Sunday, May 29, 2011

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை-இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள்.ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்?


அவர் ஒரு நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா

அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?


செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!!


காவிரிச் சிக்கலில் கன்னடர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டபோது , தமிழர்களான பாரதிராசா , சத்தியராசு , போன்றவர்கள் நடத்திய கண்டனப் பேரணியை புறக்கணித்து , மட்டம்தட்டி, ஓரம்கட்டி, கன்னட இன வெறியன் நடிகன் அம்பரீஷ் ( இவன் கர்நாடக மாண்டியாவில் தேர்தலில் நின்றபோது பல கோடிகள் செலவு செய்தது ரசினிதான். 1991 இல் காவிரிக் கலவரம் நடைபெற்றபோது பல்லாயிரம் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கன்னட வெறியர்கள் சார்பாக நடந்துகொண்டதும் இந்த ரசினிதான் ) , அனைத்துலக அரசியல் வேசியான சுப்ரமணிய சாமி போன்றவர்களின் ஏவலின்படி தனித் தவில் வாசித்து , அந்த போராட்ட வேகத்தை மந்தபடுத்தி, அதன் கூர்மையை மழுங்கடித நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கும் , ஒண்ட வந்த நாட்டிற்கும் இரண்டகம் புரிந்த பித்தலட்டகாரன்.

உரிமையை பிரச்சனையாகி காவிரியாற்றிலே தண்ணீர் வரவேண்டுமா ? இல்லை செந்நீர் வரவேண்டுமா ? என்று பேசி , கன்னட வெறியர்களின் வன்கொலை வெறி உணர்சிகளை தூண்டிவிட்டு அதிலே குளிர்காய்ந்த கயவந்தான் இந்த ரசினிகாந்து ! வெளுத்ததெல்லாம் பாலாகாது ; என்பதை தமிழர்களே சிந்தியுங்கள் !


.


ஏன் இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்?


ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?


இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?


உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களைப்போய் பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள், முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.


அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.


எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன்... பேசினேன்... இப்படி அறிக்கைகள் பறக்கின்றன. மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள்.


ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போய் பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு(!) கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட இல்லை.


இதை பற்றி எழுதுங்கள், கவலைப்படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வெற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை எப்போது மாறும்? நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
Saturday, May 28, 2011

பொஸ்னியர்கள் முன்னெடுப்புகளை போல தமிழர்களும் பிந்தொடரவேண்டும்

ரட்கோ மிலாடிஜ் கைது: மரபணுப் பரிசோதனை நடக்கிறது கலக்க நிலையில் இலங்கை !
பொஸ்னியா- சேபியர்களுக்கு எதிராக போர் நடைபெற்றவேளை 8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் என்னும் இராணுவத் தளபதி தற்போது கைதாகியுள்ளார். 1991ம் ஆண்டு முதல், இவர் மீது இன அழிப்புக் குற்றமும், போர் குற்றங்களும் சுமத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக புலம்பெயர் பொஸ்னியர்கள் இவரைக் கைதுசெய்யவேண்டும் என அழுத்ததைக் கொடுத்து வந்தனர். மெதுவாக ஐரோப்பிய ஒன்றியமும், பின்னர் ஏனைய நாடுகளும் செபனீசியாவில் இளைக்கப்பட்ட கொடுமைகளை ஏற்றுக்கொண்டது. பல நாடுகளில் கடந்த 20 வருடமாக இவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்கா தனது புலனாய்வைப் பயன்படுத்தி இவரைத் தேடிவந்தது. ஆனாலும் இவர் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.


ஒரு நகரத்தையே தனது படைகளைக் கொண்டு சூழ்ந்து, அதனை 44 மாதங்களாக சுற்றிவளைத்து, குடி நீர், மின்சாரம், உணவு என்பனவற்றைத் தடைசெய்து, அன் நகரம் மீது ஷெல் தாக்குதலையும் மேற்கொண்டார் ரட்கோ மிலாடிஜ். செபனீட்சியா என்னும் இடத்தில் சுமார் 8,000 பொஸ்னியர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் அதனை உதாரணம் காட்டியே இலங்கைப் பிரச்சனையும் சனல் 4 தொலைக்காட்சியில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


இந் நிலையில் இன்று சேபியாவில் அருகே உள்ள கிராமம் ஒன்றில், இவரை சேபியப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக இலங்கை கலக்கத்தில் உள்ளது. காரணம் என்னவெண்றால், ரட்கோ மிலாடிஜை சர்வதேசம் தூற்றி வந்தாலும், அவர் கைதுசெய்யப்படமாட்டார் என இலங்கை உட்பட பல நாடுகள் எண்ணி வந்தது. ஆனால் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ரட்கோ மிலாடிஜ் மீது மரபணுப்பரிசோதனை நடத்தப்படுவதாவும், உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர் நேரடியாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளார் என்றும் பி.பி.சி செய்திச் சேவையூடாக அதிர்வு இணையம் அறிகிறது.


