Sunday, May 29, 2011

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை-இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள்.



ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்?






அவர் ஒரு நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா

அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?






செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!!






காவிரிச் சிக்கலில் கன்னடர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டபோது , தமிழர்களான பாரதிராசா , சத்தியராசு , போன்றவர்கள் நடத்திய கண்டனப் பேரணியை புறக்கணித்து , மட்டம்தட்டி, ஓரம்கட்டி, கன்னட இன வெறியன் நடிகன் அம்பரீஷ் ( இவன் கர்நாடக மாண்டியாவில் தேர்தலில் நின்றபோது பல கோடிகள் செலவு செய்தது ரசினிதான். 1991 இல் காவிரிக் கலவரம் நடைபெற்றபோது பல்லாயிரம் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கன்னட வெறியர்கள் சார்பாக நடந்துகொண்டதும் இந்த ரசினிதான் ) , அனைத்துலக அரசியல் வேசியான சுப்ரமணிய சாமி போன்றவர்களின் ஏவலின்படி தனித் தவில் வாசித்து , அந்த போராட்ட வேகத்தை மந்தபடுத்தி, அதன் கூர்மையை மழுங்கடித நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கும் , ஒண்ட வந்த நாட்டிற்கும் இரண்டகம் புரிந்த பித்தலட்டகாரன்.

உரிமையை பிரச்சனையாகி காவிரியாற்றிலே தண்ணீர் வரவேண்டுமா ? இல்லை செந்நீர் வரவேண்டுமா ? என்று பேசி , கன்னட வெறியர்களின் வன்கொலை வெறி உணர்சிகளை தூண்டிவிட்டு அதிலே குளிர்காய்ந்த கயவந்தான் இந்த ரசினிகாந்து ! வெளுத்ததெல்லாம் பாலாகாது ; என்பதை தமிழர்களே சிந்தியுங்கள் !






.


ஏன் இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்?






ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?






இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?






உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.





உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களைப்போய் பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள், முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.






அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.


எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன்... பேசினேன்... இப்படி அறிக்கைகள் பறக்கின்றன. மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள்.






ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போய் பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு(!) கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட இல்லை.






இதை பற்றி எழுதுங்கள், கவலைப்படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வெற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை எப்போது மாறும்? நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.




Saturday, May 28, 2011

பொஸ்னியர்கள் முன்னெடுப்புகளை போல தமிழர்களும் பிந்தொடரவேண்டும்

ரட்கோ மிலாடிஜ் கைது: மரபணுப் பரிசோதனை நடக்கிறது கலக்க நிலையில் இலங்கை !




பொஸ்னியா- சேபியர்களுக்கு எதிராக போர் நடைபெற்றவேளை 8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் என்னும் இராணுவத் தளபதி தற்போது கைதாகியுள்ளார். 1991ம் ஆண்டு முதல், இவர் மீது இன அழிப்புக் குற்றமும், போர் குற்றங்களும் சுமத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக புலம்பெயர் பொஸ்னியர்கள் இவரைக் கைதுசெய்யவேண்டும் என அழுத்ததைக் கொடுத்து வந்தனர். மெதுவாக ஐரோப்பிய ஒன்றியமும், பின்னர் ஏனைய நாடுகளும் செபனீசியாவில் இளைக்கப்பட்ட கொடுமைகளை ஏற்றுக்கொண்டது. பல நாடுகளில் கடந்த 20 வருடமாக இவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்கா தனது புலனாய்வைப் பயன்படுத்தி இவரைத் தேடிவந்தது. ஆனாலும் இவர் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.






ஒரு நகரத்தையே தனது படைகளைக் கொண்டு சூழ்ந்து, அதனை 44 மாதங்களாக சுற்றிவளைத்து, குடி நீர், மின்சாரம், உணவு என்பனவற்றைத் தடைசெய்து, அன் நகரம் மீது ஷெல் தாக்குதலையும் மேற்கொண்டார் ரட்கோ மிலாடிஜ். செபனீட்சியா என்னும் இடத்தில் சுமார் 8,000 பொஸ்னியர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் அதனை உதாரணம் காட்டியே இலங்கைப் பிரச்சனையும் சனல் 4 தொலைக்காட்சியில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது






இந் நிலையில் இன்று சேபியாவில் அருகே உள்ள கிராமம் ஒன்றில், இவரை சேபியப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக இலங்கை கலக்கத்தில் உள்ளது. காரணம் என்னவெண்றால், ரட்கோ மிலாடிஜை சர்வதேசம் தூற்றி வந்தாலும், அவர் கைதுசெய்யப்படமாட்டார் என இலங்கை உட்பட பல நாடுகள் எண்ணி வந்தது. ஆனால் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ரட்கோ மிலாடிஜ் மீது மரபணுப்பரிசோதனை நடத்தப்படுவதாவும், உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர் நேரடியாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளார் என்றும் பி.பி.சி செய்திச் சேவையூடாக அதிர்வு இணையம் அறிகிறது.






பொஸ்னியர்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சுமார் 20 ஆண்டுகள் கழித்தே நீதி கிடைத்திருக்கிறது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன அழிப்பு நடைபெற்று 20 ஆண்டுகள் ஆணாலும் தமது முன்னெடுப்புகளை இவர்கள் ஒருபோது கைவிட்டதில்லை. அதனை தமிழர்களும் பிந்தொடரவேண்டும். இலங்கையில் பாரிய இன அழிப்பு ஒன்று நடைபெற்று 2 வருடங்களே பூர்த்தியாகியுள்ள நிலையில், பலரும் சோர்ந்துபோய் உள்ளனர். தமிழர்கள் அனைவரும் இதனைப் பார்த்து கற்றுகொள்ளவேண்டியது நிறையவே உள்ளது எனலாம் ! 8000 பேரைக் கொண்றது ஒரு இன அழிப்பாகப் பார்க்கப்படும் இடத்தில் 40,000 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு நோக்கப்படவேண்டும், இல்லையேல் எவ்வாறான அழுத்ததை புலம்பெயர் தமிழர்கள் பிரயோகிக்கவேண்டும் தமிழ் அமைப்புகள் தீர்மானிப்பது நல்லது.

Sunday, May 1, 2011

ஐ.நா வில் இலங்கை

சுதந்திரம் பெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர்,1955 டிசம்பால் இலங்கை ஐ.நா வில் சேர விழைந்தது, அதில் அனுமதியூம் பெற்றது. அது முதல், அது சர்வதேச சமூகத்தின் செயலூக்கமுள்ள உறுப்பு நாடாக விளங்கி வருகிறது. இந்த உறவினால்தான் உலக அமைப்பில் தனது அங்கத்துவம் மூலம் நாடு பயனடைந்துள்ளது. இந்த உலக அமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பின் நெறிமுறைகளுக்கும் தரங்களுக்கும் இலங்கை பங்களிப்பைச் செய்திருக்கின்றது.





