- 2011 தேர்தல்? ஒர் பார்வை - ஆய்வரங்கம்
இடம் : ஐக்ஃப் (AICUF) அரங்கம், ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை. - நாள் : 18.9.2010, சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.00 வரையில்
"எழுத்திலோ அல்லது பேச்சிலோ ஏகாதியபத்தியத்திற்கெதிரான வசைமொழிகளை கூச்சலிடுவதால் மட்டுமே ஏகாதியபத்தியத்தை வெளியேற்றிட முடியாது.""சொந்தக்கால்களில் நிற்பதன் மூலம் நமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்தத் தியாகங்களின் மூலம் நமது வரலாற்றை திசை திருப்பமுடியும்".-அமில்கர் கப்ரால்-
தங்களது வாழ்க்கையில் விடிவு ஏற்படுத்தும் என்ற எண்ணங்கள் ஆசைகளோடு 3 கோடி மக்கள் தேர்தலில் பங்கேற்கின்றனர். இன்றைய அரசியல் கட்சிகளின் கறைபடிந்த வாழ்க்கையினை தங்கள் விரல்களை கறைபடுத்தி கொள்வதன் மூலம் அங்கீகரிக்கும் இம்மக்கள் தங்கள் வாழ்நாள் நெடுக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இவ்விதம்
ஏமாற்றும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக செயல்படும் பல்வேறு மக்கள் திரள் அமைப்புகள் ஏமாற்றப்படும் மக்களுக்கு உதவுவதற்கு இவ்வரங்கத்தில் முன் வைக்கப்படும் ஆய்வுகள், பார்வைகள், கோணங்கள், திட்டங்கள், முடிவுகள் போன்றவை உதவும் என்று நம்புகிறோம்.
நிகழ்ச்சிநிரல்:
தேர்தலில் பங்கு பெறாத இயக்கங்களும், மக்கள் பணியிலே அவர்களது தார்மீக கடமையும்தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா? மாற்றுவழி என்ன? - தியாகு-தமிழ் தேசிய விடுதலை இயக்கம் (9.00-9.40)
சட்டமன்ற தேர்தல் : கிடைக்கும் களமும், நாம் அதனை பயன்படுத்த வேண்டிய அவசியமும் - திருமுருகன்-மே 17 இயக்கம்(9.40-10.20)
மக்களின் பலமும், மக்கள் ஆதரவினை பெறுவதற்கான வழிமுறையும் - சிவசங்கரன்-மக்கள் சக்தி கட்சி (10.20-11.00)
மக்கள் எதிரியின் தொலைநோக்குப்பார்வையும்,மக்கள் நண்பர்களின் குறுகியப்பார்வையும் - கண்ணன்-சர்வதேச தமிழர் கழகம்- (11.00-11.40)
- இன்றைய அரசியல் கட்சிகளின் உண்மை முகமும்பொதுவேட்பாளர்கள் என்கிற துருப்பு சீட்டும் - கோ.பா.சாரதி - தேசியவாத காங்கிரஸ்(11.40-12.20)
பாராளுமன்ற தேர்தல் படிப்பினையும்,சட்ட மன்ற தேர்தலுக்கு தேவையான அணுகுமுறையும் - த.செ.மணி-பெரியார் திராவிடர் கழகம் (12.20-1.00)- சட்டமன்ற தேர்தல் : மக்கள் தேவைக்கான மாற்றங்கள் கொண்டுவருவதற்க்கு நமக்கு தேவையான செயல்திட்டங்கள், செயல் தந்திரங்கள், தீர்மானங்கள் - ஆய்வு - பேரா.மணிவண்ணன்-சென்னை பல்கலைகழகம்(1.00-1.40)
கேள்வி / பதில் - (1.40-2.30)
தங்களுடைய வருகை இவ்வரங்கத்தின் மேன்மையினை பலப்படுத்தும் என்று நம்புகிறோம். தாங்கள் தங்களுடைய பங்களிப்பினை தவறாமல் பதிவுசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழர் சமூக அரசியல், கலாச்சார, பொருளாதார ஆய்வுக் கழகம், சென்னை - 9042274271 / 928240915
- குறிப்பு : காலை மற்றும் மதிய உணவு நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை பங்குகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தாழ்மையான வேண்டுகொள் - அலைப்பேசி அழைப்புகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளவும் (அ) அலைப்பேசி அழைப்பு சத்தத்தை குறைத்துக் கொள்ளவும்.
கு.கண்ணன்பெரியார் திராவிடர்கழகம்www.periyardk.org- "தமிழ்க்குடில்"6/28, புதுத்தெருகண்ணம்மாப்பேட்டைதியாகராயர்நகர்சென்னை - 600 017"
- Thamizhnadu only for Tamils" - Periyar பெரியார் முழக்கம் படியுங்கள் "
- ஒருவரின் மரணத்துக்குப்பிறகு அவருடைய பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு யாரும் இல்லையென்றால் அவருடைய பணி முழுமையடைந்தாகக் கருதமுடியாது," -அமில்கர் கப்ரால்-
- நன்றி : தமிழர் சமூக அரசியல், கலாச்சார, பொருளாதார ஆய்வுக் கழகம், சென்னை
Wednesday, September 15, 2010
2011 தேர்தல்? ஒர் பார்வை - ஆய்வரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment