடைகளையும் கடந்து மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படும். திறந்த போட்டியிலும், பார்ப்பன உயர்சாதிப் பிரிவு மாணவர் களைப் பின்தள்ளி விட்டு, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் கூடுதல் இடங்களைப் பெறத் தொடங்கி விட்டனர்.

இவ்வாண்டுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை யில் திறந்த போட்டிக்கான 460 இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 300 இடங்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72 இடங்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள் 18 இடங்களையும்,
பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மாணவர்கள் 16 இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பார்ப்பன உயர்சாதிப் பிரிவு மாணவர்கள் பெற்றுள்ள இடங்கள் 54 மட்டுமே!
அதேபோல் ப்ளஸ் டூ தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு தகுதியான பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ள மாணவ மாணவிகள் மொத்தம் 8 பேர். இவர்களில
6 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள். இந்த 8 பேரில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 7 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோந்த மாணவர் ஒருவர்.
பார்ப்பனர் ஒருவர் கூட இல்லை.
போராடி - அரசியல் சட்டத்தை திருத்தச் செய்து கல்வியில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வரச் செய்து 60 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை தொடர்ச்சியாக அமுல்படுத்தியதன் காரணமாக கிடைத்த மிகப் பெரும் வெற்றி தான் இந்த சாதனை.
ஆனால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகம் குவிக்கும் சாதனைக்குப் பின்னால் நடந்த சமூக நீதிப் போராட்டங்கள் பற்றி அவர்கள் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகத்துக் குரியது தான். அதன் வரலாறுகளும் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த திராவிட கட்சி ஆட்சிகளால் பாடத் திட்டங்கள் வழியாக சொல்லப்படவும் இல்லை.
அதே நேரத்தில் அறிவாற்றலை வளர்த்துக்கொண்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம் இப்போது மற்றொரு கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. உயர் கல்வி நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருந்த நிலை மாறி, தனியார் மயமாகி வருவதால் இந்த நிறுவனங்கள் கல்வியை வணிகமாக்கி வருகின்றன. எனவே இந்த சந்தையில் நிர்ணயிக்கப்படும் பல லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, இடங்களை வாங்கும் சக்தியற்றவர்களாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினர் உள்ளனர். கல்விக் கொள்ளை தடுக்கப்பட வேண்டும் என்று எல்லோராலும் பேசப்படுவது உண்மைதான். ஆனால், அரசியல் பெரும் புள்ளிகள், அமைச்சர்கள், periyar, ambedakar,kamarajar இயக்கத்தை நடத்துவதாகக் கூறுவோர் எல்லோருமே கல்வி வணிகக் கொள்ளையில் இறங்கி விட்டார்கள்.. எனவே உயர்கல்வித் துறை தனியார் மயமாவது தடுக்கப்படுவதுதான் இப்போது நம்முன் உள்ள முக்கிய சமூக நீதிப் பிரச்சினையாக இருக்கிறது என்பதையும் கவலையுடன் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
கல்விக் கொள்ளைக்கு எதிராக அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கம் நடத்தப்பட வேண்டிய தேவையும் அவசியமும் வந்து விட்டது!!!

விழித்தெழு இளைஞர் இயக்கம்

பன்னீர்செல்வம்: +919867488167
சிரிதர் : +919987379815
மகிழ்நன் : +919769137032
பாண்டியன் : +919821072848
vizhithezhuiyakkam.blogspot.com

Reinventing Dharavi
(GOVT DECIDES TO AMEND DEVELOPMEND RULES FOR DHARAVI FACE LIFT


Sector
Sector 1
Sector 2
Sector 3
Sector 4
Sector 5
Total no. of slum structure
செக்டர 7988 nos
செக்டர் 13500 nos
14501 nos
9544 nos
5286 nos
Total land area
5,68,331 Sq.m
3,91,188 Sq.m
4,86,726 Sq.m
3,47,111 Sq.m
3,72,837 Sq.m
Rehab area
2,99,550 Sq.m
5,06,250 Sq.m
5,43,787 Sq.m
3,57,900 Sq.m
1,98,225 Sq.m
Sale area
3,98,402 Sq.m
6,73,313 Sq.m
7,23,237 Sq.m
4,76,007 Sq.m
2,63,639 Sq.m
Total Cost of Construction
Rs 932 Crores
Rs 1410 Crores
RS 1670 Crores
Rs1043 Crores
Rs 799 Crores

No. of slums 50,000
Population 3 lakh
N0. of housing unit for rehab 51,000
Commercial space for sale 2 crore

PAST EFFORTS :
1936: Skim clearance
1976: Slum Improvement Programme
1980: Slum Up gradation Programme
1985; PM's Grant Project
1994: People's Participation Programme
1996: Slum Rehab Scheme


PRIVATE DEVELOPERS TO BE ROPED OR LINES IN FOR REBUILDING CIVIC PROPERTIES
Proposed development 3.5 Crores Square feet

Project Cost Rs 5,855 Crores

Duration of project 7 years
(DCR), the Maharashtra government
now plans to amend the rules exlusively
for this project.

Successive regimes have sought to
give a facelift to the 535-acre slum
ghetto, which is a hub for leather and
plastic units, bakeries and jewellers.

In 1985, then prime minister Rajiv
Gandhi had announced a Rs 100-crore
grant for Mumbai, of which Rs 37
crore was used to build Dharavi's
roads, sewage and water lines.

However,large-scale changes continues to
elude the area.Last Saturday, officials of the Slum
Rehabilitation Authority (SRA) finalised
a draft DCR for Dharavi following
a six-hour marathon meeting.

The plan has now been sent to the government,
and officials hope it will be
approved in a few days. The amended
DCR will apply to redevelopment of
slums not less than 100 acres in size.

The Dharavi project has been touted
as the world's largest slum rehabilitation
scheme.
The redevelopment
envisages a whopping 3.5 crore sq ft of
construction—1.5 crore sq ft to rehouse
the slumdwellers and 2 crore sq
ft of development that the builders
can sell in the open market.
As many
as 51,000 slums holding a population
of 3 lakh people have been identified
for rehabilitation.

I S Chahal, officer on special duty
in charge of the Dharavi redevelopment
project, claimed the existence of
a couple of thousand tenements and
tenanted properties belonging to the
Brihanmumbai Municipal Corporation
(BMC) in Dharavi posed the first
major challenge.

According to the existing DCR, municipal
or housing board properties
are to be redeveloped by BMC or Mhada
themselves and cannot be given to
a third party for redevelopment.

TheDharavi plan envisages participation
of private developers with the SRA
being the implementing authority.
There are more than 2,500 houses
where civic employees are staying
currently in Dharavi.

The BMC hasbeen insisting that if these buildings
are to be demolished, it should get the
same number of tenements in the
new buildings to be constructed under
the project.In addition, there are
also more than 2,000 municipal tenanted
chawls where people have been
residing over six decades.