பொஸ்னியர்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சுமார் 20 ஆண்டுகள் கழித்தே நீதி கிடைத்திருக்கிறது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன அழிப்பு நடைபெற்று 20 ஆண்டுகள் ஆணாலும் தமது முன்னெடுப்புகளை இவர்கள் ஒருபோது கைவிட்டதில்லை. அதனை தமிழர்களும் பிந்தொடரவேண்டும். இலங்கையில் பாரிய இன அழிப்பு ஒன்று நடைபெற்று 2 வருடங்களே பூர்த்தியாகியுள்ள நிலையில், பலரும் சோர்ந்துபோய் உள்ளனர். தமிழர்கள் அனைவரும் இதனைப் பார்த்து கற்றுகொள்ளவேண்டியது நிறையவே உள்ளது எனலாம் ! 8000 பேரைக் கொண்றது ஒரு இன அழிப்பாகப் பார்க்கப்படும் இடத்தில் 40,000 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு நோக்கப்படவேண்டும், இல்லையேல் எவ்வாறான அழுத்ததை புலம்பெயர் தமிழர்கள் பிரயோகிக்கவேண்டும் தமிழ் அமைப்புகள் தீர்மானிப்பது நல்லது.

Sunday, May 1, 2011

ஐ.நா வில் இலங்கை

சுதந்திரம் பெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர்,1955 டிசம்பால் இலங்கை ஐ.நா வில் சேர விழைந்தது, அதில் அனுமதியூம் பெற்றது. அது முதல், அது சர்வதேச சமூகத்தின் செயலூக்கமுள்ள உறுப்பு நாடாக விளங்கி வருகிறது. இந்த உறவினால்தான் உலக அமைப்பில் தனது அங்கத்துவம் மூலம் நாடு பயனடைந்துள்ளது. இந்த உலக அமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பின் நெறிமுறைகளுக்கும் தரங்களுக்கும் இலங்கை பங்களிப்பைச் செய்திருக்கின்றது.

இந்தக் காலங்களில் பின்வரும் ஐ.நா. உறுப்புக்களில் இலங்கை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றது:UN GlobalReform at United NationsUN NewsUN Secretary Generalபொதுச் சபைஇலங்கை எல்லா பொதுச் சபைக் கூட்டங்களிலும் சமூகமளித்தது. 1976 பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தியது: 1978 படைக்குறைப்புக் கூட்டத் தொடருக்கான யோசனையை முன்வைத்தது. பொதுச் சபையே விவாதத்துக்கான ஐ.நா வின் பிரதான அரங்கு. எல்லா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கும் ஒரேயொரு ஐ.நா. உறுப்பு இது மாத்திரமே. ஓவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. சர்வதேசப் பாதுகாப்பு முதல் ஐ.நா வரவு-செலவுத் திட்டம் வரையில் ஐ.நா சாசனத்தில் உள்ள எந்த விடயம் பற்றியும் உறுப்பினர்கள் கலந்துரையாட முடியும். பொதுச் சபை அதன் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் பாரிந்துரைகளைச் செய்ய முடியும். ஆனால், இவற்றின் மீது செயல்படுவதற்கு நாடுகளை நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. பொதுச் சபை, வருடத்தின் செப்டெம்பர் நடுப்பகுதியில் இருந்து மூன்று மாதங்களுக்குக் கூடும்இ விசேட அவசரக் கூட்டத் தொடர்களையும் நடத்தும். அதன் வருடாந்தக் கூட்டத்தொடர் “பொது விவாதத்துடன்” ஆரம்பமாகின்றது. ,தில் ஒவ்வொரு அங்கத்துவ நாடும் உலக நிகழ்வுகளின் வாய்ப்பு பற்றிய அறிக்கையை விடுக்கும்.

பாதுகாப்புச் சபைஇலங்கை 1960க்கும் 1965க்கும் இடையே நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்தது. உலகளாவிய சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் கடமை பாதுகாப்புச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளைக் கொண்டது. அவை சீனா, பிரான்ஸ், ரஸ்யா, பிர்ட்டன், ஐக்கிய அமரிக்கா ஆகும். ஏனைய பத்து நாடுகள் சுழற்சி அடிப்படையில் தற்காலிக அங்கத்துவத்தைப் பெறுகின்றன. பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும், மோதல்களில் படைபலப் பிரயோகத்தை அங்கீகாரிக்க முடியும். அது அமைதி காக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்கின்றது.