இந்தக் காலங்களில் பின்வரும் ஐ.நா. உறுப்புக்களில் இலங்கை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றது:







UN Global







Reform at United Nations







UN News







UN Secretary General







பொதுச் சபை



இலங்கை எல்லா பொதுச் சபைக் கூட்டங்களிலும் சமூகமளித்தது. 1976 பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தியது: 1978 படைக்குறைப்புக் கூட்டத் தொடருக்கான யோசனையை முன்வைத்தது. பொதுச் சபையே விவாதத்துக்கான ஐ.நா வின் பிரதான அரங்கு. எல்லா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கும் ஒரேயொரு ஐ.நா. உறுப்பு இது மாத்திரமே. ஓவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. சர்வதேசப் பாதுகாப்பு முதல் ஐ.நா வரவு-செலவுத் திட்டம் வரையில் ஐ.நா சாசனத்தில் உள்ள எந்த விடயம் பற்றியும் உறுப்பினர்கள் கலந்துரையாட முடியும். பொதுச் சபை அதன் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் பாரிந்துரைகளைச் செய்ய முடியும். ஆனால், இவற்றின் மீது செயல்படுவதற்கு நாடுகளை நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. பொதுச் சபை, வருடத்தின் செப்டெம்பர் நடுப்பகுதியில் இருந்து மூன்று மாதங்களுக்குக் கூடும்இ விசேட அவசரக் கூட்டத் தொடர்களையும் நடத்தும். அதன் வருடாந்தக் கூட்டத்தொடர் “பொது விவாதத்துடன்” ஆரம்பமாகின்றது. ,தில் ஒவ்வொரு அங்கத்துவ நாடும் உலக நிகழ்வுகளின் வாய்ப்பு பற்றிய அறிக்கையை விடுக்கும்.





பாதுகாப்புச் சபை



இலங்கை 1960க்கும் 1965க்கும் இடையே நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்தது. உலகளாவிய சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் கடமை பாதுகாப்புச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளைக் கொண்டது. அவை சீனா, பிரான்ஸ், ரஸ்யா, பிர்ட்டன், ஐக்கிய அமரிக்கா ஆகும். ஏனைய பத்து நாடுகள் சுழற்சி அடிப்படையில் தற்காலிக அங்கத்துவத்தைப் பெறுகின்றன. பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும், மோதல்களில் படைபலப் பிரயோகத்தை அங்கீகாரிக்க முடியும். அது அமைதி காக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்கின்றது.





செயலகம்



ஜயந்த தனபால செயலாளர்-நாயகம் பதவிக்காக இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு அபேட்சகராக இருந்தா.



அநேக இலங்கையர்கள் செயலகத்திற்காகப் பணியாற்றியூள்ளன. செயலகம், ஐ.நா வின் தினசார பணிகளை மேற்கொள்கின்றது, ஸ்தாபனத்தின் வேலைத் திட்டங்களையூம் கொள்கைகளையூம் நிர்வகிக்கின்றது, 170 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7,500 செயலக உத்தியோகத்தர்கள் செயலகத்துக்காகப் பணியாற்றுகின்றன.





பொருளாதார-சமூக மன்றம



இந்த மன்றம் ஐ.நா வின் பொருளாதார, சமூக, மனிதநேய, கலாச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அது மனித உரிமைகள், சமூக அபிவிருத்தி, தொழிநுட்பம், மருந்துப்பொருட்கள் மற்றும் பிற பிரச்சினைகளைக் கையாளும் ஆணைக்குழுக்களது பணிகளை மேற்பாHவை செய்கின்றது. அதன் உறுப்பினர்கள் 54 பேரும் பொதுச் சபையினால் தொவூ செய்யப்படுகின்றனர்.





சர்வதேச நீதிமன்றம



இந்த நீதிமன்றம் ஐ.நாவின் பிரதான சட்ட உறுப்பு: நாடுகள் அதனிடம் சமர்ப்பிக்கும் சட்டப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் கடமையைப் பெற்றிருக்கி;னறது. நெதHலாந்திலுள்ள த ஹேகில் அது செயல்படுகின்றது. நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளும் பொதுச் சபையினாலும் பாதுகாப்புச் சபையினாலும் தொவூ செய்யப்படுகின்றனர்.





அமைதி காத்தல



இலங்கை ஐ.நாவூக்குத் துருப்புக்களைப் பங்களிப்பு செய்யூம் 16வது மிகப் பொய நாடு. ஹயிற்றி, கோட் டி ஐவோயர், சூடான், மேற்கு சகாரா, மொசாம்பிக், திமோர் லெஸ்தே, லைபீரியா ஆகியவற்றில் 1000 இலங்கை ஐ.நா துருப்புக்கள் பணியாற்றி இருக்கின்றன.



ஐக்கிய நாடுகள் அமைதி காத்தல் செயற்பாடு மோதலினால் பிளவூண்டுள்ள நாடுகளுக்கு உதவூம் தனித்துவமான, இயக்காற்றல்மிக்க கருவியாகும். நீடித்த சமாதானத்துக்கான நிலைமைகளை அது உருவாக்குகின்றது. பாதுகாப்புச் சபை ஐ.நா அமைதி காத்தல் நடவடிக்கைகளை உருவாக்குகின்றது. அவற்றின் வாய்ப்பு, ஆணை ஆகியவற்றை வரையறுக்கின்றது, 1948ம் ஆண்டு முதலாவது அமைதி காக்கும் பணி நிறுவப்பட்டது. அது முதல் உலகம் முழுவதிலும் மொத்தம் 63 அமைதி காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





ஓப்பந்தங்கள் (உடன்படிக்கைகள்)



இலங்கை முக்கியமான ஐ.நா உடன்படிக்கைகள் பெரும்பாலானவற்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது (இலங்கை அங்கீகாpத்துள்ள உடன்படிக்கைகள் இங்கு தரப்பட்டுள்ளன).

இனப் பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1982 மார்ச் 20 முதல் நடைமுறையில் உள்ளது)

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (1998 ஜனவரி 03 முதல் நடைமுறையில் உள்ளது)

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1981 நவம்பர் 4 முதல் நடைமுறையில் உள்ளது).

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2003 ஜனவரி 15 முதல் நடைமுறையில் உள்ளது).

சித்திரவதை, மற்றும் பிற குரூர, மனிதாபிமானமற்ற வகையில் அல்லது தரக் குறைவாக நடத்துதல் அல்லது தண்டித்தலுக்கு எதிரான உடன்படிக்கை (1994 பெப்ருவரி 02 முதல் நடைமுறையில் உள்ளது).

சிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (1991 ஆகஸ்ட் 11 முதல் நடைமுறையில் உள்ளது).

ஆயூத மோதல்களில் குழந்தைகளை ஈடுபடச் செய்வது சம்பந்தமான சிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2002 பெப்ருவாரி 12 முதல் நடைமுறையில உள்ளது)

குழந்தைகளின் உரிமைகள் பற்றியூம் குழந்தைகளை விற்பனை செய்தல், குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவூ, சிறார் ஆபாசப்படவியல் பற்றியூமான உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (22 அக்டோபர் 2006).

வெளிநாடுகளில் தொழிலாளர்களாக இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (2003 ஜூலை 1 முதல் நடைமுறையில் உள்ளது).

ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (30 மார்ச் 2007ல் கைச்சாத்திடப்பட்டது.







தீர்மானம்



இந்து மாகடலைச் சமாதான மண்டலமாக்குவது பற்றி 1971ம் ஆண்டு இலங்கை முன்வைத்த யோசனை அங்கீகாரி க்கப்பட்டது. அதுபோலவேஇ வீடற்றவர் களுக்கான சர் வதேசக் குடியிருப்பு ஆண்டாக 1987ம் ஆண்டின் பிரகடனம், விசாகத்தை ஐ.நா விடுமுறை தினமாக 1999ம் ஆண்டு அங்கீகாரிக்கப்பட்டமை ஆகியனவூம் இலங்கை முன்வைத்த யோசகைகளாகும்.