There are also BMC buildings like the local
ward office and fire brigade station
here, which will have to be reconstructed.
"We had to approach the
government for clarifications how to
get around this problem. Only a
change in the DCR will permit us to
go ahead with the project," said Chahal.
It is learnt that the chief minister
has agreed to allow the use of the
BMC's 12-acre sewage pumping station
land in Dharavi to construct temporary
transit accommodation only
for Dharavi slumdwellers. Once the
project is completed, the land will be
handed back to the BMC.

I am thankful to My sister priya darshini for collection of papers and her guidance and encouragement….

நெல்லை ஸ்ரீதர் ,

விழித்தெழு இயக்கம் ,

தாராவி,

மும்பை -17NELLAI.D.S.SRITHAR

VIZHITHEZHU

(28.06.09), சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில், கணினித்துறையைச் சேர்ந்த இளையோர்களை உள்ளடக்கிய SAVE TAMIL என்னும் குழுவால் முன்னெடுக்கப்பட்ட " இலங்கையில்
தற்போதைய நிலை"
என்று தலைபிடப்பட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய அனைவரும் அகதி முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்களின் வாழ்வு கவலைக்கிடமாக இருப்பதை சுட்டிக்காட்டி, வருங்காலத்தில் தமிழகத் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகளை மேற்கோளிட்டு பேசினார். இக்கருத்தரங்கில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டதாகத் தெரிகிறது.

கருத்தரங்கில், விடுதலை இராஜேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் தி.க), அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (நிறுவனர், தமிழ் மையம், சென்னை), திரு. அருள் ஜோர்ஜ் (PUCL), திரு. சகாயம் (தமிழக மீனவர்களின் சார்பாக), செல்வி. பூங்குழலி (எழுத்தாளர்) ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்கருத்தரங்கில் நிழற்படக் கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.!!

ஞாயிற்றுக்கிழமை (05.07.2009) மாலை 1மணிக்கு MUMBAI நகரில் "உயிர்த்தெழுவோம்" நிகழ்வு நடைபெறவுள்ளது.
தாயகத்தில் தடுப்பு முகாம்களிலும்,வதைமுகாம்களிலும் தினம் தோறும் வாடி வதங்கும் எம் உடன் பிறப்புக்களின் உயிர்காக்கவும்,சர்வதேசங்களின் மனக்கதவுகளை தட்டவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுWednesday, June 10, 2009

NELLAI.D.S.SRITHAR

EELAM NEVER LOSS.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.
போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக்
கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அதனால் 'கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்' என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது,
தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது! பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,''பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலையின்போது சின்ன சாந்தன், 'பொட்டு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.
அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் 'பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்' என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார்.

கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.
பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது சிங்கள ராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கை யின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் ராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட ராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை ராணுவத்தால் கண்டறிய முடியவில்லை...'' என்கிறார்கள்.புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள்.
''ராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், 'எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!' என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டுநாயகா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் ராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமேமிஞ்ச முடியாது.

இந்திய உளவு அமைப்பான 'ரா', இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, 'ரா'வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு. கருணா, சிங்கள அரசோடுலேசான தொடர்பில் இருந்தபோதே, அதுகுறித்துப் பிரபாகரனிடம் எச்சரித் திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.
அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை ராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள ராணுவமும் நம்பிவிட்டது. பிரபா கரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, 'ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட் டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்' என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பி லிருந்தே செய்திகள் கசிகிறது.புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் ராணுவம் இதுவரை அடை யாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது ராணுவத்துக்கே புரியாத புதிர்தான்.
ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றி தழைக் கேட்டு இந்திய அரசு, சிங்கள ராணுவத்தை நச்சரித்துவருகிறது. பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், சிங்கள அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப்போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் ராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், 'பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது' என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!'' என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிற ாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்பட விருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே 'புலிகளின் பெரிய மூளை' என்று குறிப்பிடப்பட்டவர்.

பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!- இரா.சரவணன்

Tuesday, May 12, 2009

NELLAI.D.S.SRITHAR

VOTE For 49 O
மாற்றம் கொண்டு வருமா 49 ஓ? இராபர்ட் சந்திரகுமார்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது மட்டுமின்றி, அதிகமான வாக்காளர்கள் பங்கு பெறும் மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையுடன் தற்போது 15 ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் என்ன? யார் ஆண்டால் நமக்கென்ன? எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் நமக்கு என்ன ஆகப்போகிறது? நமது வாழ்வில் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது? எல்லா ஆட்சிகளும் ஒரே மாதிரிதானே அமைகிறது? பிறகு ஏன் வாக்களிக்கச் செல்ல வேண்டும்? அப்படியே வாக்களிக்கச் சென்றாலும் இந்தியாவின் நட்பு நாடான இரஷ்யாவில் உள்ளது போல, யாருக்கும் இல்லை எனது வாக்கு என பதிவு செய்து, போட்டியிடும் எல்லா வேட்பாளர்களையும் புறக்கணிப்பு செய்யும் வகையில் வாக்களிக்க வழிகள் இருந்தாலும் பரவாயில்லை, அப்போதாவது வாக்களிப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கலாம் என்பதே இன்று பரவலாக எழுந்துள்ள மனநிலையாகும்.அரசியல் என்பது முடிவெடுப்பதற்கான அதிகாரம். யாருடைய கையில் முடிவெடுப்பதற்கான அதிகாரம் உள்ளதோ அவர், அவரது ஆட்சி பரப்பின் எல்லைக்குட்பட்ட மக்களுக்கான அரசியல் நிலைபாட்டை எடுக்கிறார். முடிவு எடுப்பதில் குடிமக்கள் நேரடியாகப் பங்கெடுப்பதில் உள்ள சிரமத்தைத் தவிர்த்திட வேண்டி தங்களால் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளின் வாயிலாக பங்கெடுத்து வருகின்றார்கள். மக்கள் பிரதிநிதிகளையும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையம் உற்று நோக்கினால் ஆச்சரியங்களையும், கோபங்களையும், விரக்திகளையும், மிகுந்த கவலையையும், இன்னும் இன்னும் மக்களுக்கான பல்வேறுபட்ட போராட்டங்களையும் நாம் முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தங்களையும் நிரம்பவே அளிக்கிறது. டி.என்.சேஷன் இந்திய தேர்தல் ஆணையராக இருந்தபோதுதான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதை வெளியே கொண்டுவந்து பூனைக்கு மணி கட்டினார்.
* இந்தியாவில் இதுவரை 14 மக்களவைத் தேர்தல் நடந்துள்ளது. அதில் 5, 13 மற்றும் 14வது மக்களவை மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
* தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
* கடந்த 5 ஆண்டில், மக்களவை உறுப்பினர்கள் 543 பேர்களுக்குமான செலவு தொகை ரூ.585 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.* கடந்த ஆட்சியில், அணுசக்தி உடன்பாடு தொடர்பான 1..2..3 உடன்படிக்கையை ஏற்பது தொடர்பாக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களிக்க வேண்டி, ஆளுங்கட்சியே இலஞ்சம் வழங்கி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய நிகழ்வு மக்களவை உறுப்பினர்களின் மூலமாக பாராளுமன்ற வளாகத்திற்குள்ளாகவே வெளிக்கொணரப்பட்டது.
* மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து பேசவோ அல்லது பேசாமல் இருக்கவோ, வாக்களிக்கவோ அல்லது வாக்களிக்காமல் இருக்கவோ இலஞ்சம் வாங்கிய பிறகே முடிவெடுக்கின்றார்கள் நமக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
* கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தொகுதிக்கு தேவையான திட்டங்களைப் பற்றிய கேள்வியே எழுப்பாமல் அனேகம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த முறையும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள தமிழக மக்களவை உறுப்பினர்களில் சிலர் எழுப்பிய கேள்விகளின் எண்ணிக்கை கே.வி.தங்கபாலு - சேலம்(0), த.வேணுகோபால் -திருப்பத்தூர் (0), கிருஷ்ணன்- பொள்ளாச்சி (0), ஏ.கே.எஸ்.விஜயன்-நாகபட்டினம்(0), ஆர்.பிரபு-நீலகிரி(12), தயாநிதிமாறன் -மத்திய சென்னை (0), (அமைச்சரவையிலிருந்து விலகிய பின்)
* கடந்த 5 ஆண்டு கால பதவி காலத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரில் முழுமையாக கலந்துகொண்ட உறுப்பினர்கள் யாருமே இல்லை. நாடு முழுவதும் 12 மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே 75 விழுக்காடு வருகை புரிந்துள்ளனர் (மத்திய அமைச்சர்கள் நீங்கலாக)
* நடப்பு தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் ஆறில் ஒரு வேட்பாளரும், தமிழ்நாட்டில் உள்ள நாற்பது தொகுதிகளில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களில் முப்பதுக்கும் அதிகமான தொகுதிகளின் வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.
* கடந்த தேர்தலின் போது ரூ.9.6 கோடியை தனது சொத்து மதிப்பாகக் காட்டிய ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள விஜயவாடா மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் இலகடபதி இராஜகோபாலின் சொத்து மதிப்பு இன்று ரூ.299 கோடி.14 பொதுத்தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகும் அவலங்கள் தொடரும் இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் பதிவு பெற்ற தேசிய கட்சிகள் 7, மாநில கட்சிகள் 49 மட்டுமே. ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையோ 1027. இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலின் போதும் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும், வாக்காளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வந்தாலும், அதற்கு எதிர்மாறாக தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் மட்டும் தேக்கமடைந்த நிலையே நீடித்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் 1985ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலின் போது பதிவான 64.1 விழுக்காடு வாக்குகளே இன்றளவும் இந்தியாவில் பொதுத்தேர்தலில் பதிவான அதிகளவு வாக்குகளாகும்.இந்த தேர்தலில் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 கோடி பேரில், 71.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாவார்கள். 800 முதல் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் 8,24,804 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. சுமார் 11 இலட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தேர்தலுக்காக தோராயமாக ரூ.1,500ஃ- கோடி வரையில் செலவாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வெற்று முழக்கங்கள், ஏடுகளில் மட்டுமே தொடரும் வாக்குறுதிகள், மக்களைத் தொடர்ந்து ஏழைகளாகவே நீடிக்கச் செய்திடும் வகையிலான புதிய திட்டங்கள், பணவசதி மிக்க செல்வந்தர்களுடைய நலனைப் பிரதானப்படுத்திய திட்டமிடுதல்களும், சட்டங்களும், மகளிருக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறிவிட்டு குறைந்தபட்சம் தங்களது வேட்பாளர் தேர்வில் கூட அதை அமல்படுத்தாதது, தீணடாமை வன்கொடுமைகளுக்கும், ஜாதிய அட்டூழியங்களுக்கும் முடிவு கட்டும் வகையில் செயல்படுத்தத் தக்க சரியான மாற்று செயல்திட்டங்களை முன் வைக்காதது, நிலம், நீர்,காற்று போன்ற அத்தியாவசியத்தேவைகளை அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்லாமல் இன்றைய வறிய நிலை குடிமக்களுக்கும் உத்தரவாதப்படுத்தாதது, கல்வியில் தொடரும் ஏற்றத் தாழ்வுகள், மத்திய அரசு குறிப்பிட்ட மாநில மக்களிடம் மட்டும் மாற்றாந்தாய் மனப்போக்குடன் பாரபட்சமாக நடந்து கொள்வது, குடிமக்களை வஞ்சிக்கும் நிலை, உலகில் எங்கோ நடக்கும் மனித உரிமை மீறலுக்கும் கடும் கண்டனம் செய்வதும், குடிமக்களின் குருதி வழிச் சொந்தங்கள் அண்டை நாடுகளில் அழித்தொழிக்கப்படும் போது கண்டும் காணாமல் இருப்பதுடன் அந்த இழிசெயல்களை ஊக்குவிக்கும் போக்கு, பெரும் செல்வந்தர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் நிலையை உருவாக்குதல் என்பது போன்ற இன்னும் இன்னும் ஏராளமான காரணங்களால் அரசியல் கட்சிகள் மீதும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மீதும், நடைமுறையிலுள்ள தேர்தல் முறைகளின் மீதும் வாக்காளர்களுக்கு மெல்ல, மெல்ல நம்பிக்கை குறைந்து அவநம்பிக்கை அதிகரித்து வருகிறது. இப்படியாக இவ்வளவு ஆண்டு காலமாய் மனதிற்குள்ளேயே வெம்பிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் வாக்காளர்களுக்குத் தற்போது கிடைத்தற்கரிய ஆயுதமாய் கிட்டியுள்ளது 49 ஓ.