Wednesday, April 8, 2009

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? - கவிஞர் இரா.இரவிஆலயங்களினால் தான் இன்று மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான். இந்தியா முழுவதும் இராமருக்கு 7000 கோயில்கள் இருந்தபோதும். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்தார். எனவே அங்குதான் ஆலயம் கட்டுவோம் என்று பாபர் மசூதியை இடித்ததன் விளைவாக நாடெங்கும் கலவரம் வெடித்தது. 1000-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. விலை மதிப்பற்ற மனித உயிர்கள் மடிந்தன. கோத்ரா ரயில் படுகொலை இப்படி தொடரும் வன்முறை.
பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்-களை குண்டு வைத்துக் கொன்றனர். இந்தியா-வில் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் வன்முறையை தூண்டி விடுகின்றன. ஒவ்வொரு பிள்ளையார், சதுர்த்தியின் போதும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று பொறுமையும் சகிப்புத் தன்மையையும் போதித்த கிறித்துவ ஆலயங்-களை உடைப்பது, சிதைப்பது என்ற நிலை இன்று தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. வட மாநிலங்களில் கிறித்துவர்களை அடிப்-பது, விரட்டுவது, எரிப்பது என வன்முறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
ஆலயங்களில் இருப்பவன், இலலாதவன் என்று வேறுபடுத்தும் விதமாக பணம் கட்டுபவர்களுக்கு அருகில் சிறப்பு தரிசனம், ஏழைகளுக்கு தூரத்தில் தர்ம தரிசனம் என வேறுபாடு. அது மட்டுமல்ல; பிறப்பால் பிராமணராக இருந்தால் மட்டும் கருவறை-யில் அனுமதி, அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிய போதும், பயிற்சிகள் தந்த போதும் இன்னும் நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் நூலகத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லோரும் சமம். யாரும் எங்கும் செல்லலாம்.
ஆலயங்களுக்குள் நுழைவதே பெரும் போராட்டமாக உள்ளது. பல்வேறு சோதனை-கள் செய்துதான் உள்ளே அனுப்புகின்றனர். காரணம் என்ன? இந்த நிலை ஏன் வந்தது? மதம், மனித மனங்களை நெறிப்படுத்து-வதற்குப் பதிலாக ஏன் இப்படி வெறிப்-படுத்தும் வேலையை செய்து கொண்டு இருக்கின்றது.
நூலகம் என்பது அறிவுத் திருக்கோயில், இங்கு வந்தவர்கள் IAS, IPS என்று உயர்-கின்றார்கள். மதுரை மாவட்ட மய்ய நூலகத்-தில் 2 இலட்சம் நூல்கள் இருக்கின்றன. அப்படி என்றால் 2 இலட்சம் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள். நூலகம் என்பது பெரிய சொத்து, மனிதனை, மனி-தனாக்கும், அறிஞனாக்கும், விஞ்ஞானியாக்கும் திறன் வளர்க்கும்.
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால் தான் இன்று இனவெறியோடு தமிழர்களை அழிக்கும் சிங்களத்-தினர், அன்று தமிழர்களின் இலக்-கியக் களஞ்சியமான மாபெரும் யாழ் நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன இது பொன்மொழி. ஆனால் இன்று, ஒரு ஆலயம் திறக்கப்படும்போது நூறு பேர் கொல்லப்-படுகின்றனர் என்பது புண்மொழி. ஆலயங்-கள் அன்பைப் போதிப்பதற்கு பதிலாக இன்று வம்பைப் போதிக்கின்றன.
தசாவதாரம் திரைப்படத்தில், கலைஞானி கமலஹாசன் ஒரு வசனம் பேசுவார். கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இந்த வசனம் சிறப்பாக இருந்தது என்று நான் ஒரு சமயம் கமலை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டிய போது, அவர் சொன்னார், இந்த வசனத்தைச் சொன்னது உங்கள் மதுரைக்காரரான அறிஞர் தொ. பரமசிவம் என்றார். இது வசனம் மட்டுமல்ல, நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபோது நூலகரை வரவழைத்துத்தான் கவுரவப்படுத்தினார்கள். இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக் கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல் நூல் அறிவு. ஆலயத்தில் பூஜை மட்டும் செய்து கொண்டிருந்தால் சந்திராயனை நம்மால் அனுப்பி இருக்க முடியாது.
அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவிற்கு நன்கு தெரியும். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு. அறிஞர் அண்ணா ஆலயம் செல்வ-தில்லை. ஆனால் நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் தான் அறிஞராக மாற முடிந்தது.
மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக் கொண்டிருந்தார். 10-ஆம் நூற்றாண்டு பாரசீக மன்னன் அப்துல் காசிம் இஸ்மாயில் 1,70,000 நூல்கள் வைத்து இருந்தார். அவரது படைத்தளபதிகள் படையெடுத்துச் செல்லும்போது நூல்களைத் தான் அள்ளி வருவார்களாம். அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான் படித்தார். ஜவகர்லால் நேருவிற்கு ஆலயம் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் நூல்கள் படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது.
தந்தை பெரியார் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்தும்போது கோவிலிலிருந்து எடுத்து வந்து பிள்ளையாரை உடைக்க மாட்டார். தனது சொந்தப் பணம் கொடுத்து பிள்ளை-யார் சிலை வாங்கி வரச் சொல்லி உடைத்துக் காட்டி போராட்டம் நடத்தினார். அறிவு நாணயமும், பொது ஒழுக்கமும் மிகுந்தவர் தந்தை பெரியார். ஆனால் இன்று எந்த நாத்திகனும் ஆலயத்தைச் சிதைப்-பதில்லை. ஆனால் ஆத்திகர்கள் தான், மாற்று மதத்தினர் ஒருவருக்கொருவர் ஆலயங்களைச் சிதைத்துக் கொண்டு மோதிக் கொண்டு பலியாகின்றனர். மதுரை சிறையில் 3500 கைதிகளில் அனை-வரும் ஆத்திகர்கள் தான். ஆலயம் மனதை பண்படுத்தவில்லை என்-பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.
காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின் காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது நூல் அறிவு. மாமேதை அப்துல்கலாம், அக்னிச்-சிறகுகள் எனும் தன்னம்பிக்கை விதையை பல்வேறு மொழிகளில் படைத்து விற்பனை-யில் சாதனை படைத்தது. இந்நூல் வடிக்க காரணமாக இருந்தது நூல் அறிவு. தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வீடு கட்டும் போது வரவேற்பறை, படுக்-கையறை, பூஜையறை, கழிவறை கட்டு-கின்றோம். நூலக அறை கட்டுவதில்லை. இனி ஒவ்வொரு தமிழரும் வீடு கட்டும்போது நூலக அறை கட்ட வேண்டும். பட்டிமன்ற நடுவர். அறிஞர், முனைவர் இரா. மோகன் அவர்தம் வீட்டிற்குச் சென்றவர்களுக்கு இதன் உண்மை விளங்கும். வீட்டில் நூலக அறை வேண்டும் என்கிறோம். ஆனால் நூலகத்-திற்குள் வீடு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு திரும்பிய பக்கம் அனைத்திலும் நூல்கள்தான் இருக்கும். சங்கத் தமிழ் முதல் இன்று வந்த நூல்கள் வரை அனைத்தும் இருக்கும். அதன் காரணமாகத்தான் பட்டி-மன்றங்களில் நடுவராகக் கலக்குகின்றார். 75 நூல்கள் எழுதிக் குவித்துள்ளார்.
இது கணினி யுகம், இணைய தளங்கள், மின்னணு நூலகங்கள் வந்துவிட்டன. விஞ்-ஞான உலகில் இன்று இணைய தளங்களில் புகழ் பெற்ற தேடுதளங்களான கூகுள். யாகூ. என பல்வேறு தளங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டால் அது தொடர்-பான அனைத்துத் தகவல்களும் உங்கள் விரல் நுனியில் வந்துவிடும், விழி-களுக்கும் செவிகளுக்கும் விருந்து தரும் பல தகவல்கள் களஞ்சியமாக உள்ளது. இணையம் என்பது தீ போன்றது, தீயை சமைக்கவும், வெளிச்சம் பெறவும், ஆக்க சக்தியாகப் பயன்படுத்தலாம். தீயை எரிக்கவும், கொளுத்-தவும் அழிவு சக்தியாகவும் பயன்படுத்தலாம். இணையத்தை இனி அறிவு வளர்க்கும் ஆக்க சக்தியாக மட்டும் பயன்படுத்துவோம். அறிவைத் சிதைக்கும் ஆபாச அழிவு சக்திக்குப் பயன்படுத்தாமல் இருப்போம்.
எனவே, சாலவும் நன்று எது? என்று கேட்டால் நூலகம் செல்வதே என்பது எனது கருத்து. ஆலயம் செல்வது இன்று ஆடம்-பரமாகி விட்டது. எனவே மனிதனைப் பண்-படுத்தும், நெறிப்படுத்தும் மகிழ்வூட்டும், அறிவுத்-திறன் வளர்க்கும் நூலகம் செல்வோம். நமது குழந்தைகளை நூலகம் அழைத்துச் சென்று பழக்குவோம். வாசிக்கும் பழக்கத்தை சுவாசிப்பதைப் போன்று வழக்கப்படுத்துவோம். நமது பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் திரைப்படம் மற்றும் தொல்லைக்காட்சியாகி-விட்ட தொலைக்காட்சியிலிருந்து விடுபட்டு நூலகம் செல்வோம். ஆரோக்கியமான மனித சமுதாயம் படைப்போம். ஜாதி மத மோதல்-களை விடுப்போம். பகுத்தறிவைப் பயன்படுத்து-வோம். மனிதநேயம் வளர்ப்போம். மானுடம் காப்போம். சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைப்போம்.

No comments:

Post a Comment