ஐ.நா உறுப்பு அமைப்பு ஒன்றினால் ஏற்கப்பட்ட முறையான வாசகமே ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாகும். எந்தவொரு ஐ.நா. உறுப்பு அமைப்பும் தீர்மானங்களை விடுக்க முடியூம் என்றாலும் நடைமுறையில் பெரும்பாலான தீர்மானங்கள் பாதுகாப்புச் சபை அல்லது பொதுச் சபையினால் விடுக்கப்படுகின்றன. பொதுச் சபையின் தீர்மானம் ஒன்றுக்குப் பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் சபையின் எல்லா அங்கத்துவ நாடுகளும் வாக்களிக்கின்றன. இதனை நிறைவேற்றுவதற்குச் சாதாரணப் பெரும்பான்மை போதுமானது (ஆனால், விதிவிலக்காக முக்கியமான பிரச்சினைகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம்).





செயலாளர் நாயகம்



ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்குச் செயலாளர் நாயகம் தலைமை தாங்குகிறார். இது ஐக்கிய நாடுகள் சபையின் தலையாய உறுப்புக்களில் ஒன்றாகும். செயலாளர் நாயகம் உண்மையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராகவூம் அதன் தலைவராகவூம் விளங்குகின்றார். தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூன். இவர் தென் கொர்ரியாவின் முன்னாள் வெளியூறவூ அமைச்சர். அவர் 2007 ஜனவாரி முதலாம் திகதி பதவியேற்றார். அவரது முதலாவது பதவிக் காலம் 2011 டிசம்பர் 31ம் திகதி முடிவடைகிறது, அவர் மீண்டும் அப் பதவிக்கு நியமிக்கப்படும் தகுதி உள்ளவர். “இயக்காற்றலும் துணிவூம்” நிரம்பியதாக இருக்கக்கூடிய ஐ.நாவில. நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட விழையூம் ஒரு “பாலம் அமைப்பவராக” தாம் இருக்கப் போவதாய் அவர் கூறுகிறார். மத்தியக் கிழக்கு, சூடான், வட கொரியா ஆகியனவே தமது முன்னுரிமைகளாக அவர் இனங் கண்டுள்ளார்.





முகவர் நிறுவனங்களும் வேலைத்திட்டங்களும



அநேகமான இலங்கை ஊழியர்கள் முகவர் நிறுவனங்களிலும் ஆட்சி மன்றங்களிலும் பணிபுரிகின்றனர்.





ஏனைய உறுப்புக்கள்



இலங்கை பொருளாதார, சமூக மன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளது. சுகாதாரப் பராமாரிப்பு, போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக விளங்குகின்றார்.





ஐ.நாவில் புகழ்பூத்த இலங்கையர்கள்



காமினி கொரியா அங்டாட்டின் செயலாளர் நாயகமாக இருந்தார்.

ஜயந்த தனபால யூனிடிர்மற்றும் படைக்குறைப்பு விவகாரங்களில் ஆகவூம் மூத்தப் பதவிகளை வகித்தார்.

சி.வீரமந்திரி சர்வதேச நீதிமன்றத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

ராதிகா குமாரஸ்வாமி குழற்தைகள் மற்றும் மோதலுக்கான துணைச் செயலாளராக இருக்கின்றார்.

பாலித கொஹொன ஐ.நாவின் உடன்படிக்கைப் பிரிவூக்குத் தலைவர்.








Monday, April 25, 2011

நிஜங்களின் அம்பலம்: சாய்பாபா ரகசியம்?

நிஜங்களின் அம்பலம்: சாய்பாபா ரகசியம்? - பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சி (வீடியோ இணைப்பு)
 http://manithan.com/index.php?subaction=showfull&id=1303631988&archive=&start_from=&ucat=1&

24 Apr 2011

இந்தியாவின் மிகப் பிரபல சாமியார் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை சூழ்ந்துள்ள பாலியல் சர்ச்சைகள் குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சியின் வடிவம்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பெற்றவர் ஸ்ரீ சத்ய சாயிபாபா.




இந்த பக்தர்களுக்கு இவர் மண்ணில் மனித உருவில் வாழும் கடவுள். ஆனால் பிபிசி நடத்திய ஒரு புலனாய்வு சாய்பாபாவுக்கு கருநிழல் படிந்த ஒரு மறுபக்கம் இருப்பதாக தெரிவிக்கிறது.?

















24 Apr 2011



102056 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது

Saturday, April 16, 2011

தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்-பிரபாகரன்


பிரபாகரன்:

விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.



ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...



தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!



அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!



வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!



பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!



பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!



மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!



"ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."



"பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!



அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!



எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!



ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!



‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!



போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!



ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!



பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!



பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!



தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!



பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!



அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!



உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!



பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!



பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!



தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"



"ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!



மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!



‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!



விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.

Tuesday, March 15, 2011

காங்கிரசை ஏன் தோற்கடிக்க வேண்டும்?

தோழர்களே,
ஒன்றிணைவோம்,
இந்த கொலைகார கையை  கருவறுப்போம், 

ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1. திருத்தணி
2. பூந்தமல்லி (தனி)
3. ஆவடி
4. திரு.வி.க.நகர் (தனி)
5. ராயபுரம்
6. அண்ணாநகர்
7. தி.நகர்
8. மயிலாப்பூர்
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11. மதுராந்தகம் (தனி)
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஓசூர்
17. செங்கம் (தனி)
18. கலசப்பாக்கம்
19. செய்யாறு
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு மேற்கு
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. ஊட்டி
28. அவினாசி (தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. வேடசந்தூர்
32. சிங்காநல்லூர்
33. வால்பாறை (தனி)
34. நிலக்கோட்டை(தனி)
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. விருத்தாசலம்
40. மயிலாடுதுறை
41. திருத்துறைபூண்டி (தனி)
42. பாபநாசம்
43. பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறங்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி (தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திக்குளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57. வாசுதேவநல்லூர் (தனி)
58. கடையநல்லூர்
59. நாங்குநேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்.