“தேர்தல் நடத்தை விதிகள் சட்டம்” 1961ன் பிரிவு “49 ஓ” “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரிக்கும் உரிமை அனைத்து வாக்காளர்களுக்கும் உள்ளது” என்று கூறுகிறது.“தேர்தலின் போது வாக்காளர், வாக்குச்சாவடிக்குச் சென்று தனது பெயரை பதிவு செய்துவிட்டு, தனது விரலில் மை வைத்துக் கொண்டவுடன், வாக்குச்சாவடி பொறுப்பு அதிகாரியிடம், தான் இங்கே போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனக்கூறி, அதை அப்படியே வாக்குச்சாவடியில் அதற்கென வைக்கப் பட்டிருக்கும் விதி “17அ” வின் கீழான படிவத்தில் பதிவு செய்து, அதை உறுதி செய்யும் வகையில் அதன் கீழ் கையெழுத்தோ, கைவிரல் ரேகை பதிவோ செய்துவிட்டு போகலாம்” என கூறுகிறது.“வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை அவசியம்” என 89.15மூ மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.“சட்டம் பற்றிய அறியாமையை மன்னிக்க இயலாது” என்பது சட்ட முதுமொழி. ஆனால் அதே வேளையில், இயற்றப்படும் சட்டங்களை சாமானிய மனிதனும் தெரிந்து வைத்திருக்கும் வகையில் பரவலாகக் கொண்டு செல்ல நமது ஜனநாயக நாட்டில் ஆளும் அரசுகள் எடுக்கும் முயற்சிகள் நாம் அனைவரும் அறிந்ததே. அரசு மற்றும் அரசாங்கத்தின், அடிப்படை மக்களுக்களுக்கான சட்ட அமலாக்கத்தில் காட்டும் அதி தீவிர ஈடுபாட்டை பிரிவு 49 ஓ-வின் பரவலாக்கத்தின் மூலமாக நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். அரசியல் கட்சிக்களும், தேர்தல் ஆணையமும் 49 ஓ பிரிவை பரவலாக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் வாக்காளர்களுடைய கையில் அதிகாரம் மிகுந்துவிடும் என்ற அச்சத்தால் அரசியல் கட்சிகள் இன்றளவும் செய்யாமல் இருக்கின்றன.பிரிவு 49 ஓ-வைப் பயன்படுத்துவது, தேர்தல் புறக்கணிப்பு என்பதாகாது. இதைப் பயன்படுத்துவதன் மூலமாக நமது வாக்கை முறையாகப் பதிவு செய்வதுடன், நமது வாக்கு கள்ள வாக்காக பதிவாகாமல் நம்மால் தடுக்கப்படும். அதே நேரத்தில், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மீதான நமது எதிர்ப்பையும் பதிவு செய்துவிட்டு வருவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகவும் இது அமையும்.தேர்தலின் போது, சமூகத்தின் அடித்தட்டு மக்களான ஏழை, எளிய மக்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்கின்றனர். நடுத்தர மக்களில் பாதி பேரே தங்களது வாக்குகளை பதிவு செய்கின்றனர். நடுத்தர வர்க்கத்தில் பாதியும், செல்வந்தர்களில் பெரும்பாலானோரது வாக்குகளுமே குறைவாகப் பதிவாகிறது. தங்களது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாத வாக்காளர்கள் மறைமுகமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள். அதே வேளையில் தங்களது எண்ணங்களை வெளிக்காட்டுவதாக நினைத்து அதற்கு செயல் வடிவம் கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்.100 விழுக்காடு வாக்குகள் பதிவாகி பெருவாரியான வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிப்பு செய்யப்படுவதற்கான ஓர் ஏற்பாடே 49 ஓ. ஆனால் நடப்பிலுள்ள தேர்தல் முறையில், பெருவாரியான 51 விழுக்காடுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறாரா என்றால் இல்லை. மாறாக, அந்த தொகுதியில் பதிவான வாக்குகளில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றியாளராக அறிவிக்கபடுகிறார். தற்போது 324 மக்களவை உறுப்பினர்கள் 50 விழுக்காடுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்களே. தற்போது சராசரியாக ஒவ்வொரு தேர்தலின் போதும் 50 முதல் 60 விழுக்காடு வாக்குகளே பதிவாகி வருகிறது. இதன் காரணமாக 60 விழுக்காடு வாக்குகள் பதிவான ஒரு தொகுதியில் முறையான மற்றும் கள்ள வாக்குகளின் மூலமாக 30 முதல் 35 விழுக்காடு வரையிலான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.அதோடு தங்களது வாக்கைப் பதிவே செய்யாத 40 விழுக்காடு வாக்காளர்கள், எதிராக வாக்களித்த 25 விழுக்காடு வாக்காளர்கள் மற்றும் வாக்குரிமை இல்லாத குழந்தைகள் உட்பட பெருவாரியான வாக்காளர்கள் வேண்டாமெனக் கருதுகிற வேட்பாளர்களே பெரும்பாலும் தேர்தலில் வெற்றியடைந்து அனைவருக்குமான பிரதிநிதியாக அறிவிக்கப்படுகிறார். தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு தேர்தலிலும் 40 விழுக்காடுக்கும் அதிகமானோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதேயில்லை. இப்படியாக, 30 முதல் 35 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெறும் அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வருவதால் அது முழுமையாக மக்கள் உணர்வை பிரதிபலிப்பதாக இருப்பதில்லை.நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது இரகசியமாகச் செய்ய வேண்டிய செயல் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் வாக்களிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்களை நிராகரிக்க அதிகாரம் அளிக்கும் பிரிவு 49ஓ என்ற பகுதி இன்றளவும் இடம் பெறவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. இப்போது இருக்கும் சூழலில் படிவம் 17அ-வைப் பயன்படுத்தி வாக்குச்சாவடியில் பகிரங்கமாகத்தான் பிரிவு 49ஓ -வைப் பயன்படுத்த இயலும். 49 ஓ-வைப் பயன்படுத்தும் வாக்காளரை அடையாளம் காணும் உள்ளுர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த கட்சியின் ஊராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களிடம் கூறி பின்னாளில் அந்த வாக்காளருக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் இடையூறு விளைவிக்க செய்யும் வாய்ப்புகள் நமது சமூகத்தில் ஏராளமாய் உள்ளது. எனவே, வேட்பாளர்களை நிராகரிக்கும் வாக்கைப் பதிவு செய்யும் வகையில் வாக்களிக்கும் இயந்திரத்திலேயே கடைசியாக 49ஓ பிரிவையும் சேர்க்க வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பும் மற்றும் சில அரசு சாரா நிறுவனங்களும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தன. இந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில் அந்த வழக்கானது இன்றளவிலும் தீர்ப்பிடப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் வாக்கு இயந்திரத்திலேயே வேட்பாளர்களைப் புறக்கணிப்பு செய்வதற்கான வாக்கைப் பதிவு செய்வதற்கான பகுதியும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு தொகுதியில் வேட்பாளர் வெற்றிபெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்கு 49ஓ-க்கு இருந்தாலும் அந்த வேட்பாளருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிக வாக்கு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராகவே அறிவிக்கப்படுவார். அந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் அடுத்த தேர்தலில் நிற்கமுடியாது, வெற்றிபெற்றது செல்லாது என்று சொல்வதெல்லாம் சுத்தப்பொய். வாக்காளர்களாகிய நாம் 49ஓ-பிரிவை பயன்படுத்தி நாட்டிற்கு தேவையில்லாத அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு மட்டும்தான் காட்டமுடியும். 49ஓ வேட்பாளர்களுக்கு நிரந்தரமாக ஓ போடும் அளவிற்கு கூர்மையான ஆயுதமாக இருக்கவேண்டும்.இன்றைய சூழலில் வேட்பாளர் தேர்வும், அதை மாற்றியமைத்தலும் முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளின் தலைமையிடமே உள்ளது. அதில் முடிவெடுக்க வாக்காளர்களின் கையில் அதிகாரமேதும் இல்லை. இச்சூழலில் 49ஓ-வைப் பயன்படுத்தி வேட்பாளர்களை நிராகரிக்கும் வாக்குகள் கணிசமாகப் பதிவாகும் சூழலில் அரசியல் கட்சிகள், வாக்காளர்களை நேரடியாகத் தேடிவந்து, யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என கலந்தாலோசித்து பெருவாரியான வாக்காளர்களின் விருப்பப்படி முடிவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.கடந்த 48 ஆண்டுகளாக அமலில் இருந்தும் தெரியாமல் இருந்த துருப்புச் சீட்டை இனியாவது சரியாகக் கையாள்வோமேயானால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. அரசியல், சமூக, பண்பாடு மற்றும் கலாச்சார அரங்கில் மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் வாக்காளர்களின் கையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய நிர்பந்தங்களைக் கொடுக்கக்கூடிய வகையிலான திருப்புச்சீட்டு 49ஓ வடிவில்... இனி என்ன செய்யப் போகிறோம்?.
- இராபர்ட் சந்திரகுமார்

