Sunday, May 29, 2011

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை-இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள்.ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்?


அவர் ஒரு நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா

அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?


செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!!


காவிரிச் சிக்கலில் கன்னடர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டபோது , தமிழர்களான பாரதிராசா , சத்தியராசு , போன்றவர்கள் நடத்திய கண்டனப் பேரணியை புறக்கணித்து , மட்டம்தட்டி, ஓரம்கட்டி, கன்னட இன வெறியன் நடிகன் அம்பரீஷ் ( இவன் கர்நாடக மாண்டியாவில் தேர்தலில் நின்றபோது பல கோடிகள் செலவு செய்தது ரசினிதான். 1991 இல் காவிரிக் கலவரம் நடைபெற்றபோது பல்லாயிரம் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கன்னட வெறியர்கள் சார்பாக நடந்துகொண்டதும் இந்த ரசினிதான் ) , அனைத்துலக அரசியல் வேசியான சுப்ரமணிய சாமி போன்றவர்களின் ஏவலின்படி தனித் தவில் வாசித்து , அந்த போராட்ட வேகத்தை மந்தபடுத்தி, அதன் கூர்மையை மழுங்கடித நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கும் , ஒண்ட வந்த நாட்டிற்கும் இரண்டகம் புரிந்த பித்தலட்டகாரன்.

உரிமையை பிரச்சனையாகி காவிரியாற்றிலே தண்ணீர் வரவேண்டுமா ? இல்லை செந்நீர் வரவேண்டுமா ? என்று பேசி , கன்னட வெறியர்களின் வன்கொலை வெறி உணர்சிகளை தூண்டிவிட்டு அதிலே குளிர்காய்ந்த கயவந்தான் இந்த ரசினிகாந்து ! வெளுத்ததெல்லாம் பாலாகாது ; என்பதை தமிழர்களே சிந்தியுங்கள் !


.


ஏன் இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்?


ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?


இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?


உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களைப்போய் பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள், முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.


அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.


எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன்... பேசினேன்... இப்படி அறிக்கைகள் பறக்கின்றன. மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள்.


ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போய் பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு(!) கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட இல்லை.


இதை பற்றி எழுதுங்கள், கவலைப்படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வெற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை எப்போது மாறும்? நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
Saturday, May 28, 2011

பொஸ்னியர்கள் முன்னெடுப்புகளை போல தமிழர்களும் பிந்தொடரவேண்டும்

ரட்கோ மிலாடிஜ் கைது: மரபணுப் பரிசோதனை நடக்கிறது கலக்க நிலையில் இலங்கை !
பொஸ்னியா- சேபியர்களுக்கு எதிராக போர் நடைபெற்றவேளை 8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் என்னும் இராணுவத் தளபதி தற்போது கைதாகியுள்ளார். 1991ம் ஆண்டு முதல், இவர் மீது இன அழிப்புக் குற்றமும், போர் குற்றங்களும் சுமத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக புலம்பெயர் பொஸ்னியர்கள் இவரைக் கைதுசெய்யவேண்டும் என அழுத்ததைக் கொடுத்து வந்தனர். மெதுவாக ஐரோப்பிய ஒன்றியமும், பின்னர் ஏனைய நாடுகளும் செபனீசியாவில் இளைக்கப்பட்ட கொடுமைகளை ஏற்றுக்கொண்டது. பல நாடுகளில் கடந்த 20 வருடமாக இவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்கா தனது புலனாய்வைப் பயன்படுத்தி இவரைத் தேடிவந்தது. ஆனாலும் இவர் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.


ஒரு நகரத்தையே தனது படைகளைக் கொண்டு சூழ்ந்து, அதனை 44 மாதங்களாக சுற்றிவளைத்து, குடி நீர், மின்சாரம், உணவு என்பனவற்றைத் தடைசெய்து, அன் நகரம் மீது ஷெல் தாக்குதலையும் மேற்கொண்டார் ரட்கோ மிலாடிஜ். செபனீட்சியா என்னும் இடத்தில் சுமார் 8,000 பொஸ்னியர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் அதனை உதாரணம் காட்டியே இலங்கைப் பிரச்சனையும் சனல் 4 தொலைக்காட்சியில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


இந் நிலையில் இன்று சேபியாவில் அருகே உள்ள கிராமம் ஒன்றில், இவரை சேபியப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக இலங்கை கலக்கத்தில் உள்ளது. காரணம் என்னவெண்றால், ரட்கோ மிலாடிஜை சர்வதேசம் தூற்றி வந்தாலும், அவர் கைதுசெய்யப்படமாட்டார் என இலங்கை உட்பட பல நாடுகள் எண்ணி வந்தது. ஆனால் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ரட்கோ மிலாடிஜ் மீது மரபணுப்பரிசோதனை நடத்தப்படுவதாவும், உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர் நேரடியாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளார் என்றும் பி.பி.சி செய்திச் சேவையூடாக அதிர்வு இணையம் அறிகிறது.