காங்கிரசை ஏன் தோற்கடிக்க வேண்டும்?', கண்டிப்பாக யாருக்கும்தெரிந்திருக்காமல் இருக்காது.. மன்னிக்கவும், உணர்வுள்ள அனைத்துதமிழர்களுக்கும் தெரிந்திருக்கும், அறிவால் உறங்கி கொண்டிருக்கிறமடத்தமிழனுக்கு தெரிந்திருக்காது புரிந்திருக்காது..  ஆனால் என்ன செய்வதுஉணர்வற்ற தமிழனை விட உறங்குகிற அடிமைத்தமிழன் நாட்டில் அதிகம் தானே...!காங்கிரஸ் என்றால் என்ன? அது உருவானது எப்படி? (1885 - 2011 ஒரு சிறுதொகுப்பு)சுதந்திர போராட்ட்டத்தின் போது விடுதலைக்காக ஒரு இயக்கமாகஆரம்பிக்கப்பட்டது தான் 'காங்கிரஸ்'.. ஆனால் 'காங்கிரஸ்' என்பது சுயமாகசுயசிந்தனையற்ற காந்தியாலோ அல்லது நேருவாலோ ஆரம்பிக்கப்பட்டது அல்ல..'காங்கிரஸ்' என்பது அமெரிக்க சட்டமன்றத்தை குறிக்கும்.. அதன் அர்த்தம்'இருகட்சி ஆட்சி முறை' என்பதாகும்.. அச்சட்ட மன்றம் மேலவை, கீழவை என்றஇரு அவைகளை கொண்டது, இந்த இருகட்சி ஆட்சி முறையை பின்பற்றும்நாடுகளைத்தான் 'குடியரசு' நாடு என்பார்கள்.. 'குடியரசு' கொள்கையின்படிஆட்சிகளை எப்படி அமைப்பது என்றுதான் இதுவரை விவாதிக்கப்பட்டுவந்திருக்கிறதே தவிர மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை எப்படிதீர்க்கலாம் என விவாதிக்க பட்டது சரித்திரத்தில் இல்லை... தற்போதுஅமெரிக்காவில் 112 வது காங்கிரஸ் சட்டமன்ற தொடர் நடைபெற்று வருகிறது...உலக அளவை பொறுத்தவரை இருவகையான நாடுகளை காணலாம்1 .முதலாளித்துவம் (ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம், தனிவுடமை)2 .கம்யுனிசம் (மார்க்ஸிசம், சோசியலிசம், பொதுவுடைமை, தேசியவுடமை)அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய வல்லரசு நாடுகளில்அப்போதிலிருந்தே முதாளித்துவம் வேர் விட்டு வளர தொடங்கியது,முதலாளித்துவத்தின் அர்த்தம் "மக்களை முட்டாள்களாகவும் அடிமைகளாகவும்ஆக்கி பணக்காரர்களுக்காக பணக்காரர்களே ஆட்சி செய்யும் முறை" ஆகும்..இந்நாடுகளின் முக்கிய குறிக்கோள் ஏதேனும் இரு நாடுகளுக்கிடையில்பிரச்சினைகளை மூட்டிவிட்டு, அந்த பிரச்சினையை பிரிப்பது போல் வந்து அந்தஇடத்தை தனதாக்கி கொண்டு அந்நாடு மக்களை அடிமையாக்கி உரிமையை பறித்துமுட்டாள்தனத்தை ஊட்டி, அந்நாட்டு செல்வங்களை கொள்ளை அடிப்பதே ஆகும்...இப்படிப்பட்ட சூழலில்தான் 1885 ஆம் ஆண்டு உமேஷ் சந்திரா பானர்ஜி,சுரேந்திர பானர்கி, ஆலன் ஆக்க்டேவியன் குமே, வில்லியம் வேட்டர்புர்ன்,தாதாபாய் நௌரோஜி மற்றும் தின்சா வாட்சா ஆகியோரால் 'காங்கிரஸ்' எனும்இயக்கம் இந்தியாவில் தொடங்கப்பட்டது, இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜிதேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.முதல் கூட்டம் பம்பாயில் நடைபெற்றது...காங்கிரஸ் முதலில் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை.. முதலாளித்துவ நாடானஇங்கிலாந்து தனது பழக்கதோசத்தில் இந்தியாவையும் இலங்கையையும்  1900 -களில் ஆக்கிரமிக்க தொடங்கியது.. அப்போது இருந்த செல்வங்களையும் சுரண்டஆரம்பித்தது ஏகாதிபத்தியத்தியத்தை அறிவாளியாக்கி மக்களிடையே புகுத்தநினைத்தது... அப்போது சாதாரண இயக்கமாக இருந்த 'காங்கிரஸ்' இச்சூழ்நிலையைபயன்படுத்தி வெள்ளையர்களை வெளியேற்ற தொடங்கியது.. அப்போது இருந்த ஒரே ஒருஇயக்கம் காங்கிரஸ் மட்டும்தான்... அப்போது வெள்ளைக்காரன் இந்தியாவில்அறிமுகபடுத்திய ஒரு முறைதான் 'வரி'.. அதுதான் எளிமையாக வாழ்ந்தார்கள் எனகூறப்படும் பணக்காரர்கள் காந்திக்கும், நேருவுக்கும் பீதியைகிளப்பியது... (ஆனால் இன்றைய கல்விமுறையில் அவர்கள் தென்னாப்பிர்க்காவில்ஏற்பட்ட இனவெறிதான் அதற்க்கு காரணம் என கூறப்படுகிறது)..1915 -களுக்கு மேல் இந்தியாவின் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது..அப்போது தனது உரிமை 'வரி' என்ற பெயரில்  பறிபோகிறது என உணர்ந்த உணர்வாளன்காந்தி 1920 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராகதேர்ந்தெடுக்கபட்டார்.. அவர்களது முழுநோக்கமும் வெள்ளையர்களை விரட்டவேண்டும் என இருந்தாலும், சுதந்திரம் அடைந்ததற்கு காங்கிரஸ் என்பது ஒருதுளி கூட காரணம் இல்லை என்பதுதான் உண்மை..காங்கிரசின் கொள்கை என்னவென்றால் "முதலாளித்துவத்தை எதிர்க்கமுதலாளித்துவத்தை கையில் எடுப்போம்" என்பதுதான்... இப்படி முதலில்இருந்தே முட்டாளாக விளங்கியது காங்கிரஸ் கட்சிதான்.. அரிசியை உற்பத்திசெய்தவனை தெரியாது ஆனால் அதனை வைத்து வியாபாரம் செய்யதவனை தெரியும்என்பதுதான் தற்போதைய இந்திய மக்களின் தேச உணர்வு..ஆம், மேற்கூறியபடி சுதந்திரம் பெற காங்கிரஸ் ஒரு துளி கூட காரணம் இல்லை..அதற்க்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இயங்கிய படைகளும்,இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடியும் தான் காரணம்... நேதாஜிகாங்கிரசையும் முதலாளித்துவத்தையும் கடுமையாக எதிர்த்தவர்..காங்கிரசுக்கு எதிராக 'பார்வார்டு பிளாக்' என்ற இயக்கத்தை தொடங்கினார்..