Friday, April 17, 2009

NELLAI.D.S.SRITHAR

அண்ணல் அம்பேத்கரின் இளவயதில் ஒருநாள்
ஒரு நாள் அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் தங்கள் தந்தையை வரவேற்கத் தொடர் வண்டி நிலையத்திற்கு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தனர். பயணத்தின்போது அவர்கள் மாட்டு வண்டி ஓட்டியிடம் பேசிக் கொண்டு வந்தனர். பேச்சின் இடையில் அம்பேத்கரின் சாதியைப் பற்றி வினவினான் வண்டிக்காரன். அம்பேத்கர் தம்முடைய சாதியைச் சொன்னதும் வண்டிக்காரனுக்கு வந்ததே சினம்! உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டான். "யாரைக் கேட்டு வண்டியில் ஏறினீர்கள்? உடனடியாக இறங்கி ஓடி விடுங்கள்" என்றான். அம்பேத்கருக்கும் அவருடைய அண்ணனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருவரும் வண்டிக்காரனுடைய செயலைப் பார்த்து வெலவெலத்துப் போய்விட்டார்கள். இவர்களுடைய தயக்கத்தைப் பார்த்த வண்டிக்காரன் வண்டியில் இருந்து அவர்களைக் கீழே தள்ளி விட்டான். பின்னர், “வண்டியைக் கழுவி விட வேண்டும். இவர்கள் இருவரும் வண்டியைத் தீட்டாக்கி விட்டார்கள்” என்று கூறியவாறு சென்றான் அவன். இந்நிகழ்வு அம்பேத்கரின் மனத்தில் உளைச்சலை ஏற்படுத்தி விட்டது; சாதியக் கொடுமைகளை எண்ணி அந்தப் பிஞ்சு நெஞ்சம் வருந்தியது. இது போன்ற சில நிகழ்வுகள்தாம் பின் நாளில் அவரை ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகப் போராடத் தூண்டின. .

Thursday, April 9, 2009

1947'' -இந்திய விடுதலை மட்டுமல்ல., துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள்


''1947''
கொண்டாட்டங்கள்...கொடியேற்றம்...என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும், வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.இந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம் லீக்தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும் காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் இதெல்லாம் தவறு, விடுதலைக்குப்பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும் செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டீஷ் ஆட்சியாளன்ன் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் என தேசமெங்கும் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது. ஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே உரியதாக தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங் காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகிவிட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப் பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.தமிழர்களாகிய நம்மால் அதிலும் இன்று வாழ்கிற நம்மால் தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புன்ந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டீஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு "பிரிவினை கமிட்டி'யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.ஜூன் 18, 1947ல் பிரிட்டீஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் 20 பிரிவுகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப்பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது அவை:1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்3. மத்திய வருவாய்4. ஒப்பந்தங்கள்5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை6. பொருளாதார உறவுகள்குழு 17. பொருளாதார உறவுகள்குழு 28. வாழுமிடம்9. வெளியுறவு10. ராணுவம்இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.1947 ஜூன் 30 அன்று "எல்லைக் குழு' (Boundary Commission) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டரி கமிஷன், பெங்கால் பவுண்டரி கமிஷன் என இரு குழுக்கள்.இரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர். சின்ல் ரேட்கிளிஃப்(Sri Cyril Radcliff) என்ற பிரிட்டீஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.பஞ்சாப் பவுண்டரி கமிஷன்:1. சர்சின்ல் ரேட்கிளிஃப்2. ஜஸ்டிஸ் தீன் மொகம்மது3. ஜஸ்டிஸ் முகமது முனிர்4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்5. ஜஸ்டிஸ் தேஜாசிங்வங்காள பவுண்டரி கமிஷன்:1. சர் சின்ல் ரேட் கிளிஃப்2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்ஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.பொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.இரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.ஆகஸ்டு 17 அன்று இரு நாட்டுப் பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.இடம்பெயர்தல்:நடுவில் கோடுகிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜிகூட நினைக்க வில்லை. ஆனால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறுவிதமாக நினைக்கச் செய்தன.ஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.
ராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.''அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால் மக்கள் எப்போது மாறினார்கள்? (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை?)''பஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.ஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்த வர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14.5.1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:""பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.காலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.நான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள்? நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு? நாங்கள் எத்தனை பேர் வருவது? எப்படி வருவது? எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது? எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா? உங்கள் நிவாரண முகாம்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா?ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளீர்கள்.பைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.உங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.''கோழைகளே! கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்'' (அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆவணங்கள் கோப்பு எண் CL 9 பகுதி 1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.வசதி படைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். "ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.. இது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத்துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.எப்படி நிகழ்ந்தது? எப்படியெல்லாம் நிகழ்ந்தது?ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். "முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாணியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மத மாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை "கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்... ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா'வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.பின்னர் பல கிராமங்களில் ""தாக்குதலுக்குப் படைவருகிறது'' என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக் கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. "கடத்தப் பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949'' கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது."1.3.1947க்குப் பிறகும் 1.1.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dawn) டான் என்ற பத்திரிகை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் "பாகிஸ்தான் உளவாளி'' என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.நாங்கள் யார்?:இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும். 1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.பொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்? அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு "அசுத்தஸ்தான்'' என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.திரு. பியாலால் (Mr. Beah Lall) 1946 நவம்பரில் "அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை'' நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்'' ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார். (ஆதாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண் G19(KW-1) ஹரிஜன் சேவக் சங் – 1946 - 48)1947 மார்ச் 6 இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே. என். மண்டல், "எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா? எனவே நான் லீகுடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள்'' என முழங்கினார். (மேற்படி AICC ஆவணம்.)இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நயந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.ஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ" எழுதினார். "நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம் :வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்."அவர்களு''டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை நம்பிக்கைகளை அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்ணின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியானது."அவர்களது'' பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்."அவர்கள்'' தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.தேசப்பிரிவினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி "நம்ம தேசம்'' இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.தமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள், அகதிகளாக.ஒரு வார்த்தையில் சொல்வதானால் "1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.1947 ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக இணக்கமாக இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்? குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் கன்றிப்போவதை நாம் எப்படி சன் செய்யப்போகிறோம்?1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் 1947.