பொஸ்னியர்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சுமார் 20 ஆண்டுகள் கழித்தே நீதி கிடைத்திருக்கிறது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன அழிப்பு நடைபெற்று 20 ஆண்டுகள் ஆணாலும் தமது முன்னெடுப்புகளை இவர்கள் ஒருபோது கைவிட்டதில்லை. அதனை தமிழர்களும் பிந்தொடரவேண்டும். இலங்கையில் பாரிய இன அழிப்பு ஒன்று நடைபெற்று 2 வருடங்களே பூர்த்தியாகியுள்ள நிலையில், பலரும் சோர்ந்துபோய் உள்ளனர். தமிழர்கள் அனைவரும் இதனைப் பார்த்து கற்றுகொள்ளவேண்டியது நிறையவே உள்ளது எனலாம் ! 8000 பேரைக் கொண்றது ஒரு இன அழிப்பாகப் பார்க்கப்படும் இடத்தில் 40,000 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு நோக்கப்படவேண்டும், இல்லையேல் எவ்வாறான அழுத்ததை புலம்பெயர் தமிழர்கள் பிரயோகிக்கவேண்டும் தமிழ் அமைப்புகள் தீர்மானிப்பது நல்லது.

Sunday, May 1, 2011

ஐ.நா வில் இலங்கை

சுதந்திரம் பெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர்,1955 டிசம்பால் இலங்கை ஐ.நா வில் சேர விழைந்தது, அதில் அனுமதியூம் பெற்றது. அது முதல், அது சர்வதேச சமூகத்தின் செயலூக்கமுள்ள உறுப்பு நாடாக விளங்கி வருகிறது. இந்த உறவினால்தான் உலக அமைப்பில் தனது அங்கத்துவம் மூலம் நாடு பயனடைந்துள்ளது. இந்த உலக அமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பின் நெறிமுறைகளுக்கும் தரங்களுக்கும் இலங்கை பங்களிப்பைச் செய்திருக்கின்றது.

இந்தக் காலங்களில் பின்வரும் ஐ.நா. உறுப்புக்களில் இலங்கை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றது:UN GlobalReform at United NationsUN NewsUN Secretary Generalபொதுச் சபைஇலங்கை எல்லா பொதுச் சபைக் கூட்டங்களிலும் சமூகமளித்தது. 1976 பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தியது: 1978 படைக்குறைப்புக் கூட்டத் தொடருக்கான யோசனையை முன்வைத்தது. பொதுச் சபையே விவாதத்துக்கான ஐ.நா வின் பிரதான அரங்கு. எல்லா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கும் ஒரேயொரு ஐ.நா. உறுப்பு இது மாத்திரமே. ஓவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. சர்வதேசப் பாதுகாப்பு முதல் ஐ.நா வரவு-செலவுத் திட்டம் வரையில் ஐ.நா சாசனத்தில் உள்ள எந்த விடயம் பற்றியும் உறுப்பினர்கள் கலந்துரையாட முடியும். பொதுச் சபை அதன் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் பாரிந்துரைகளைச் செய்ய முடியும். ஆனால், இவற்றின் மீது செயல்படுவதற்கு நாடுகளை நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. பொதுச் சபை, வருடத்தின் செப்டெம்பர் நடுப்பகுதியில் இருந்து மூன்று மாதங்களுக்குக் கூடும்இ விசேட அவசரக் கூட்டத் தொடர்களையும் நடத்தும். அதன் வருடாந்தக் கூட்டத்தொடர் “பொது விவாதத்துடன்” ஆரம்பமாகின்றது. ,தில் ஒவ்வொரு அங்கத்துவ நாடும் உலக நிகழ்வுகளின் வாய்ப்பு பற்றிய அறிக்கையை விடுக்கும்.

பாதுகாப்புச் சபைஇலங்கை 1960க்கும் 1965க்கும் இடையே நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்தது. உலகளாவிய சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் கடமை பாதுகாப்புச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளைக் கொண்டது. அவை சீனா, பிரான்ஸ், ரஸ்யா, பிர்ட்டன், ஐக்கிய அமரிக்கா ஆகும். ஏனைய பத்து நாடுகள் சுழற்சி அடிப்படையில் தற்காலிக அங்கத்துவத்தைப் பெறுகின்றன. பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும், மோதல்களில் படைபலப் பிரயோகத்தை அங்கீகாரிக்க முடியும். அது அமைதி காக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்கின்றது.

செயலகம்ஜயந்த தனபால செயலாளர்-நாயகம் பதவிக்காக இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு அபேட்சகராக இருந்தா.அநேக இலங்கையர்கள் செயலகத்திற்காகப் பணியாற்றியூள்ளன. செயலகம், ஐ.நா வின் தினசார பணிகளை மேற்கொள்கின்றது, ஸ்தாபனத்தின் வேலைத் திட்டங்களையூம் கொள்கைகளையூம் நிர்வகிக்கின்றது, 170 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7,500 செயலக உத்தியோகத்தர்கள் செயலகத்துக்காகப் பணியாற்றுகின்றன.