செயலகம்ஜயந்த தனபால செயலாளர்-நாயகம் பதவிக்காக இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு அபேட்சகராக இருந்தா.அநேக இலங்கையர்கள் செயலகத்திற்காகப் பணியாற்றியூள்ளன. செயலகம், ஐ.நா வின் தினசார பணிகளை மேற்கொள்கின்றது, ஸ்தாபனத்தின் வேலைத் திட்டங்களையூம் கொள்கைகளையூம் நிர்வகிக்கின்றது, 170 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7,500 செயலக உத்தியோகத்தர்கள் செயலகத்துக்காகப் பணியாற்றுகின்றன.

பொருளாதார-சமூக மன்றமஇந்த மன்றம் ஐ.நா வின் பொருளாதார, சமூக, மனிதநேய, கலாச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அது மனித உரிமைகள், சமூக அபிவிருத்தி, தொழிநுட்பம், மருந்துப்பொருட்கள் மற்றும் பிற பிரச்சினைகளைக் கையாளும் ஆணைக்குழுக்களது பணிகளை மேற்பாHவை செய்கின்றது. அதன் உறுப்பினர்கள் 54 பேரும் பொதுச் சபையினால் தொவூ செய்யப்படுகின்றனர்.

சர்வதேச நீதிமன்றமஇந்த நீதிமன்றம் ஐ.நாவின் பிரதான சட்ட உறுப்பு: நாடுகள் அதனிடம் சமர்ப்பிக்கும் சட்டப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் கடமையைப் பெற்றிருக்கி;னறது. நெதHலாந்திலுள்ள த ஹேகில் அது செயல்படுகின்றது. நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளும் பொதுச் சபையினாலும் பாதுகாப்புச் சபையினாலும் தொவூ செய்யப்படுகின்றனர்.

அமைதி காத்தலஇலங்கை ஐ.நாவூக்குத் துருப்புக்களைப் பங்களிப்பு செய்யூம் 16வது மிகப் பொய நாடு. ஹயிற்றி, கோட் டி ஐவோயர், சூடான், மேற்கு சகாரா, மொசாம்பிக், திமோர் லெஸ்தே, லைபீரியா ஆகியவற்றில் 1000 இலங்கை ஐ.நா துருப்புக்கள் பணியாற்றி இருக்கின்றன.ஐக்கிய நாடுகள் அமைதி காத்தல் செயற்பாடு மோதலினால் பிளவூண்டுள்ள நாடுகளுக்கு உதவூம் தனித்துவமான, இயக்காற்றல்மிக்க கருவியாகும். நீடித்த சமாதானத்துக்கான நிலைமைகளை அது உருவாக்குகின்றது. பாதுகாப்புச் சபை ஐ.நா அமைதி காத்தல் நடவடிக்கைகளை உருவாக்குகின்றது. அவற்றின் வாய்ப்பு, ஆணை ஆகியவற்றை வரையறுக்கின்றது, 1948ம் ஆண்டு முதலாவது அமைதி காக்கும் பணி நிறுவப்பட்டது. அது முதல் உலகம் முழுவதிலும் மொத்தம் 63 அமைதி காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓப்பந்தங்கள் (உடன்படிக்கைகள்)இலங்கை முக்கியமான ஐ.நா உடன்படிக்கைகள் பெரும்பாலானவற்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது (இலங்கை அங்கீகாpத்துள்ள உடன்படிக்கைகள் இங்கு தரப்பட்டுள்ளன).

இனப் பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1982 மார்ச் 20 முதல் நடைமுறையில் உள்ளது)

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (1998 ஜனவரி 03 முதல் நடைமுறையில் உள்ளது)

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1981 நவம்பர் 4 முதல் நடைமுறையில் உள்ளது).

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2003 ஜனவரி 15 முதல் நடைமுறையில் உள்ளது).

சித்திரவதை, மற்றும் பிற குரூர, மனிதாபிமானமற்ற வகையில் அல்லது தரக் குறைவாக நடத்துதல் அல்லது தண்டித்தலுக்கு எதிரான உடன்படிக்கை (1994 பெப்ருவரி 02 முதல் நடைமுறையில் உள்ளது).

சிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (1991 ஆகஸ்ட் 11 முதல் நடைமுறையில் உள்ளது).