Wednesday, April 8, 2009

NELLAI.D.S.SRITHAR

அம்பேத்கர் டீ சர்ட் விழா மும்பையில்
ஈழப்பிரச்சினை முடிந்துவிட வில்லை, அது நம் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்த போராட்டமானாலும், நாம் எல்லோரும் தமிழர்களாக இருக்கிறோமா? என்ற சுயஆய்வாக, நாம் நம் சகோதரர்களை, தமிழர்களாக மட்டும் கருதுகிறோமா, என்ற கேள்வியை முன்வைத்து அடுத்த முன்னெடுப்பு.

எரியும் ஈழப்பிரச்சினையால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் டீ-சர்ட் மற்றும் “நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை” வெளியீட்டு நிகழ்வு:26-04-2008 அன்று நடைபெற இருக்கிறது. நிகழ்விடம் நாளை அறிவிக்கப்படும்.

விழித்தெழு இளைஞர் இயக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த வரலாற்று நாயகன், ஒடுக்கப்பட்ட இனத்தின் விடிவெள்ளியாய் வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்தும், மறையாமல் கொள்கை விளக்காய், இந்துத்வத்திற்கு இன்றும் சிம்ம சொப்பனமாய் விளங்கும் “அம்பேத்கரின் கருத்துகள்” பரவலாக சரியான முறையில் பரவ வெண்டும். அம்பேதகரை படத்தின் அளவுக்கு சுறுக்கிவிட்ட தவற்றை களைய வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்படும் முன்னெடுப்பு இது.

அம்பேத்கரை தலைவர் என்று ஏற்றுக் கொண்டவர்கள் அவருடைய கருத்துகளை மறுதலித்துவிட்டு, அம்பேத்கரின் படத்தை கோவில் கொடை விழாவுக்கு பயன்படுத்துவதும், இன்னும் சொல்லப்போனால் மும்பை போன்ற நகரங்களில் இந்துத்தவத்தின் பரப்புரையாக பயன்படுத்தப்படும் கணேஷ் சதுர்த்தி விழாவில் தாழ்த்தப்பட்டவர்கள் கலந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், தங்களை தாழ்த்திய கீழ்நிலையில் தள்ளிய இந்து மத பண்டிகையில் மதவெறியோடு, தங்களின் விடுதலைக்காக போராடிய தலைவரின் படத்தை கொச்சைப்படுத்துகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, தங்களை மேல்சாதி என்று கருதிக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள், அறிவுலக மேதையாக விளங்கிய அம்பேத்கரை சாதீய கண்ணோட்டத்துடனே அடையாளம் காண்கின்றனர். இந்த மடமையை உடைத்தெறிய வேண்டும்.

அணி திரள்வீர்:

தொடர்புக்கு:
மகிழ்நன் : +919769137032
சிரிதர் : +919987379815
பன்னீர்செல்வம்: +919867488167
பாண்டியன் : +919821072848