பொருளாதார-சமூக மன்றமஇந்த மன்றம் ஐ.நா வின் பொருளாதார, சமூக, மனிதநேய, கலாச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அது மனித உரிமைகள், சமூக அபிவிருத்தி, தொழிநுட்பம், மருந்துப்பொருட்கள் மற்றும் பிற பிரச்சினைகளைக் கையாளும் ஆணைக்குழுக்களது பணிகளை மேற்பாHவை செய்கின்றது. அதன் உறுப்பினர்கள் 54 பேரும் பொதுச் சபையினால் தொவூ செய்யப்படுகின்றனர்.

சர்வதேச நீதிமன்றமஇந்த நீதிமன்றம் ஐ.நாவின் பிரதான சட்ட உறுப்பு: நாடுகள் அதனிடம் சமர்ப்பிக்கும் சட்டப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் கடமையைப் பெற்றிருக்கி;னறது. நெதHலாந்திலுள்ள த ஹேகில் அது செயல்படுகின்றது. நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளும் பொதுச் சபையினாலும் பாதுகாப்புச் சபையினாலும் தொவூ செய்யப்படுகின்றனர்.

அமைதி காத்தலஇலங்கை ஐ.நாவூக்குத் துருப்புக்களைப் பங்களிப்பு செய்யூம் 16வது மிகப் பொய நாடு. ஹயிற்றி, கோட் டி ஐவோயர், சூடான், மேற்கு சகாரா, மொசாம்பிக், திமோர் லெஸ்தே, லைபீரியா ஆகியவற்றில் 1000 இலங்கை ஐ.நா துருப்புக்கள் பணியாற்றி இருக்கின்றன.ஐக்கிய நாடுகள் அமைதி காத்தல் செயற்பாடு மோதலினால் பிளவூண்டுள்ள நாடுகளுக்கு உதவூம் தனித்துவமான, இயக்காற்றல்மிக்க கருவியாகும். நீடித்த சமாதானத்துக்கான நிலைமைகளை அது உருவாக்குகின்றது. பாதுகாப்புச் சபை ஐ.நா அமைதி காத்தல் நடவடிக்கைகளை உருவாக்குகின்றது. அவற்றின் வாய்ப்பு, ஆணை ஆகியவற்றை வரையறுக்கின்றது, 1948ம் ஆண்டு முதலாவது அமைதி காக்கும் பணி நிறுவப்பட்டது. அது முதல் உலகம் முழுவதிலும் மொத்தம் 63 அமைதி காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓப்பந்தங்கள் (உடன்படிக்கைகள்)இலங்கை முக்கியமான ஐ.நா உடன்படிக்கைகள் பெரும்பாலானவற்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது (இலங்கை அங்கீகாpத்துள்ள உடன்படிக்கைகள் இங்கு தரப்பட்டுள்ளன).

இனப் பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1982 மார்ச் 20 முதல் நடைமுறையில் உள்ளது)

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (1998 ஜனவரி 03 முதல் நடைமுறையில் உள்ளது)

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1981 நவம்பர் 4 முதல் நடைமுறையில் உள்ளது).

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2003 ஜனவரி 15 முதல் நடைமுறையில் உள்ளது).

சித்திரவதை, மற்றும் பிற குரூர, மனிதாபிமானமற்ற வகையில் அல்லது தரக் குறைவாக நடத்துதல் அல்லது தண்டித்தலுக்கு எதிரான உடன்படிக்கை (1994 பெப்ருவரி 02 முதல் நடைமுறையில் உள்ளது).

சிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (1991 ஆகஸ்ட் 11 முதல் நடைமுறையில் உள்ளது).

ஆயூத மோதல்களில் குழந்தைகளை ஈடுபடச் செய்வது சம்பந்தமான சிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2002 பெப்ருவாரி 12 முதல் நடைமுறையில உள்ளது)

குழந்தைகளின் உரிமைகள் பற்றியூம் குழந்தைகளை விற்பனை செய்தல், குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவூ, சிறார் ஆபாசப்படவியல் பற்றியூமான உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (22 அக்டோபர் 2006).

வெளிநாடுகளில் தொழிலாளர்களாக இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (2003 ஜூலை 1 முதல் நடைமுறையில் உள்ளது).

ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (30 மார்ச் 2007ல் கைச்சாத்திடப்பட்டது.தீர்மானம்இந்து மாகடலைச் சமாதான மண்டலமாக்குவது பற்றி 1971ம் ஆண்டு இலங்கை முன்வைத்த யோசனை அங்கீகாரி க்கப்பட்டது. அதுபோலவேஇ வீடற்றவர் களுக்கான சர் வதேசக் குடியிருப்பு ஆண்டாக 1987ம் ஆண்டின் பிரகடனம், விசாகத்தை ஐ.நா விடுமுறை தினமாக 1999ம் ஆண்டு அங்கீகாரிக்கப்பட்டமை ஆகியனவூம் இலங்கை முன்வைத்த யோசகைகளாகும்.ஐ.நா உறுப்பு அமைப்பு ஒன்றினால் ஏற்கப்பட்ட முறையான வாசகமே ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாகும். எந்தவொரு ஐ.நா. உறுப்பு அமைப்பும் தீர்மானங்களை விடுக்க முடியூம் என்றாலும் நடைமுறையில் பெரும்பாலான தீர்மானங்கள் பாதுகாப்புச் சபை அல்லது பொதுச் சபையினால் விடுக்கப்படுகின்றன. பொதுச் சபையின் தீர்மானம் ஒன்றுக்குப் பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் சபையின் எல்லா அங்கத்துவ நாடுகளும் வாக்களிக்கின்றன. இதனை நிறைவேற்றுவதற்குச் சாதாரணப் பெரும்பான்மை போதுமானது (ஆனால், விதிவிலக்காக முக்கியமான பிரச்சினைகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம்).

செயலாளர் நாயகம்ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்குச் செயலாளர் நாயகம் தலைமை தாங்குகிறார். இது ஐக்கிய நாடுகள் சபையின் தலையாய உறுப்புக்களில் ஒன்றாகும். செயலாளர் நாயகம் உண்மையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராகவூம் அதன் தலைவராகவூம் விளங்குகின்றார். தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூன். இவர் தென் கொர்ரியாவின் முன்னாள் வெளியூறவூ அமைச்சர். அவர் 2007 ஜனவாரி முதலாம் திகதி பதவியேற்றார். அவரது முதலாவது பதவிக் காலம் 2011 டிசம்பர் 31ம் திகதி முடிவடைகிறது, அவர் மீண்டும் அப் பதவிக்கு நியமிக்கப்படும் தகுதி உள்ளவர். “இயக்காற்றலும் துணிவூம்” நிரம்பியதாக இருக்கக்கூடிய ஐ.நாவில. நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட விழையூம் ஒரு “பாலம் அமைப்பவராக” தாம் இருக்கப் போவதாய் அவர் கூறுகிறார். மத்தியக் கிழக்கு, சூடான், வட கொரியா ஆகியனவே தமது முன்னுரிமைகளாக அவர் இனங் கண்டுள்ளார்.

முகவர் நிறுவனங்களும் வேலைத்திட்டங்களுமஅநேகமான இலங்கை ஊழியர்கள் முகவர் நிறுவனங்களிலும் ஆட்சி மன்றங்களிலும் பணிபுரிகின்றனர்.

ஏனைய உறுப்புக்கள்இலங்கை பொருளாதார, சமூக மன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளது. சுகாதாரப் பராமாரிப்பு, போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக விளங்குகின்றார்.

ஐ.நாவில் புகழ்பூத்த இலங்கையர்கள்காமினி கொரியா அங்டாட்டின் செயலாளர் நாயகமாக இருந்தார்.

ஜயந்த தனபால யூனிடிர்மற்றும் படைக்குறைப்பு விவகாரங்களில் ஆகவூம் மூத்தப் பதவிகளை வகித்தார்.

சி.வீரமந்திரி சர்வதேச நீதிமன்றத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

ராதிகா குமாரஸ்வாமி குழற்தைகள் மற்றும் மோதலுக்கான துணைச் செயலாளராக இருக்கின்றார்.

பாலித கொஹொன ஐ.நாவின் உடன்படிக்கைப் பிரிவூக்குத் தலைவர்.
Monday, April 25, 2011

நிஜங்களின் அம்பலம்: சாய்பாபா ரகசியம்?

நிஜங்களின் அம்பலம்: சாய்பாபா ரகசியம்? - பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சி (வீடியோ இணைப்பு)
 http://manithan.com/index.php?subaction=showfull&id=1303631988&archive=&start_from=&ucat=1&

24 Apr 2011

இந்தியாவின் மிகப் பிரபல சாமியார் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை சூழ்ந்துள்ள பாலியல் சர்ச்சைகள் குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சியின் வடிவம்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பெற்றவர் ஸ்ரீ சத்ய சாயிபாபா.
இந்த பக்தர்களுக்கு இவர் மண்ணில் மனித உருவில் வாழும் கடவுள். ஆனால் பிபிசி நடத்திய ஒரு புலனாய்வு சாய்பாபாவுக்கு கருநிழல் படிந்த ஒரு மறுபக்கம் இருப்பதாக தெரிவிக்கிறது.?

24 Apr 2011102056 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது

Saturday, April 16, 2011

தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்-பிரபாகரன்


பிரபாகரன்:

விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!"ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.""பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!""ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.