ஆயூத மோதல்களில் குழந்தைகளை ஈடுபடச் செய்வது சம்பந்தமான சிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2002 பெப்ருவாரி 12 முதல் நடைமுறையில உள்ளது)

குழந்தைகளின் உரிமைகள் பற்றியூம் குழந்தைகளை விற்பனை செய்தல், குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவூ, சிறார் ஆபாசப்படவியல் பற்றியூமான உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (22 அக்டோபர் 2006).

வெளிநாடுகளில் தொழிலாளர்களாக இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (2003 ஜூலை 1 முதல் நடைமுறையில் உள்ளது).

ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (30 மார்ச் 2007ல் கைச்சாத்திடப்பட்டது.தீர்மானம்இந்து மாகடலைச் சமாதான மண்டலமாக்குவது பற்றி 1971ம் ஆண்டு இலங்கை முன்வைத்த யோசனை அங்கீகாரி க்கப்பட்டது. அதுபோலவேஇ வீடற்றவர் களுக்கான சர் வதேசக் குடியிருப்பு ஆண்டாக 1987ம் ஆண்டின் பிரகடனம், விசாகத்தை ஐ.நா விடுமுறை தினமாக 1999ம் ஆண்டு அங்கீகாரிக்கப்பட்டமை ஆகியனவூம் இலங்கை முன்வைத்த யோசகைகளாகும்.ஐ.நா உறுப்பு அமைப்பு ஒன்றினால் ஏற்கப்பட்ட முறையான வாசகமே ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாகும். எந்தவொரு ஐ.நா. உறுப்பு அமைப்பும் தீர்மானங்களை விடுக்க முடியூம் என்றாலும் நடைமுறையில் பெரும்பாலான தீர்மானங்கள் பாதுகாப்புச் சபை அல்லது பொதுச் சபையினால் விடுக்கப்படுகின்றன. பொதுச் சபையின் தீர்மானம் ஒன்றுக்குப் பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் சபையின் எல்லா அங்கத்துவ நாடுகளும் வாக்களிக்கின்றன. இதனை நிறைவேற்றுவதற்குச் சாதாரணப் பெரும்பான்மை போதுமானது (ஆனால், விதிவிலக்காக முக்கியமான பிரச்சினைகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம்).

செயலாளர் நாயகம்ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்குச் செயலாளர் நாயகம் தலைமை தாங்குகிறார். இது ஐக்கிய நாடுகள் சபையின் தலையாய உறுப்புக்களில் ஒன்றாகும். செயலாளர் நாயகம் உண்மையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராகவூம் அதன் தலைவராகவூம் விளங்குகின்றார். தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூன். இவர் தென் கொர்ரியாவின் முன்னாள் வெளியூறவூ அமைச்சர். அவர் 2007 ஜனவாரி முதலாம் திகதி பதவியேற்றார். அவரது முதலாவது பதவிக் காலம் 2011 டிசம்பர் 31ம் திகதி முடிவடைகிறது, அவர் மீண்டும் அப் பதவிக்கு நியமிக்கப்படும் தகுதி உள்ளவர். “இயக்காற்றலும் துணிவூம்” நிரம்பியதாக இருக்கக்கூடிய ஐ.நாவில. நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட விழையூம் ஒரு “பாலம் அமைப்பவராக” தாம் இருக்கப் போவதாய் அவர் கூறுகிறார். மத்தியக் கிழக்கு, சூடான், வட கொரியா ஆகியனவே தமது முன்னுரிமைகளாக அவர் இனங் கண்டுள்ளார்.

முகவர் நிறுவனங்களும் வேலைத்திட்டங்களுமஅநேகமான இலங்கை ஊழியர்கள் முகவர் நிறுவனங்களிலும் ஆட்சி மன்றங்களிலும் பணிபுரிகின்றனர்.

ஏனைய உறுப்புக்கள்இலங்கை பொருளாதார, சமூக மன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளது. சுகாதாரப் பராமாரிப்பு, போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக விளங்குகின்றார்.

ஐ.நாவில் புகழ்பூத்த இலங்கையர்கள்காமினி கொரியா அங்டாட்டின் செயலாளர் நாயகமாக இருந்தார்.

ஜயந்த தனபால யூனிடிர்மற்றும் படைக்குறைப்பு விவகாரங்களில் ஆகவூம் மூத்தப் பதவிகளை வகித்தார்.

சி.வீரமந்திரி சர்வதேச நீதிமன்றத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

ராதிகா குமாரஸ்வாமி குழற்தைகள் மற்றும் மோதலுக்கான துணைச் செயலாளராக இருக்கின்றார்.

பாலித கொஹொன ஐ.நாவின் உடன்படிக்கைப் பிரிவூக்குத் தலைவர்.