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? - கவிஞர் இரா.இரவிஆலயங்களினால் தான் இன்று மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான். இந்தியா முழுவதும் இராமருக்கு 7000 கோயில்கள் இருந்தபோதும். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்தார். எனவே அங்குதான் ஆலயம் கட்டுவோம் என்று பாபர் மசூதியை இடித்ததன் விளைவாக நாடெங்கும் கலவரம் வெடித்தது. 1000-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. விலை மதிப்பற்ற மனித உயிர்கள் மடிந்தன. கோத்ரா ரயில் படுகொலை இப்படி தொடரும் வன்முறை.
பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்-களை குண்டு வைத்துக் கொன்றனர். இந்தியா-வில் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் வன்முறையை தூண்டி விடுகின்றன. ஒவ்வொரு பிள்ளையார், சதுர்த்தியின் போதும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று பொறுமையும் சகிப்புத் தன்மையையும் போதித்த கிறித்துவ ஆலயங்-களை உடைப்பது, சிதைப்பது என்ற நிலை இன்று தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. வட மாநிலங்களில் கிறித்துவர்களை அடிப்-பது, விரட்டுவது, எரிப்பது என வன்முறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
ஆலயங்களில் இருப்பவன், இலலாதவன் என்று வேறுபடுத்தும் விதமாக பணம் கட்டுபவர்களுக்கு அருகில் சிறப்பு தரிசனம், ஏழைகளுக்கு தூரத்தில் தர்ம தரிசனம் என வேறுபாடு. அது மட்டுமல்ல; பிறப்பால் பிராமணராக இருந்தால் மட்டும் கருவறை-யில் அனுமதி, அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிய போதும், பயிற்சிகள் தந்த போதும் இன்னும் நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் நூலகத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லோரும் சமம். யாரும் எங்கும் செல்லலாம்.
ஆலயங்களுக்குள் நுழைவதே பெரும் போராட்டமாக உள்ளது. பல்வேறு சோதனை-கள் செய்துதான் உள்ளே அனுப்புகின்றனர். காரணம் என்ன? இந்த நிலை ஏன் வந்தது? மதம், மனித மனங்களை நெறிப்படுத்து-வதற்குப் பதிலாக ஏன் இப்படி வெறிப்-படுத்தும் வேலையை செய்து கொண்டு இருக்கின்றது.
நூலகம் என்பது அறிவுத் திருக்கோயில், இங்கு வந்தவர்கள் IAS, IPS என்று உயர்-கின்றார்கள். மதுரை மாவட்ட மய்ய நூலகத்-தில் 2 இலட்சம் நூல்கள் இருக்கின்றன. அப்படி என்றால் 2 இலட்சம் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள். நூலகம் என்பது பெரிய சொத்து, மனிதனை, மனி-தனாக்கும், அறிஞனாக்கும், விஞ்ஞானியாக்கும் திறன் வளர்க்கும்.
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால் தான் இன்று இனவெறியோடு தமிழர்களை அழிக்கும் சிங்களத்-தினர், அன்று தமிழர்களின் இலக்-கியக் களஞ்சியமான மாபெரும் யாழ் நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன இது பொன்மொழி. ஆனால் இன்று, ஒரு ஆலயம் திறக்கப்படும்போது நூறு பேர் கொல்லப்-படுகின்றனர் என்பது புண்மொழி. ஆலயங்-கள் அன்பைப் போதிப்பதற்கு பதிலாக இன்று வம்பைப் போதிக்கின்றன.
தசாவதாரம் திரைப்படத்தில், கலைஞானி கமலஹாசன் ஒரு வசனம் பேசுவார். கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இந்த வசனம் சிறப்பாக இருந்தது என்று நான் ஒரு சமயம் கமலை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டிய போது, அவர் சொன்னார், இந்த வசனத்தைச் சொன்னது உங்கள் மதுரைக்காரரான அறிஞர் தொ. பரமசிவம் என்றார். இது வசனம் மட்டுமல்ல, நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபோது நூலகரை வரவழைத்துத்தான் கவுரவப்படுத்தினார்கள். இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக் கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல் நூல் அறிவு. ஆலயத்தில் பூஜை மட்டும் செய்து கொண்டிருந்தால் சந்திராயனை நம்மால் அனுப்பி இருக்க முடியாது.
அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவிற்கு நன்கு தெரியும். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு. அறிஞர் அண்ணா ஆலயம் செல்வ-தில்லை. ஆனால் நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் தான் அறிஞராக மாற முடிந்தது.
மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக் கொண்டிருந்தார். 10-ஆம் நூற்றாண்டு பாரசீக மன்னன் அப்துல் காசிம் இஸ்மாயில் 1,70,000 நூல்கள் வைத்து இருந்தார். அவரது படைத்தளபதிகள் படையெடுத்துச் செல்லும்போது நூல்களைத் தான் அள்ளி வருவார்களாம். அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான் படித்தார். ஜவகர்லால் நேருவிற்கு ஆலயம் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் நூல்கள் படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது.
தந்தை பெரியார் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்தும்போது கோவிலிலிருந்து எடுத்து வந்து பிள்ளையாரை உடைக்க மாட்டார். தனது சொந்தப் பணம் கொடுத்து பிள்ளை-யார் சிலை வாங்கி வரச் சொல்லி உடைத்துக் காட்டி போராட்டம் நடத்தினார். அறிவு நாணயமும், பொது ஒழுக்கமும் மிகுந்தவர் தந்தை பெரியார். ஆனால் இன்று எந்த நாத்திகனும் ஆலயத்தைச் சிதைப்-பதில்லை. ஆனால் ஆத்திகர்கள் தான், மாற்று மதத்தினர் ஒருவருக்கொருவர் ஆலயங்களைச் சிதைத்துக் கொண்டு மோதிக் கொண்டு பலியாகின்றனர். மதுரை சிறையில் 3500 கைதிகளில் அனை-வரும் ஆத்திகர்கள் தான். ஆலயம் மனதை பண்படுத்தவில்லை என்-பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.
காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின் காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது நூல் அறிவு. மாமேதை அப்துல்கலாம், அக்னிச்-சிறகுகள் எனும் தன்னம்பிக்கை விதையை பல்வேறு மொழிகளில் படைத்து விற்பனை-யில் சாதனை படைத்தது. இந்நூல் வடிக்க காரணமாக இருந்தது நூல் அறிவு. தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வீடு கட்டும் போது வரவேற்பறை, படுக்-கையறை, பூஜையறை, கழிவறை கட்டு-கின்றோம். நூலக அறை கட்டுவதில்லை. இனி ஒவ்வொரு தமிழரும் வீடு கட்டும்போது நூலக அறை கட்ட வேண்டும். பட்டிமன்ற நடுவர். அறிஞர், முனைவர் இரா. மோகன் அவர்தம் வீட்டிற்குச் சென்றவர்களுக்கு இதன் உண்மை விளங்கும். வீட்டில் நூலக அறை வேண்டும் என்கிறோம். ஆனால் நூலகத்-திற்குள் வீடு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு திரும்பிய பக்கம் அனைத்திலும் நூல்கள்தான் இருக்கும். சங்கத் தமிழ் முதல் இன்று வந்த நூல்கள் வரை அனைத்தும் இருக்கும். அதன் காரணமாகத்தான் பட்டி-மன்றங்களில் நடுவராகக் கலக்குகின்றார். 75 நூல்கள் எழுதிக் குவித்துள்ளார்.
இது கணினி யுகம், இணைய தளங்கள், மின்னணு நூலகங்கள் வந்துவிட்டன. விஞ்-ஞான உலகில் இன்று இணைய தளங்களில் புகழ் பெற்ற தேடுதளங்களான கூகுள். யாகூ. என பல்வேறு தளங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டால் அது தொடர்-பான அனைத்துத் தகவல்களும் உங்கள் விரல் நுனியில் வந்துவிடும், விழி-களுக்கும் செவிகளுக்கும் விருந்து தரும் பல தகவல்கள் களஞ்சியமாக உள்ளது. இணையம் என்பது தீ போன்றது, தீயை சமைக்கவும், வெளிச்சம் பெறவும், ஆக்க சக்தியாகப் பயன்படுத்தலாம். தீயை எரிக்கவும், கொளுத்-தவும் அழிவு சக்தியாகவும் பயன்படுத்தலாம். இணையத்தை இனி அறிவு வளர்க்கும் ஆக்க சக்தியாக மட்டும் பயன்படுத்துவோம். அறிவைத் சிதைக்கும் ஆபாச அழிவு சக்திக்குப் பயன்படுத்தாமல் இருப்போம்.
எனவே, சாலவும் நன்று எது? என்று கேட்டால் நூலகம் செல்வதே என்பது எனது கருத்து. ஆலயம் செல்வது இன்று ஆடம்-பரமாகி விட்டது. எனவே மனிதனைப் பண்-படுத்தும், நெறிப்படுத்தும் மகிழ்வூட்டும், அறிவுத்-திறன் வளர்க்கும் நூலகம் செல்வோம். நமது குழந்தைகளை நூலகம் அழைத்துச் சென்று பழக்குவோம். வாசிக்கும் பழக்கத்தை சுவாசிப்பதைப் போன்று வழக்கப்படுத்துவோம். நமது பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் திரைப்படம் மற்றும் தொல்லைக்காட்சியாகி-விட்ட தொலைக்காட்சியிலிருந்து விடுபட்டு நூலகம் செல்வோம். ஆரோக்கியமான மனித சமுதாயம் படைப்போம். ஜாதி மத மோதல்-களை விடுப்போம். பகுத்தறிவைப் பயன்படுத்து-வோம். மனிதநேயம் வளர்ப்போம். மானுடம் காப்போம். சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைப்போம்.

சமத்துவ பொங்கலோ! பொங்கல்!!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாநிலை போராட்டம்.