Tuesday, March 15, 2011

காங்கிரசை ஏன் தோற்கடிக்க வேண்டும்?

தோழர்களே,
ஒன்றிணைவோம்,
இந்த கொலைகார கையை  கருவறுப்போம், 

ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1. திருத்தணி
2. பூந்தமல்லி (தனி)
3. ஆவடி
4. திரு.வி.க.நகர் (தனி)
5. ராயபுரம்
6. அண்ணாநகர்
7. தி.நகர்
8. மயிலாப்பூர்
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11. மதுராந்தகம் (தனி)
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஓசூர்
17. செங்கம் (தனி)
18. கலசப்பாக்கம்
19. செய்யாறு
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு மேற்கு
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. ஊட்டி
28. அவினாசி (தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. வேடசந்தூர்
32. சிங்காநல்லூர்
33. வால்பாறை (தனி)
34. நிலக்கோட்டை(தனி)
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. விருத்தாசலம்
40. மயிலாடுதுறை
41. திருத்துறைபூண்டி (தனி)
42. பாபநாசம்
43. பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறங்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி (தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திக்குளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57. வாசுதேவநல்லூர் (தனி)
58. கடையநல்லூர்
59. நாங்குநேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்.காங்கிரசை ஏன் தோற்கடிக்க வேண்டும்?', கண்டிப்பாக யாருக்கும்தெரிந்திருக்காமல் இருக்காது.. மன்னிக்கவும், உணர்வுள்ள அனைத்துதமிழர்களுக்கும் தெரிந்திருக்கும், அறிவால் உறங்கி கொண்டிருக்கிறமடத்தமிழனுக்கு தெரிந்திருக்காது புரிந்திருக்காது..  ஆனால் என்ன செய்வதுஉணர்வற்ற தமிழனை விட உறங்குகிற அடிமைத்தமிழன் நாட்டில் அதிகம் தானே...!காங்கிரஸ் என்றால் என்ன? அது உருவானது எப்படி? (1885 - 2011 ஒரு சிறுதொகுப்பு)சுதந்திர போராட்ட்டத்தின் போது விடுதலைக்காக ஒரு இயக்கமாகஆரம்பிக்கப்பட்டது தான் 'காங்கிரஸ்'.. ஆனால் 'காங்கிரஸ்' என்பது சுயமாகசுயசிந்தனையற்ற காந்தியாலோ அல்லது நேருவாலோ ஆரம்பிக்கப்பட்டது அல்ல..'காங்கிரஸ்' என்பது அமெரிக்க சட்டமன்றத்தை குறிக்கும்.. அதன் அர்த்தம்'இருகட்சி ஆட்சி முறை' என்பதாகும்.. அச்சட்ட மன்றம் மேலவை, கீழவை என்றஇரு அவைகளை கொண்டது, இந்த இருகட்சி ஆட்சி முறையை பின்பற்றும்நாடுகளைத்தான் 'குடியரசு' நாடு என்பார்கள்.. 'குடியரசு' கொள்கையின்படிஆட்சிகளை எப்படி அமைப்பது என்றுதான் இதுவரை விவாதிக்கப்பட்டுவந்திருக்கிறதே தவிர மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை எப்படிதீர்க்கலாம் என விவாதிக்க பட்டது சரித்திரத்தில் இல்லை... தற்போதுஅமெரிக்காவில் 112 வது காங்கிரஸ் சட்டமன்ற தொடர் நடைபெற்று வருகிறது...உலக அளவை பொறுத்தவரை இருவகையான நாடுகளை காணலாம்1 .முதலாளித்துவம் (ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம், தனிவுடமை)2 .கம்யுனிசம் (மார்க்ஸிசம், சோசியலிசம், பொதுவுடைமை, தேசியவுடமை)அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய வல்லரசு நாடுகளில்அப்போதிலிருந்தே முதாளித்துவம் வேர் விட்டு வளர தொடங்கியது,முதலாளித்துவத்தின் அர்த்தம் "மக்களை முட்டாள்களாகவும் அடிமைகளாகவும்ஆக்கி பணக்காரர்களுக்காக பணக்காரர்களே ஆட்சி செய்யும் முறை" ஆகும்..இந்நாடுகளின் முக்கிய குறிக்கோள் ஏதேனும் இரு நாடுகளுக்கிடையில்பிரச்சினைகளை மூட்டிவிட்டு, அந்த பிரச்சினையை பிரிப்பது போல் வந்து அந்தஇடத்தை தனதாக்கி கொண்டு அந்நாடு மக்களை அடிமையாக்கி உரிமையை பறித்துமுட்டாள்தனத்தை ஊட்டி, அந்நாட்டு செல்வங்களை கொள்ளை அடிப்பதே ஆகும்...