ஆனால் பலனை எதிபார்க்காத அக்கட்சி சுதந்திர போராட்டத்தில்முழுக்கவனத்துடன் ஈடுபட்டதால் அக்கட்சியை விளம்பரம் செய்து பெரிதாக்கஇயலவில்லை... ஆனால் முதலாளித்துவம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல்மற்றவர்களின் உழைப்பை இவர்கள் (காங்கிரஸ்) பயன்படுத்தி விளம்பரம் செய்துதன்னை ஒரு பெரிய கட்சியாக உருவெடுத்து கொண்டார்கள்"முதலாளித்துவம் இருந்தால் நாட்டில் ஏழைகள் முன்னேற முடியாது, நாடுசுடுகாடாகிவிடும், முதலாளித்துவம்தான்  முக்கியமென்றால் காங்கிரஸ்வெள்ளையர்களை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை " - நேதாஜி"எனது நாட்டின் முதலாளிகள் இரக்க மனம் உடையவர்கள், ஆகையால் ஏழைகளுக்குஎந்த பிரச்சினையும் வராது" - காந்திநேதாஜி உட்பட அவரது வழியில் விடுதலைக்காக போராடியவர்கள் துணிந்து உயிரைவிட்டதாலும் , அவரது வழியில் வந்த ஆட்கள் பலம் குறைந்தது... விடுதலைஅடைந்த நேரத்தில் வெண்ணைக்காக காத்திருந்த குரங்கைப்போல் காங்கிரஸ் பதவிஏற்று கொண்டது... சட்டமேதை என போற்றப்படும் அம்பேத்காரும் காங்கிரஸ்ஆதரவாளர் என்பது கசப்பான செய்தியே.. ஆனால் 'இந்திய அரசியலமைப்பு சட்டம்'இயற்றப்பட்டது அம்பேத்காரால் அல்ல.. இயற்றப்பட்டது காங்கிரஸ் கட்சியைசேர்ந்த பார்ப்பனர்களால்.. அதனை தொகுத்த்வர்தான் அம்பேத்கார் (சட்டம்அனைவராலும் இயற்றப்பட்டது என அனைவருக்கும் கணக்கு காட்ட காங்கிரஸ் போட்டதிட்டம் இது)இப்படி சுதந்திரம் அடைந்த உடனே அரசியல் என்ற நன்னீரை சாக்கடை என பெயர்மாற்றம் செய்ய விளங்கிய அடிப்படை கட்சியும் காங்கிரஸ்தான்.."எனக்கு முழு சுதந்திரம் இருந்தால், இந்த இந்திய அரசியலமைப்பு சாசனத்தினைதீயிட்டு கொழுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்" - அம்பேத்கர் (1950 ஆம்ஆண்டு சனவரி 26 ஆம் நாள், இந்திய பாராளுமன்றத்தில்)அப்போது நேரு மக்களாட்சி என்று ஆரம்பித்து வைத்த மன்னர் ஆட்சியைத்தான்இன்றும் காங்கிரஸ் செய்கிறது.. அக்கட்ச்சிக்காகவும் மக்களுக்காகவும்உழைத்த காமராஜர் மறைய காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம் என்பது மறக்கமுடியாத உண்மை.. சுதந்திரத்திற்கு பிறகும் தமிழகத்தில் காங்கிரஸ் 1967வரை ஆட்சி செய்தது..அப்போது தமிழகத்தில் காங்கிரசையும், அதன் பொறுப்பாளர் ராஜாஜியையும்பெரியார் கடுமையாக எதிர்த்து விமர்சித்தார்.."காங்கிரசை ஆதரிப்பவர்களும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் ஓரினத்தைசேர்ந்தவர்கள்தான், அவர்களை ஆதரிப்பவர்கள் தன்னுரிமை தெரியாதசுயசிந்தனையற்ற முட்டாளாகவோ அல்லது சுயநலமிக்க பணக்காரனாகவோஇருப்பார்கள்" -  பெரியார்சுயசிந்தனையும் பகுத்தறிவில் ஒன்றாக கருதிய பெரியார் "திராவிட கழகம்"என்ற இயக்கத்தை உருவாக்கினார்.. அவ்வியக்கம் கம்ம்யுனிசத்தை ஆதரித்ததால்காங்கிரசுக்கு எதிரியாக விளங்கியது.. திராவிட கழகம் ஒரு அரசியல் இயக்கமாகஇருக்காது, அது ஒரு சீர்திருத்த இயக்கமாகத்தான் இருக்கும் என பெரியார்அறிவித்தார்... ஒரு நல்ல விசயத்தில் சிலர் ஆதாயம் தேடி தன்னை உயர்த்திகாட்டி கொள்வது போல்... திராவிட கழகத்தில் ஆதரவோடு "திராவிட முன்னேற்றகழகம்" என்ற அரசியல் கட்சி உதயமானது.. இது முழுக்க முழுக்க திராவிடகழகத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டது..."தன்மானம், சுயமரியாதை ஆகியவை எங்களது முக்கிய கொள்கைகள், செத்தாலும்நானோ அல்லது எங்களது கட்சியோ காங்கிரசை ஆதரிக்காது" - அண்ணாஇன்றைய நிலை?  1. "போபர்ஸ் பீரங்கி ஊழல்" என முதல் மெகா ஊழலை தொடங்கி வைத்தும்காங்கிரஸ் கட்சிதான்...  2.  நல்லாட்சி செய்கிறோம் என்ற பெயரில் தன்நாட்டு மக்களை கொன்றுகுவித்து தாலாட்டுவதும் இக்கட்ச்சிதான்...  3. இந்தியாவிலும் அனைத்து விலைகளையும் ஏற்றி காரணம் கட்டுவதில்சிறந்ததும் இக்கட்சிதான்..  4. ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்கிறதுஎனதெரிந்தும் அவர்களை விரட்டாமல் அப்பாவி மக்களை கோலும் வீரமிக்ககட்சிதான் காங்கிரஸ் கட்சி...  5. சுவிஸ் வங்கியில் அதிகமாக கணக்கு வைத்திருக்கும் கட்சியும்இக்கட்சிதான்...  6. மன்னர் ஆட்சி என்ற அர்த்தத்தை புரிய வைத்த கட்சியும் இதுதான்..  7. முட்டாள்களை அமைச்சர்களாகவும் தொண்டர்களாகவும் கொண்டு மக்களைமுட்டாள் ஆக்குவதும் இக்கட்சிதான்  8. எதிரிகளுக்கு மட்டும் "சட்டம் தனது கடமையை" செய்கிறது என சொல்வதுகாங்கிரஸ் கட்சி  9. ஏழைகளை உருவாக்குவதில் முன்னோடியாக இருக்கிறதுஆனால் இக்கட்சிக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை இன்றைய தி.மு.கஇக்கட்சியின் சிந்தனையற்ற தொண்டர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மைசம்பவத்தை சொல்லலாம், பிரியங்கா காந்திக்கு குழந்தை பிறந்த போது, "அடுத்தபிரதம மந்திரி பிறந்து விட்டார்" என இனிப்பு கொடுத்து கொண்டாடியவர்கள்காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்... சரி இவர்கள் இப்படி என்றால்சுயசிந்தனையையும் தன்மானத்தை பற்றியும் பேசும் தி.மு.க தொண்டர்கள் இதுபோன்ற சம்பவங்களில் "வாழ்க.. ஒழிக" கோசத்தை போட்டு காங்கிரசுக்கு ஒருபடிமேல் உள்ளது"ஆண்ட இனம் எப்படியடா அடிமையானது...? தன்மானத்தை இழந்தது?"வரலாற்றுக்குள்ளே தேடு.அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.