ஈழத்தமிழர்களுக்காக கோரிக்கைகள் ஏற்காவிடில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் அறிவித்திருக்கும் அண்ணன் திருமாவிற்கு ஆதரவாக மும்பை தாராவி பகுதியில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்.
நாள்: காவல் துறை அனுமதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்


சமத்துவ பொங்கலோ! பொங்கல்!!சிந்தனைக்கான செய்திகளை மக்கள் மனதில் ஊன்ற அமைக்கப்பட்ட கருங்கல்என்னுடைய சமூக பணிக்கு முழு விடுதலை உணர்வளித்திருக்கும் என் தாய்பகுத்தறிவு கொள்கைகளை மாணவர்களிடம் கொண்டு செல்லும் களமாக உள்ள கதிர் வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர், மாணவர்கள் மற்றும் தோழர்கள்சமூக ஆர்வலர், சீரிய பகுத்தறிவுவாதி சு.குமணராசனின் லெமூரியா இதழின் வாழ்த்து செய்திதமிழர்கள் ஓர் இனம் அதை சாதியோ, மதமோ பிரிக்க அனுமதிக்க இயலாது, பிரிந்த இனச் சகோதரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகுழுப்படம்இஸ்லாமிய தமிழ்ச்சகோதரியின் தமிழ் பொங்கல்பகுத்தறிவை வாழ்வியலாகக் கொண்ட தோழரின் இனிய பொங்கல்சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வனின் தமிழார்வ ஆதரவுள்ள உறுதுணைஅய்யா சாகுல் அமீதுவின் வாழ்த்துரைதமிழ் மூதாட்டியின் பொங்கல்


எங்கள் இயக்கத்தின் முதலாமாண்டு பொங்கல் நிகழ்வுக்கு முழு உறுதுணையாக இயக்க தலைவரின் சகோதரி


எங்களோடு விழித்திருந்து உறுதுணையாக பணிகள் சிறப்பாக அமைய ஆலோசனைகளை வழங்கிய விழித்தெழு இயக்கத்தின் ஒரு குடும்பம்
விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் சமத்துவ பொங்கல் திருவிழா மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.
மும்பை தாராவி குறுக்கு சாலைப் பகுதியில் புதிதாக இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ள விழித்தெழு இளைஞர் இயக்கம் தம் இனவுணர்வினை வெளிப்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் நிகழ்வை தமிழ் புத்தாண்டு முதல் நாளன்று சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.இதன் விபரம் மேலும் வருமாறு, தமிழர்களின் ஒற்றுமையாக இருக்கும் ஒற்றுமையின்மையை களையும் நோக்கோடும், பொங்கல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உரியது என்பதை நிறுவும் பொருட்டும் இவ்வியக்க இளைஞர்களால் சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 5:30 மணியளவிலேயே மக்கள் திரளாக கூடிவிட்டனர். ஆதி திராவிட மகாசன் சங்க தலைவர் திரு. அசோக்குமார் அவர்களும், திரு. சாகுல் அமீது அவர்களும் தொடங்கி வைக்க நிகழ்வு 6 மணிக்கு தொடங்கியது.நிகழ்வின் சிறப்பாக தமிழர்களின் ஒற்றுமையை கண்கூடாக பார்க்க முடிந்தது. சாதி, மத வேறுபாடின்றி மக்கள் மகிழ்ச்சியோடு பொங்கல் சமைக்க தொடங்கினர். இனவுணர்வாளர்களும், கதிர் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களும், திராவிடர் கழக தோழர்களும் தன்னார்வத்தோடு இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற சேர்ந்து பணியாற்றினர். ஜேபிஆர் ஸ்போர்ட்ஸ் க்ளப், சன் இளைஞர் அணி, மனித உரிமைக் கழகம், கருஞ்சிறுத்தைகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், தமிழ் லெமூரியா திங்களிதழ், திமுக ஆகியோர் இயக்கத்தை பாராட்டி விளம்பர பதாகைகள் வைத்திருந்தினர். குறுக்குசாலை மெய்யாகவே சமஎண்ணம் கொண்ட குட்டித்தமிழ்நாடு போல் காட்சியளித்தது. நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் தோழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் இயக்கத்தோழர்களின் இனவுணர்வை வெகுவாக பாராட்டினார், மேலும் இப்படிப்பட்ட தோழர்களை ஊக்குவிப்பது தம் கடமையென்றும், அதை தன் உயிருள்ளுவரை செய்யப் போவதாகவும் கூறினார்.தாராவியில் வெகுவாக அறியப்பட்ட சமூகத்தொண்டர் சந்திரசேகர் அவர்களும் தோழர்களை வியந்து பாராட்டினார். திராவிடர் கழகத்தலைவர் தோழர் கணேசன் அவர்கள் கொள்கை நழுவாது, பகுத்தறிவோடு, தமிழர்களை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பிக்கையோடு கூறினார்.திராவிடர் கழகத்தோழர்கள், பகுசன் சமாஜ் கட்சி தோழர் இராமகிருஷ்ணன், திருவள்ளுவர் நற்பணி இயக்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், தேசியவாத காங்கிரஸ் தோழர் முருகேஸ், தமிழ் ஓட்டுனர்கள் சங்கத் தலைவர் தம்பிராஜ், மும்பை தேமுதிக செயலாளர் கதிர், வழக்கறிஞர் முருகசீலன், மற்றும் சித்தார்த் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி தோழர்கள், கதிர் வகுப்பு மாணவர்கள் என பல்வேறு அமைப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வு முடிந்த பின், பலர் வெகுவாக பாராட்டினாலும், பாராட்டுதலின் மைய்யப்புள்ளி தமிழர்கள் சாதி, வேற்றுமையை கடக்க ஆவலோடு இருக்கிறார்கள், ஆனால், சமூக அமைப்புதான் கட்டுக்குள் சிறை வைத்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது.
இடுகையிட்டது மகிழ்நன்

NELLAI.D.S.SRITHAR

VEERAN MUTHUKUMARAN

விழித்தெழு இளைஞர் இயக்கம்
இது மும்பையில் இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கத்தின் நோக்கம்:- இளைஞர்களை சமூக நற்பணிகளில் ஈடுபடுத்தி சமூக அக்கறை வரவழைப்பது. வீணாக சீரழிந்து போகும் இளைஞர்களின் ஆற்றலை ஒன்றுதிரட்டி சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பை மேற்கொள்வது. மேலும், நோக்கங்களும் திட்டங்களும், செயல்பாடுகளின் ஊடாக, பதிவுகளாக வெளிப்படும், காத்திருங்கள்
மும்பையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்தும், முத்துகுமரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம்

நாள்: 8,சனவரி 2009 எம் இளைஞர் படை ஒலி-ஒளிப்படமாக காண்பிக்கப்பட்ட ஈழ அவலத்தை பார்த்து கலங்கி நிற்கும் எம் உறவுகள் குமணராசன் உரையாற்றுகிறார் ஜெயக்காண்டீபனின் ஈழ வரலாற்றை தெளிவுபடுத்தும் உரை மாறன் நாயகம் உரையாற்றுகிறார் நான் மும்பை திராவிடர் கழக தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.எஸ். அன்பழகன் உரையாற்றுகிறார் எங்கள் அமைப்பாளர் தோழர் பாண்டியன் பெரியார் பெருந்தொண்டர் வே.சித்தார்த்தனின் ஆவேச உரை திருவள்ளுவர் நற்பணி இயக்க தலைவர் ராதா கிருட்டிணன் ஐயா பால்வண்ணன் பிஜேபி தென்னிந்திய பிரிவை சார்ந்த நடேசன் அவர்கள் மாவீரன் முத்துக்குமரன் ..