இப்படிப்பட்ட சூழலில்தான் 1885 ஆம் ஆண்டு உமேஷ் சந்திரா பானர்ஜி,சுரேந்திர பானர்கி, ஆலன் ஆக்க்டேவியன் குமே, வில்லியம் வேட்டர்புர்ன்,தாதாபாய் நௌரோஜி மற்றும் தின்சா வாட்சா ஆகியோரால் 'காங்கிரஸ்' எனும்இயக்கம் இந்தியாவில் தொடங்கப்பட்டது, இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜிதேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.முதல் கூட்டம் பம்பாயில் நடைபெற்றது...காங்கிரஸ் முதலில் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை.. முதலாளித்துவ நாடானஇங்கிலாந்து தனது பழக்கதோசத்தில் இந்தியாவையும் இலங்கையையும்  1900 -களில் ஆக்கிரமிக்க தொடங்கியது.. அப்போது இருந்த செல்வங்களையும் சுரண்டஆரம்பித்தது ஏகாதிபத்தியத்தியத்தை அறிவாளியாக்கி மக்களிடையே புகுத்தநினைத்தது... அப்போது சாதாரண இயக்கமாக இருந்த 'காங்கிரஸ்' இச்சூழ்நிலையைபயன்படுத்தி வெள்ளையர்களை வெளியேற்ற தொடங்கியது.. அப்போது இருந்த ஒரே ஒருஇயக்கம் காங்கிரஸ் மட்டும்தான்... அப்போது வெள்ளைக்காரன் இந்தியாவில்அறிமுகபடுத்திய ஒரு முறைதான் 'வரி'.. அதுதான் எளிமையாக வாழ்ந்தார்கள் எனகூறப்படும் பணக்காரர்கள் காந்திக்கும், நேருவுக்கும் பீதியைகிளப்பியது... (ஆனால் இன்றைய கல்விமுறையில் அவர்கள் தென்னாப்பிர்க்காவில்ஏற்பட்ட இனவெறிதான் அதற்க்கு காரணம் என கூறப்படுகிறது)..1915 -களுக்கு மேல் இந்தியாவின் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது..அப்போது தனது உரிமை 'வரி' என்ற பெயரில்  பறிபோகிறது என உணர்ந்த உணர்வாளன்காந்தி 1920 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராகதேர்ந்தெடுக்கபட்டார்.. அவர்களது முழுநோக்கமும் வெள்ளையர்களை விரட்டவேண்டும் என இருந்தாலும், சுதந்திரம் அடைந்ததற்கு காங்கிரஸ் என்பது ஒருதுளி கூட காரணம் இல்லை என்பதுதான் உண்மை..காங்கிரசின் கொள்கை என்னவென்றால் "முதலாளித்துவத்தை எதிர்க்கமுதலாளித்துவத்தை கையில் எடுப்போம்" என்பதுதான்... இப்படி முதலில்இருந்தே முட்டாளாக விளங்கியது காங்கிரஸ் கட்சிதான்.. அரிசியை உற்பத்திசெய்தவனை தெரியாது ஆனால் அதனை வைத்து வியாபாரம் செய்யதவனை தெரியும்என்பதுதான் தற்போதைய இந்திய மக்களின் தேச உணர்வு..ஆம், மேற்கூறியபடி சுதந்திரம் பெற காங்கிரஸ் ஒரு துளி கூட காரணம் இல்லை..அதற்க்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இயங்கிய படைகளும்,இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடியும் தான் காரணம்... நேதாஜிகாங்கிரசையும் முதலாளித்துவத்தையும் கடுமையாக எதிர்த்தவர்..காங்கிரசுக்கு எதிராக 'பார்வார்டு பிளாக்' என்ற இயக்கத்தை தொடங்கினார்..ஆனால் பலனை எதிபார்க்காத அக்கட்சி சுதந்திர போராட்டத்தில்முழுக்கவனத்துடன் ஈடுபட்டதால் அக்கட்சியை விளம்பரம் செய்து பெரிதாக்கஇயலவில்லை... ஆனால் முதலாளித்துவம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல்மற்றவர்களின் உழைப்பை இவர்கள் (காங்கிரஸ்) பயன்படுத்தி விளம்பரம் செய்துதன்னை ஒரு பெரிய கட்சியாக உருவெடுத்து கொண்டார்கள்"முதலாளித்துவம் இருந்தால் நாட்டில் ஏழைகள் முன்னேற முடியாது, நாடுசுடுகாடாகிவிடும், முதலாளித்துவம்தான்  முக்கியமென்றால் காங்கிரஸ்வெள்ளையர்களை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை " - நேதாஜி"எனது நாட்டின் முதலாளிகள் இரக்க மனம் உடையவர்கள், ஆகையால் ஏழைகளுக்குஎந்த பிரச்சினையும் வராது" - காந்திநேதாஜி உட்பட அவரது வழியில் விடுதலைக்காக போராடியவர்கள் துணிந்து உயிரைவிட்டதாலும் , அவரது வழியில் வந்த ஆட்கள் பலம் குறைந்தது... விடுதலைஅடைந்த நேரத்தில் வெண்ணைக்காக காத்திருந்த குரங்கைப்போல் காங்கிரஸ் பதவிஏற்று கொண்டது... சட்டமேதை என போற்றப்படும் அம்பேத்காரும் காங்கிரஸ்ஆதரவாளர் என்பது கசப்பான செய்தியே.. ஆனால் 'இந்திய அரசியலமைப்பு சட்டம்'இயற்றப்பட்டது அம்பேத்காரால் அல்ல.. இயற்றப்பட்டது காங்கிரஸ் கட்சியைசேர்ந்த பார்ப்பனர்களால்.. அதனை தொகுத்த்வர்தான் அம்பேத்கார் (சட்டம்அனைவராலும் இயற்றப்பட்டது என அனைவருக்கும் கணக்கு காட்ட காங்கிரஸ் போட்டதிட்டம் இது)இப்படி சுதந்திரம் அடைந்த உடனே அரசியல் என்ற நன்னீரை சாக்கடை என பெயர்மாற்றம் செய்ய விளங்கிய அடிப்படை கட்சியும் காங்கிரஸ்தான்.."