Friday, January 21, 2011

நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதா ? வரவேற்கத்தக்கதா ?......

வணக்கம் தோழர், மும்பையில் சன் டிவியின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன் , தலைப்பு : நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதா ? வரவேற்கத்தக்கதா ?......
முக்கியமாக, இந்த தேர்வு கண்துடைப்பு என்பது தெரியும் ..... அதில் பதிவு பண்ணவே சென்றேன் ....
நான் எடுத்து கொண்ட தலைப்பு நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதே !!
முதல் சுற்றில் அம்பேத்கர் பனியன் அணித்து நான் பேசியது ..

நாகரிக சமூகம் என்றும், அறிவியல் முன்னேற்றம் என்றும், வல்லரசு என்று மார்தட்டினாலும், இந்தியச் சமூகம் இன்றும் இந்துத்துவ அடிப்படையில் மனிதர்களை நடத்துகின்றது என்பதையும், அரசுகளும் அதன்படிதான் செயல்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்தவைகள்தான். இப்படியான ஒன்றுதான் மனித மலத்தை மனிதர்களையே கையால் அள்ளளும் கொடுமை. இந்த இழிதொழில்களிலும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையே ஈடுபடுத்தும் வன்கொடுமையும் நிகழ்கின்றது...
நாகரிக சமூகம் என்றும், அறிவியல் முன்னேற்றம் என்றும், வல்லரசு என்று மார்தட்டினாலும், இந்தியச் சமூகம் இன்றும் இந்துத்துவ அடிப்படையில் மனிதர்களை நடத்துகின்றது என்பதையும், அரசுகளும் அதன்படிதான் செயல்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்தவைகள்தான். இப்படியான ஒன்றுதான் மனித மலத்தை மனிதர்களையே கையால் அள்ளளும் கொடுமை. இந்த இழிதொழில்களிலும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையே ஈடுபடுத்தும் வன்கொடுமையும் நிகழ்கின்றது.
நூற்றாண்டுகள் கடந்தாலும் கழியாத கலையாத சாதிவெறி.. ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசினேன். இரண்டாம் சுற்றுக்கும் தேர்வானேன் ..... மேலே குறிப்பிட வற்றை பேச கூடாது என நிபந்தனையுடன்.....மேலும் அம்பேத்கர் பனியன் அணித்து வரகூடாது என நிபந்தனையுடன் .....இரண்டாம் சுற்றில் பேசிய நாகரிக வளர்ச்சி வரவேற்கத்தக்கதே அணி சார்ந்தவர்கள் ..... நகரத்தின்
மெட்ரோ வளர்ச்சி , கட்டிடம் வளர்ச்சி என பேசி கொண்டே போனார்கள் ...
இதே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ....நகரத்தின்
மெட்ரோ வளர்ச்சி , கட்டிடம் வளர்ச்சி என் சொல்லி கொண்டு வீட்டு வசதி திட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். ஆனால் நகர்ப்புற ஏழை மக்களுக்கும், குடிசையில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தில் அனுமதிக்கப்படாது..... என பேசிய கொண்டே போனேன் ......நான் முன்றாம் சுற்றிலிருந்து நிக்கபட்டேன் .....

உங்கள் பார்வையில் நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதா ? வரவேற்கத்தக்கதா ?......

Sunday, January 2, 2011

உலக கோப்பை 2011 ல் சிறிலங்கா கிரிக்கெட் (துடுப்பாட்ட) அணியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்

வரும் 2011 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, வங்கதேசம், இலங்கையில் நடக்கிறது





ஐ.சி.சி., சார்பில் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் வரும் 2011ல் நடக்கிறது.
இத்தொடர் பிப்ரவரி 19 ம் தேதி முதல் ஏப். 2 வரை நடக்க உள்ளது. மொத்தம் 14 அணிகள் குரூப் "ஏ' மற்றும் "பி' பிரிவுகளாக இத்தொடரில் மோத உள்ளன.
"பி' பிரிவில் இந்தியா: இத்தொடரின்"ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளும், "பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
முதல் மோதல்: இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்க உள்ளன. இதில், இந்தியா 29 (ஒரு காலிறுதி, ஒரு அரையிறுதி மற்றும் பைனல்), இலங்கை 12 (ஒரு அரையிறுதி, ஒரு காலிறுதி), வங்கதேசம் 8 (2 காலிறுதி) போட்டிகளை நடத்துகின்றன. பிப்ரவரி 19 ம் தேதி தாகாவில் நடக்க உள்ள முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி (குரூப் "ஏ'), பங்கேற்கும் 6 லீக் போட்டிகளும், இலங்கையில் நடக்க உள்ளன. தொடரின் பைனல் போட்டி ஏப்.2 ம் தேதி மும்பையில் நடக்க உள்ளது.




சிறிலங்காவில் போர்ச் சூழலும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து இடம் பெற்று வரும் சூழ்நிலையில் அனைத்து மக்களும் அமைதியாக வாழும் நிலையை ஏற்படுத்துவது தான் முக்கியம்.



உலக கோப்பை 2011 ல் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.



விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்பது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமானாலும், அது ஒன்றோடு ஒன்று பிணைந்தே இருக்கிறது என்பதனையும் எவரும் மறுப்பதற்கில்லை.உலக வரலாற்றில் அரசியலும் விளையாட்டும் இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம்.தென்னாப்பிரிக்க இனவாத அரசியலை ஒழிப்பதற்கு அந்நாட்டின் விளையாட்டுப் புறக்கணிப்பு மிகவும் துணைபோனது அண்மையில் உலகில் மிகவும் பிரபல்யமாக நடந்தேறிய ஒரு விடயம்.அதுவும் முக்கியமாக மேல்நாடுகளில் இந்த புறக்கணிப்பு பரவலாக விவாதிக்கப்பட்ட விடயம். இங்கு அரசியலும் விளையாட்டும் கலந்து ஒரு நன்மையான முடிவை தந்தமையானது, விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்ற விவாதத்தை வலுவற்றதாகச் செய்துள்ளது.தென்னாப்பிரிக்க நாட்டின் இனவாத அரசியலுக்கு எதிரான புறக்கணிப்பு பல அரங்குகளில் நடைபெற்றது. மொன்றியோல் நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஒலிம்பிக் போட்டியை 22 ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிப்புச் செய்தன.அங்கு ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவோடு விளையாட்டுப் போட்டிகள் நடத்திய நியூசிலாந்து நாடும் பங்கு பற்றியதனையே ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவோடு ஏனைய நாடுகள் விளையாட்டுத் தொடர்புகளை வைத்திருப்பதில்லை என்று 1977 இல் கிலெனீகல் என்ற இடத்தில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இது போல் வேறு பல அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுத் தொடர்பை வெவ்வேறு நாடுகளும் துண்டித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.உதாரணமாக 1980 ஆம் ஆண்டில் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணிப்புச் செய்தது. மொஸ்கோ ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பாகவே இதனை அமெரிக்கா செய்தது.ஈராக் நாடு 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதனை ஆசிய ஒலிம்பிக் குழு தடை செய்தது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தனை எதிர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தென்னாப்பிரிக்காவின் இனவாதமற்ற விளையாட்டுக் குழுவின் தலைவரான ஜோ இபிரகிம் விளையாட்டுப் புறக்கணிப்புக்கூடாக எப்படி அரசியலை மாற்றலாம் என்பதனை பின்வருமாறு கூறுகிறார்,"விளையாட்டுப் புறக்கணிப்பு ஒரு நாட்டை அது பாராமுகமா இருக்கும் அதனுடைய அரசியல் விடயங்களில் மாற்றங்கள் செய்ய செய்வதற்கு மிகவும் உதவக்கூடியது ஒன்று. உலகில் பல இடங்களில் இப்படியான புறக்கணிப்பு நியாயமானதாக இருக்கும்".தென்னாப்பிரிக்க விளையாட்டுப் புறக்கணிப்புப் பற்றி இன்று பல புத்தகங்கள் வெளிவந்திருப்பதும் இதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது.ஒரு நாட்டின் விளையாட்டு அந்நாட்டின் அரசியலோடு எப்படி சார்ந்திருக்கிறது என்பதனை பல கோணங்களில் இருந்து ஆராயலாம்.ஒரு நாட்டின் தேசியம் எப்படி விளையாட்டின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பது அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பை சுட்டிக்காட்டும் ஒரு விடயம். இன்னும் ஆழமாக பார்க்கப் போனால், அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பு பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானிகள் ஆராயும் விடயமாக மாறி வருவதனை அவதானிக்கலாம்.இது, உலக அரங்கில் விளையாட்டும் அரசியலும் எவ்வாறு பிணைந்திருக்கின்றது என்பதனையும் அது எவ்வளவு முக்கியதான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது என்பதனையும் காட்டுகிறது."போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும்" (More Than a Game: Sports and Politics by Martin Barry Vinokur) என்ற புத்தகத்தில் மாட்டின் வினோகர் பின்வருமாறு கூறுகிறார்,"நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றது. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது".மேல் நாடுகளில் விளையாட்டு இன்று மிகவும் முக்கிய ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆகையால் இது ஒரு அரசியல் கருவியாக உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களும் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் விளையாட்டு பிரேயோகிக்கப்படும் விதங்களை மேல்நாட்டவர் அங்கும் அரசியலும் விளையாட்டும் பிணைந்துள்ளது என்ற அதே கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார்கள்.இலங்கைத்தீவில் துடுப்பாட்ட விளையாட்டு இன்று எடுத்துள்ள முக்கியத்துவத்தை இந்தப் பின்னணியில் ஆராந்து பார்க்கலாம். முக்கியமாக சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் அண்மைய வெற்றிகளை தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் தமிழ்த் தேசியத்தை தவறாக மதிப்பிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.பிரபல எழுத்தாளரான மாமனிதர் சிவராம்; (தராக்கி) ஒரு கட்டுரையில் சிறிலங்கா துடுப்பாட்டம் தமிழ்த் தேசியத்திற்கு எப்படி ஆபத்தானதாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.அண்மையில் பல அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அணியின் வெற்றிகளையும், சில தமிழர்கள் அந்த அணிக்குக் கொடுக்கும் ஆதரவையும் மிகைப்படுத்தி இது தமிழ்-சிங்கள ஒற்றுமைக்கு வழிவகுக்குமா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்.இதன் மூலம் மேல் நாட்டவர், தமிழர் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கட் மூலம் தமிழ் தேசியத்தை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.இவ்வாறே ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுக்குப் பின்னரும் தமிழ், சிங்கள சமூகங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அனைத்துலக சமூகம் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன என்பது வரலாறு.அரசியலும் விளையாட்டும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.



