வெளிச்சம் அறிமுகம்:
வணக்கம், 2004 ம் ஆண்டு முதல் வெளிச்சம் அமைப்பானது சென்னையை மையமாக கொண்டு, ஏழை மாணவர்கள் பணமில்லை என்கிற ஒரே காரணத்திற்காக தங்கள் வாழ்கையையும், படிப்பையும் இழந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, உதவும் உள்ளங்களின் உதவியால் வெளிச்சம் இன்றுவரை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்ட 515 முதல்தலைமுறை ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி செய்ததால்,வெளிச்சத்தின் மாணவர்கள் பல்வேறு துறைகளில், பல்வேறு கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. இந்த வருடம் மட்டும் 51 மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துள்ளனர். வெளிச்சத்தின் முதல் மாணவர் செந்தில் என்பவர் இப்போது ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
ஏழை, எளிய மாணவர்கள் பட்டப்படிப்பு முடிக்காத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உதவி காரம் நீட்டும் வகையில் “வெளிச்சம் மாணவர்கள்’ குழு (வெளிச்சம் அமைப்பு, செரின் )பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.