எனக்கு முழு சுதந்திரம் இருந்தால், இந்த இந்திய அரசியலமைப்பு சாசனத்தினைதீயிட்டு கொழுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்" - அம்பேத்கர் (1950 ஆம்ஆண்டு சனவரி 26 ஆம் நாள், இந்திய பாராளுமன்றத்தில்)அப்போது நேரு மக்களாட்சி என்று ஆரம்பித்து வைத்த மன்னர் ஆட்சியைத்தான்இன்றும் காங்கிரஸ் செய்கிறது.. அக்கட்ச்சிக்காகவும் மக்களுக்காகவும்உழைத்த காமராஜர் மறைய காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம் என்பது மறக்கமுடியாத உண்மை.. சுதந்திரத்திற்கு பிறகும் தமிழகத்தில் காங்கிரஸ் 1967வரை ஆட்சி செய்தது..அப்போது தமிழகத்தில் காங்கிரசையும், அதன் பொறுப்பாளர் ராஜாஜியையும்பெரியார் கடுமையாக எதிர்த்து விமர்சித்தார்.."காங்கிரசை ஆதரிப்பவர்களும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் ஓரினத்தைசேர்ந்தவர்கள்தான், அவர்களை ஆதரிப்பவர்கள் தன்னுரிமை தெரியாதசுயசிந்தனையற்ற முட்டாளாகவோ அல்லது சுயநலமிக்க பணக்காரனாகவோஇருப்பார்கள்" -  பெரியார்சுயசிந்தனையும் பகுத்தறிவில் ஒன்றாக கருதிய பெரியார் "திராவிட கழகம்"என்ற இயக்கத்தை உருவாக்கினார்.. அவ்வியக்கம் கம்ம்யுனிசத்தை ஆதரித்ததால்காங்கிரசுக்கு எதிரியாக விளங்கியது.. திராவிட கழகம் ஒரு அரசியல் இயக்கமாகஇருக்காது, அது ஒரு சீர்திருத்த இயக்கமாகத்தான் இருக்கும் என பெரியார்அறிவித்தார்... ஒரு நல்ல விசயத்தில் சிலர் ஆதாயம் தேடி தன்னை உயர்த்திகாட்டி கொள்வது போல்... திராவிட கழகத்தில் ஆதரவோடு "திராவிட முன்னேற்றகழகம்" என்ற அரசியல் கட்சி உதயமானது.. இது முழுக்க முழுக்க திராவிடகழகத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டது..."தன்மானம், சுயமரியாதை ஆகியவை எங்களது முக்கிய கொள்கைகள், செத்தாலும்நானோ அல்லது எங்களது கட்சியோ காங்கிரசை ஆதரிக்காது" - அண்ணாஇன்றைய நிலை?  1. "போபர்ஸ் பீரங்கி ஊழல்" என முதல் மெகா ஊழலை தொடங்கி வைத்தும்காங்கிரஸ் கட்சிதான்...  2.  நல்லாட்சி செய்கிறோம் என்ற பெயரில் தன்நாட்டு மக்களை கொன்றுகுவித்து தாலாட்டுவதும் இக்கட்ச்சிதான்...  3. இந்தியாவிலும் அனைத்து விலைகளையும் ஏற்றி காரணம் கட்டுவதில்சிறந்ததும் இக்கட்சிதான்..  4. ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்கிறதுஎனதெரிந்தும் அவர்களை விரட்டாமல் அப்பாவி மக்களை கோலும் வீரமிக்ககட்சிதான் காங்கிரஸ் கட்சி...  5. சுவிஸ் வங்கியில் அதிகமாக கணக்கு வைத்திருக்கும் கட்சியும்இக்கட்சிதான்...  6. மன்னர் ஆட்சி என்ற அர்த்தத்தை புரிய வைத்த கட்சியும் இதுதான்..  7. முட்டாள்களை அமைச்சர்களாகவும் தொண்டர்களாகவும் கொண்டு மக்களைமுட்டாள் ஆக்குவதும் இக்கட்சிதான்  8. எதிரிகளுக்கு மட்டும் "சட்டம் தனது கடமையை" செய்கிறது என சொல்வதுகாங்கிரஸ் கட்சி  9. ஏழைகளை உருவாக்குவதில் முன்னோடியாக இருக்கிறதுஆனால் இக்கட்சிக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை இன்றைய தி.மு.கஇக்கட்சியின் சிந்தனையற்ற தொண்டர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மைசம்பவத்தை சொல்லலாம், பிரியங்கா காந்திக்கு குழந்தை பிறந்த போது, "அடுத்தபிரதம மந்திரி பிறந்து விட்டார்" என இனிப்பு கொடுத்து கொண்டாடியவர்கள்காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்... சரி இவர்கள் இப்படி என்றால்சுயசிந்தனையையும் தன்மானத்தை பற்றியும் பேசும் தி.மு.க தொண்டர்கள் இதுபோன்ற சம்பவங்களில் "வாழ்க.. ஒழிக" கோசத்தை போட்டு காங்கிரசுக்கு ஒருபடிமேல் உள்ளது"ஆண்ட இனம் எப்படியடா அடிமையானது...? தன்மானத்தை இழந்தது?"வரலாற்றுக்குள்ளே தேடு.அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.