நாகரீகமே தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்-புறக்கணிக்க வேண்டும்: கங்குலி . புதன்கிழமை, ஆகஸ்ட் 18, 2010(http://thatstamil.oneindia.in/news/2010/08/18/srilanka-cricket-players-randhiv-ganguly.html)

இலங்கையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடுத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல இலங்கை அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலுகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். ஒரு லட்சம் கையெழுத்துக்கள் குவிக்க உறுதி கொள்ளுங்க தோழர்களே... போராட்டம் ஆரம்பிக்கட்டும். நாம் வெல்வோம்...

மே பதினேழு இயக்கம் .... தொடர்புக்கு contact .may17@gmail .com ,
Sign the Petition: Boycott of Sri Lanka Cricket 2011 (World Cup)
Targeting: kerala cricket club (kerala cricket club ), Trinidad & Tobago Cricket Board (TTCB) (Trinidad & Tobago Cricket Board (TTCB)), saurastra club (saurastra club),
see more...kerala cricket club (kerala cricket club ), Trinidad & Tobago Cricket Board (TTCB) (Trinidad & Tobago Cricket Board (TTCB)), saurastra club (saurastra club), BCCI (BCCI ), Scotland Cricket team (Scotland Cricket team ), mumbai cricket club (mumbai cricket club), Chandrakant S. Naik (Chandrakant S. Naik), Jamaica Cricket Association (Jamaica Cricket Association), Vilasrao Deshmukh (Vilasrao Deshmukh), BCCI (BCCI), Hemant Waingankar (Hemant Waingankar), english coaches club (english coaches club ), Jamaica Cricket Association ( Jamaica Cricket Association), BCCI (Newzeland Cricket club ), Leeward Islands Cricket Association (LICA) (Leeward Islands Cricket Association (LICA)), mumbai cricket club (mumbai cricket club), orissa cricket club (orissa cricket club ), vengsarkar (vengsarkar), West Indies Cricket club (West Indies Cricket club ), Jamaica Cricket Association ( Jamaica Cricket Association), rajastan cricket club (rajastan cricket club ), Hon. Sharad Pawar (Hon. Sharad Pawar), Guyana Cricket Board (GCB) (Guyana Cricket Board (GCB)), Prof. Ratnakar Shetty (Prof. Ratnakar Shetty ), BCCI (BCCI ), and tamilnadu club (tamilnadu club )
Started by: MAY17 movement
We the serious and consistent spectators and lovers of Cricket in India and abroad, do endorse the “Vision of Success” adopted by the ICC that binds all Cricket playing Member States in accepting Cricket, As a leading global sport, cricket will captivate and inspire people of every age, gender, background and ability while building bridges between continents, countries and communities.
This we say, should not be left as a nice and a neat piece of ornamental literature on ICC documents. This has to be translated into reality, both on the playing field and outside, in “building bridges between continents, countries and communities.”
The most apt and sportsman like intervention for such noble practise in sports, is to play cricket with teams that represent truly inclusive and plural societies. We stress here, the ICC, the BCCI and all other member States should stick to and continue the principle and spirit in which it treated the “former apartheid South African regime of the exclusive Whites”, when playing cricket, in this modern civilised world.
The Gleneagles Agreement of 1977, which stated [quote] Heads of Government reaffirmed that apartheid in sport, as in other fields, is an abomination and runs directly counter to the Declaration of Commonwealth Principles which they made at Singapore on 22 January, 1971.[unquote] is what needs to be adhered to, in selecting countries and regimes, to be sponsored and fraternised.
With that, we raise the question, how could the ICCI, the BCCI and other member countries continue to play cricket with Sri Lanka ?
The Sri Lankan State and its government run parallel with the former apartheid South Africa in its treatment of Tamil people, who were decimated in a war that left well over 100,000 civilians killed, where abductions, torture and extra judicial killings were continued with impunity, where disappearance was the order of the day and over thousands are yet to be accounted for, an estimated 14,000 youth are held under detention as “hardcore LTTE combatants” without any information given out to their relations and guardians, where the PTA and the Emergency regulations are being systematically used for suppression.
No less tormenting is the treatment still meted out to the 300,000 displaced Tamil people in the North and the Vanni who were initially kept behind barbed wire camps, with no clear and proper reconciliation and resettlement programme yet announced by the government.
Let us not forget that this Sri Lankan regime is under tremendous pressure to face an independent international investigation for serious allegations on war crimes and crimes against humanity. The international human rights organisations and the international community keeps pressure on the Sri Lankan regime to face inquiry, for the human tragedy that was rolled out during at least the last phase of the war, in year 2009. The EU decided to withdraw its GSP “Plus” facility for all Sri Lankan apparel imports into the EU market, for not respecting Human Rights in the country.
With that let us also record the following. Muthiah Muralidaran, though a Tamil from the Indian origin plantation sector in the Central hill country, was only an “accident” and came from a well established Sinhala school in Kandy and not from a Tamil or Muslim school. While his business family could afford to sustain him financially, that was a major reason why he could promote himself into club cricket and as a national player with exceptional skills and talents. “Accidents” of that magnitude can not happen often and would not, for Tamil youth from the North – East and the Vanni.
Cricket in Sri Lanka is a wholly Sinhala sports ..
There are no functioning cricket clubs in any Tamil area ..
Tamil Union Sports Club in Colombo founded over 65 year ago is now a Sinhala dominated club with only Muralidaran as a Tamil player ..
No Tamil schools, even outside the conflict areas were promoted and encouraged to play cricket
P. Saravanamuttu, the Chanmugams, were all during the period of “Ceylon” and after the country became “Sri Lanka” in 1972, Muralidaran and Russel Arnold are the only names to mention.
Arnold too was never considered a Tamil, coming from a very respectable, Catholic School in Colombo and being more a member of the urban, English speaking middle class than Tamil.
Even Muslim players are now far in between, with Mubarak and Mahroof being the only players, again coming from very influential Colombo Sinhala schools. In fact Mubarak comes from mixed Sinhala parenthood in the elite Colombo circle.
No Muslim school is now playing serious cricket. Not even the famous Colombo Zahira College that was long time ago, a very popular sports playing school.
We therefore raise the question, should Sri Lanka be accommodated in regional and international cricket tournaments ? We don't accept Sri Lanka can qualify the ICC statement “Vision of Success”. They are far more racist as a nation than most racist and suppressive regimes in the world. Keeping Sri Lanka in ICC accepted tournaments would undermine even the “Anti Racism Code” of the ICC.
We therefore call upon all ICC member States and the BCCI in particular to boycott Sri Lanka as a venue at the forthcoming World Cup tournament and also call upon all T20 franchise clubs/companies to refrain from including Sri Lankan players, from year 2011.
http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011
Muthamizh
Chennai

