Tuesday, March 15, 2011

காங்கிரசை ஏன் தோற்கடிக்க வேண்டும்?

தோழர்களே,
ஒன்றிணைவோம்,
இந்த கொலைகார கையை  கருவறுப்போம், 

ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1. திருத்தணி
2. பூந்தமல்லி (தனி)
3. ஆவடி
4. திரு.வி.க.நகர் (தனி)
5. ராயபுரம்
6. அண்ணாநகர்
7. தி.நகர்
8. மயிலாப்பூர்
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11. மதுராந்தகம் (தனி)
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஓசூர்
17. செங்கம் (தனி)
18. கலசப்பாக்கம்
19. செய்யாறு
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு மேற்கு
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. ஊட்டி
28. அவினாசி (தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. வேடசந்தூர்
32. சிங்காநல்லூர்
33. வால்பாறை (தனி)
34. நிலக்கோட்டை(தனி)
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. விருத்தாசலம்
40. மயிலாடுதுறை
41. திருத்துறைபூண்டி (தனி)
42. பாபநாசம்
43. பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறங்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி (தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திக்குளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57. வாசுதேவநல்லூர் (தனி)
58. கடையநல்லூர்
59. நாங்குநேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்.காங்கிரசை ஏன் தோற்கடிக்க வேண்டும்?', கண்டிப்பாக யாருக்கும்தெரிந்திருக்காமல் இருக்காது.. மன்னிக்கவும், உணர்வுள்ள அனைத்துதமிழர்களுக்கும் தெரிந்திருக்கும், அறிவால் உறங்கி கொண்டிருக்கிறமடத்தமிழனுக்கு தெரிந்திருக்காது புரிந்திருக்காது..  ஆனால் என்ன செய்வதுஉணர்வற்ற தமிழனை விட உறங்குகிற அடிமைத்தமிழன் நாட்டில் அதிகம் தானே...!காங்கிரஸ் என்றால் என்ன? அது உருவானது எப்படி? (1885 - 2011 ஒரு சிறுதொகுப்பு)சுதந்திர போராட்ட்டத்தின் போது விடுதலைக்காக ஒரு இயக்கமாகஆரம்பிக்கப்பட்டது தான் 'காங்கிரஸ்'.. ஆனால் 'காங்கிரஸ்' என்பது சுயமாகசுயசிந்தனையற்ற காந்தியாலோ அல்லது நேருவாலோ ஆரம்பிக்கப்பட்டது அல்ல..'காங்கிரஸ்' என்பது அமெரிக்க சட்டமன்றத்தை குறிக்கும்.. அதன் அர்த்தம்'இருகட்சி ஆட்சி முறை' என்பதாகும்.. அச்சட்ட மன்றம் மேலவை, கீழவை என்றஇரு அவைகளை கொண்டது, இந்த இருகட்சி ஆட்சி முறையை பின்பற்றும்நாடுகளைத்தான் 'குடியரசு' நாடு என்பார்கள்.. 'குடியரசு' கொள்கையின்படிஆட்சிகளை எப்படி அமைப்பது என்றுதான் இதுவரை விவாதிக்கப்பட்டுவந்திருக்கிறதே தவிர மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை எப்படிதீர்க்கலாம் என விவாதிக்க பட்டது சரித்திரத்தில் இல்லை... தற்போதுஅமெரிக்காவில் 112 வது காங்கிரஸ் சட்டமன்ற தொடர் நடைபெற்று வருகிறது...உலக அளவை பொறுத்தவரை இருவகையான நாடுகளை காணலாம்1 .