Friday, January 21, 2011

நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதா ? வரவேற்கத்தக்கதா ?......

வணக்கம் தோழர், மும்பையில் சன் டிவியின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன் , தலைப்பு : நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதா ? வரவேற்கத்தக்கதா ?......
முக்கியமாக, இந்த தேர்வு கண்துடைப்பு என்பது தெரியும் ..... அதில் பதிவு பண்ணவே சென்றேன் ....
நான் எடுத்து கொண்ட தலைப்பு நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதே !!
முதல் சுற்றில் அம்பேத்கர் பனியன் அணித்து நான் பேசியது ..

நாகரிக சமூகம் என்றும், அறிவியல் முன்னேற்றம் என்றும், வல்லரசு என்று மார்தட்டினாலும், இந்தியச் சமூகம் இன்றும் இந்துத்துவ அடிப்படையில் மனிதர்களை நடத்துகின்றது என்பதையும், அரசுகளும் அதன்படிதான் செயல்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்தவைகள்தான். இப்படியான ஒன்றுதான் மனித மலத்தை மனிதர்களையே கையால் அள்ளளும் கொடுமை. இந்த இழிதொழில்களிலும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையே ஈடுபடுத்தும் வன்கொடுமையும் நிகழ்கின்றது...
நாகரிக சமூகம் என்றும், அறிவியல் முன்னேற்றம் என்றும், வல்லரசு என்று மார்தட்டினாலும், இந்தியச் சமூகம் இன்றும் இந்துத்துவ அடிப்படையில் மனிதர்களை நடத்துகின்றது என்பதையும், அரசுகளும் அதன்படிதான் செயல்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்தவைகள்தான். இப்படியான ஒன்றுதான் மனித மலத்தை மனிதர்களையே கையால் அள்ளளும் கொடுமை. இந்த இழிதொழில்களிலும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையே ஈடுபடுத்தும் வன்கொடுமையும் நிகழ்கின்றது.
நூற்றாண்டுகள் கடந்தாலும் கழியாத கலையாத சாதிவெறி.. ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசினேன். இரண்டாம் சுற்றுக்கும் தேர்வானேன் ..... மேலே குறிப்பிட வற்றை பேச கூடாது என நிபந்தனையுடன்.....மேலும் அம்பேத்கர் பனியன் அணித்து வரகூடாது என நிபந்தனையுடன் .....இரண்டாம் சுற்றில் பேசிய நாகரிக வளர்ச்சி வரவேற்கத்தக்கதே அணி சார்ந்தவர்கள் ..... நகரத்தின்
மெட்ரோ வளர்ச்சி , கட்டிடம் வளர்ச்சி என பேசி கொண்டே போனார்கள் ...
இதே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ....நகரத்தின்
மெட்ரோ வளர்ச்சி , கட்டிடம் வளர்ச்சி என் சொல்லி கொண்டு வீட்டு வசதி திட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். ஆனால் நகர்ப்புற ஏழை மக்களுக்கும், குடிசையில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தில் அனுமதிக்கப்படாது..... என பேசிய கொண்டே போனேன் ......நான் முன்றாம் சுற்றிலிருந்து நிக்கபட்டேன் .....

உங்கள் பார்வையில் நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதா ? வரவேற்கத்தக்கதா ?......