முதலாளித்துவம் (ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம், தனிவுடமை)2 .கம்யுனிசம் (மார்க்ஸிசம், சோசியலிசம், பொதுவுடைமை, தேசியவுடமை)அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய வல்லரசு நாடுகளில்அப்போதிலிருந்தே முதாளித்துவம் வேர் விட்டு வளர தொடங்கியது,முதலாளித்துவத்தின் அர்த்தம் "மக்களை முட்டாள்களாகவும் அடிமைகளாகவும்ஆக்கி பணக்காரர்களுக்காக பணக்காரர்களே ஆட்சி செய்யும் முறை" ஆகும்..இந்நாடுகளின் முக்கிய குறிக்கோள் ஏதேனும் இரு நாடுகளுக்கிடையில்பிரச்சினைகளை மூட்டிவிட்டு, அந்த பிரச்சினையை பிரிப்பது போல் வந்து அந்தஇடத்தை தனதாக்கி கொண்டு அந்நாடு மக்களை அடிமையாக்கி உரிமையை பறித்துமுட்டாள்தனத்தை ஊட்டி, அந்நாட்டு செல்வங்களை கொள்ளை அடிப்பதே ஆகும்...இப்படிப்பட்ட சூழலில்தான் 1885 ஆம் ஆண்டு உமேஷ் சந்திரா பானர்ஜி,சுரேந்திர பானர்கி, ஆலன் ஆக்க்டேவியன் குமே, வில்லியம் வேட்டர்புர்ன்,தாதாபாய் நௌரோஜி மற்றும் தின்சா வாட்சா ஆகியோரால் 'காங்கிரஸ்' எனும்இயக்கம் இந்தியாவில் தொடங்கப்பட்டது, இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜிதேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.முதல் கூட்டம் பம்பாயில் நடைபெற்றது...காங்கிரஸ் முதலில் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை.. முதலாளித்துவ நாடானஇங்கிலாந்து தனது பழக்கதோசத்தில் இந்தியாவையும் இலங்கையையும்  1900 -களில் ஆக்கிரமிக்க தொடங்கியது.. அப்போது இருந்த செல்வங்களையும் சுரண்டஆரம்பித்தது ஏகாதிபத்தியத்தியத்தை அறிவாளியாக்கி மக்களிடையே புகுத்தநினைத்தது... அப்போது சாதாரண இயக்கமாக இருந்த 'காங்கிரஸ்' இச்சூழ்நிலையைபயன்படுத்தி வெள்ளையர்களை வெளியேற்ற தொடங்கியது.. அப்போது இருந்த ஒரே ஒருஇயக்கம் காங்கிரஸ் மட்டும்தான்... அப்போது வெள்ளைக்காரன் இந்தியாவில்அறிமுகபடுத்திய ஒரு முறைதான் 'வரி'.. அதுதான் எளிமையாக வாழ்ந்தார்கள் எனகூறப்படும் பணக்காரர்கள் காந்திக்கும், நேருவுக்கும் பீதியைகிளப்பியது... (ஆனால் இன்றைய கல்விமுறையில் அவர்கள் தென்னாப்பிர்க்காவில்ஏற்பட்ட இனவெறிதான் அதற்க்கு காரணம் என கூறப்படுகிறது)..1915 -களுக்கு மேல் இந்தியாவின் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது..அப்போது தனது உரிமை 'வரி' என்ற பெயரில்  பறிபோகிறது என உணர்ந்த உணர்வாளன்காந்தி 1920 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராகதேர்ந்தெடுக்கபட்டார்.. அவர்களது முழுநோக்கமும் வெள்ளையர்களை விரட்டவேண்டும் என இருந்தாலும், சுதந்திரம் அடைந்ததற்கு காங்கிரஸ் என்பது ஒருதுளி கூட காரணம் இல்லை என்பதுதான் உண்மை..காங்கிரசின் கொள்கை என்னவென்றால் "முதலாளித்துவத்தை எதிர்க்கமுதலாளித்துவத்தை கையில் எடுப்போம்" என்பதுதான்... இப்படி முதலில்இருந்தே முட்டாளாக விளங்கியது காங்கிரஸ் கட்சிதான்.. அரிசியை உற்பத்திசெய்தவனை தெரியாது ஆனால் அதனை வைத்து வியாபாரம் செய்யதவனை தெரியும்என்பதுதான் தற்போதைய இந்திய மக்களின் தேச உணர்வு..ஆம், மேற்கூறியபடி சுதந்திரம் பெற காங்கிரஸ் ஒரு துளி கூட காரணம் இல்லை..அதற்க்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இயங்கிய படைகளும்,இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடியும் தான் காரணம்... நேதாஜிகாங்கிரசையும் முதலாளித்துவத்தையும் கடுமையாக எதிர்த்தவர்..காங்கிரசுக்கு எதிராக 'பார்வார்டு பிளாக்' என்ற இயக்கத்தை தொடங்கினார்..ஆனால் பலனை எதிபார்க்காத அக்கட்சி சுதந்திர போராட்டத்தில்முழுக்கவனத்துடன் ஈடுபட்டதால் அக்கட்சியை விளம்பரம் செய்து பெரிதாக்கஇயலவில்லை... ஆனால் முதலாளித்துவம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல்மற்றவர்களின் உழைப்பை இவர்கள் (காங்கிரஸ்) பயன்படுத்தி விளம்பரம் செய்துதன்னை ஒரு பெரிய கட்சியாக உருவெடுத்து கொண்டார்கள்"முதலாளித்துவம் இருந்தால் நாட்டில் ஏழைகள் முன்னேற முடியாது, நாடுசுடுகாடாகிவிடும், முதலாளித்துவம்தான்  முக்கியமென்றால் காங்கிரஸ்வெள்ளையர்களை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை " - நேதாஜி"எனது நாட்டின் முதலாளிகள் இரக்க மனம் உடையவர்கள், ஆகையால் ஏழைகளுக்குஎந்த பிரச்சினையும் வராது" - காந்திநேதாஜி உட்பட அவரது வழியில் விடுதலைக்காக போராடியவர்கள் துணிந்து உயிரைவிட்டதாலும் , அவரது வழியில் வந்த ஆட்கள் பலம் குறைந்தது... விடுதலைஅடைந்த நேரத்தில் வெண்ணைக்காக காத்திருந்த குரங்கைப்போல் காங்கிரஸ் பதவிஏற்று கொண்டது... சட்டமேதை என போற்றப்படும் அம்பேத்காரும் காங்கிரஸ்ஆதரவாளர் என்பது கசப்பான செய்தியே.. ஆனால் 'இந்திய அரசியலமைப்பு சட்டம்'இயற்றப்பட்டது அம்பேத்காரால் அல்ல.. இயற்றப்பட்டது காங்கிரஸ் கட்சியைசேர்ந்த பார்ப்பனர்களால்.. அதனை தொகுத்த்வர்தான் அம்பேத்கார் (சட்டம்அனைவராலும் இயற்றப்பட்டது என அனைவருக்கும் கணக்கு காட்ட காங்கிரஸ் போட்டதிட்டம் இது)இப்படி சுதந்திரம் அடைந்த உடனே அரசியல் என்ற நன்னீரை சாக்கடை என பெயர்மாற்றம் செய்ய விளங்கிய அடிப்படை கட்சியும் காங்கிரஸ்தான்.."எனக்கு முழு சுதந்திரம் இருந்தால், இந்த இந்திய அரசியலமைப்பு சாசனத்தினைதீயிட்டு கொழுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்" - அம்பேத்கர் (1950 ஆம்ஆண்டு சனவரி 26 ஆம் நாள், இந்திய பாராளுமன்றத்தில்)அப்போது நேரு மக்களாட்சி என்று ஆரம்பித்து வைத்த மன்னர் ஆட்சியைத்தான்இன்றும் காங்கிரஸ் செய்கிறது.. அக்கட்ச்சிக்காகவும் மக்களுக்காகவும்உழைத்த காமராஜர் மறைய காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம் என்பது மறக்கமுடியாத உண்மை.. சுதந்திரத்திற்கு பிறகும் தமிழகத்தில் காங்கிரஸ் 1967வரை ஆட்சி செய்தது..அப்போது தமிழகத்தில் காங்கிரசையும், அதன் பொறுப்பாளர் ராஜாஜியையும்பெரியார் கடுமையாக எதிர்த்து விமர்சித்தார்.."காங்கிரசை ஆதரிப்பவர்களும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் ஓரினத்தைசேர்ந்தவர்கள்தான், அவர்களை ஆதரிப்பவர்கள் தன்னுரிமை தெரியாதசுயசிந்தனையற்ற முட்டாளாகவோ அல்லது சுயநலமிக்க பணக்காரனாகவோஇருப்பார்கள்" -  பெரியார்சுயசிந்தனையும் பகுத்தறிவில் ஒன்றாக கருதிய பெரியார் "திராவிட கழகம்"என்ற இயக்கத்தை உருவாக்கினார்.. அவ்வியக்கம் கம்ம்யுனிசத்தை ஆதரித்ததால்காங்கிரசுக்கு எதிரியாக விளங்கியது.. திராவிட கழகம் ஒரு அரசியல் இயக்கமாகஇருக்காது, அது ஒரு சீர்திருத்த இயக்கமாகத்தான் இருக்கும் என பெரியார்அறிவித்தார்... ஒரு நல்ல விசயத்தில் சிலர் ஆதாயம் தேடி தன்னை உயர்த்திகாட்டி கொள்வது போல்... திராவிட கழகத்தில் ஆதரவோடு "திராவிட முன்னேற்றகழகம்" என்ற அரசியல் கட்சி உதயமானது.. இது முழுக்க முழுக்க திராவிடகழகத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டது..."தன்மானம், சுயமரியாதை ஆகியவை எங்களது முக்கிய கொள்கைகள், செத்தாலும்நானோ அல்லது எங்களது கட்சியோ காங்கிரசை ஆதரிக்காது" - அண்ணாஇன்றைய நிலை?  1. "போபர்ஸ் பீரங்கி ஊழல்" என முதல் மெகா ஊழலை தொடங்கி வைத்தும்காங்கிரஸ் கட்சிதான்...  2.  நல்லாட்சி செய்கிறோம் என்ற பெயரில் தன்நாட்டு மக்களை கொன்றுகுவித்து தாலாட்டுவதும் இக்கட்ச்சிதான்...  3. இந்தியாவிலும் அனைத்து விலைகளையும் ஏற்றி காரணம் கட்டுவதில்சிறந்ததும் இக்கட்சிதான்..  4. ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்கிறதுஎனதெரிந்தும் அவர்களை விரட்டாமல் அப்பாவி மக்களை கோலும் வீரமிக்ககட்சிதான் காங்கிரஸ் கட்சி...  5. சுவிஸ் வங்கியில் அதிகமாக கணக்கு வைத்திருக்கும் கட்சியும்இக்கட்சிதான்...  6. மன்னர் ஆட்சி என்ற அர்த்தத்தை புரிய வைத்த கட்சியும் இதுதான்..  7. முட்டாள்களை அமைச்சர்களாகவும் தொண்டர்களாகவும் கொண்டு மக்களைமுட்டாள் ஆக்குவதும் இக்கட்சிதான்  8. எதிரிகளுக்கு மட்டும் "சட்டம் தனது கடமையை" செய்கிறது என சொல்வதுகாங்கிரஸ் கட்சி  9. ஏழைகளை உருவாக்குவதில் முன்னோடியாக இருக்கிறதுஆனால் இக்கட்சிக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை இன்றைய தி.மு.கஇக்கட்சியின் சிந்தனையற்ற தொண்டர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மைசம்பவத்தை சொல்லலாம், பிரியங்கா காந்திக்கு குழந்தை பிறந்த போது, "அடுத்தபிரதம மந்திரி பிறந்து விட்டார்" என இனிப்பு கொடுத்து கொண்டாடியவர்கள்காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்... சரி இவர்கள் இப்படி என்றால்சுயசிந்தனையையும் தன்மானத்தை பற்றியும் பேசும் தி.மு.க தொண்டர்கள் இதுபோன்ற சம்பவங்களில் "வாழ்க.. ஒழிக" கோசத்தை போட்டு காங்கிரசுக்கு ஒருபடிமேல் உள்ளது"ஆண்ட இனம் எப்படியடா அடிமையானது...? தன்மானத்தை இழந்தது?"வரலாற்றுக்குள்ளே தேடு.அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.