Wednesday, December 29, 2010

'நான் நக்சலைட் அல்ல... மனித துன்பங்களை தாங்க மாட்டேன்



'நான் நக்சலைட் அல்ல... மனித துன்பங்களை தாங்க மாட்டேன்!' - ஆயுள் தண்டனை பெற்ற மக்கள் டாக்டர் பினாயக் சென்!



பினாயக் சென்... இவர் ஒரு மருத்துவர். சத்தீஸ்கர் மாநிலத்தில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார். அந்த நல்ல காரியத்தை செய்து வந்தபோது அவரைப் பலருக்கும் தெரியவில்லை. மனித உரிமைப் போராளியாக மாறி, சில கருத்துகளைச் சொன்ன போது இந்தியா முழுமைக்கும் அறிமுகம் ஆனார். இப்படிப் பட்டவரை சும்மா விடுவார்களா? 'நக்சல்' என்று குற்றம் சாட்டி சிறையில் அடைத்த அரசு, இப்போது ஆயுள் தண்டனையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது!
'உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மன் விருது பெற்ற முதல் இந்தியர்' என்பதைவிட, 'தெற்காசியாவில் இந்த விருதை வென்ற முதல் வெற்றியாளர்' என்பதுதான் பினாயக் சென்னின் கூடுதல் சிறப்பு. சத்தீஸ்கர் மாநில மக்களின் சுகாதார மற்றும் ஊட்டச் சத்து நிலையைக் கண்காணித்து நல்லதொரு ஆரோக்கிய அறிவுரையை வழங்கியது மட்டுமல்லாமல், பழங்குடி மற்றும் வறுமையில் வாழும் நபர்கள் மீதான தாக்குதல் களைத் தடுத்து மனித உரிமைப் போராளியாகவும் தன்னை உருவாக்கிக்கொண்டார்.
வட கிழக்கு மாநிலங்கள் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் பெரும்பாலும் இருக்கின்றன. பழங்குடி மக்களில் ஒரு குறிப்பிட்ட அணியை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து, மாவோயிஸ்ட்களுடன் மோத விட்டது சத்தீஸ்கர் அரசாங்கம். இந்தக் குழுவுக்கு 'சல்வா ஜுடும்' என்று பெயர். இந்த குரூப் பல்வேறு கொடுமைகளைச் செய்ததாக மனித உரிமையாளர்கள் புகார் சொன்னார்கள்.
அபரிமிதமாக இருக்கும் இயற்கை வளங்களை சத்தீஸ்கர் அரசு, பன்னாட்டு நிறுவனங் களுக்குக் கூறுபோட்டு விற்பதைத்தான் நாங்கள் எதிர்க்கி றோம் என்று மாவோயிஸ்ட்கள் சொன்னார்கள். அதன் முக்கியமான ஒரு தலைவர்தான் நாராயண் சான்யால். அவருக்குப் பொருளாதாரரீதியாக உதவியவர் பிஜுஷ் குஹா என்பவர். நாராயண் காட்டுக்குள் இருந்து போராட... குஹா கருத்தியல்ரீதியாக வெளியில் இருந்து அவருக்கு உதவினார்.
இந்த நாராயண் மீது நல்ல அபிப்ராயம்கொண்டவராக டாக்டர் பினாயக் சென் இருந்தார். சத்தீஸ்கர் மாநிலப் பழங்குடி மக்களுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனைகளைத் தந்து வந்ததால், நாராயணனுடன் நெருக்கமாக இருந்தார்.
நாராயண் சான்யால், அம்மாநில அரசால் கைது செய்யப்பட்டபோது, சிறையில் சென்று சிகிச்சை அளித்த மருத்துவர்தான் இந்த பினாயக் சென். 'மருத்துவம் பார்க்க சிறைக்குள் வந்த பினாயக் சென், வெளியே என்ன நடக்கிறது என்ற தகவலை எடுத்து வந்து நாராயண் சான்யாலுக்கு சொன்னார். மாவோயிஸ்ட் இயக்க நடவடிக்கைகளை விவரித்தார்.
அப்போது சில கடிதங்களை பினாயக் சென்னிடம் நாராயண் கொடுத்தார். அதை அவர் வாங்கிச் சென்று பிஜுஷ் குஹாவிடம் தந்தார்...' என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு 2007-ம் ஆண்டு மே 14-ம் தேதி, 'சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' மற்றும் 'சத்தீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்புச் சட்டம்' ஆகியவற்றின் கீழ் பினாயக் சென் கைதானார்.
'மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்' என்று இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பான இந்தக் கைதில் இருந்து பினாயக்கை விடுதலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் சத்தீஸ்கர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். 'நக்சல்களுடன் தொடர்புடையவர் இவர்' என்று அரசு சார்பில் பதில் அனுப்பியது. இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையிலும் சென் அடைக்கப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது வீட்டில் பல முறை சோதனைகள் செய்தும் வலுவான ஆவணங்களோ, சாட்சியங்களோ அரசுக்குச் சிக்கவில்லை... அதனால் வீட்டில் இருந்த கம்யூனிஸ புத்தகங்கள் மற்றும் சில கடிதங் களை மட்டுமே ஆதாரமாக வைத்திருக்கிறார்கள்என்றே மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லி வந்தார்கள். இந்நிலையில் அவர் மீதான வழக்கின் விசாரணை கடந்த வாரத்தில் முடிந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது.
'அரசுத் தரப்பு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து, ஆயுள் தண்டனை கொடுத்தது தவறு. மாபெரும் அநீதி' என்று நோபல் பரிசு பெற்ற நோம் சாம்ஸ்கி போன்ற அறிவுஜீவிகளும் அருந்ததி ராய் போன்ற மனித உரிமைப் போராளிகளும் கூறி வருகின்றனர்.



"ஒரு தனி நபரால் நாட்டில் வன்முறை போன்ற அசம்பாவிதங்கள் நடந்து, அது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே... அரசாங்கத்துக்கு எதிராக இயங்கினார் என்ற பிரிவில் தண்டனை தர முடியும். ஆனால், பினாயக் விஷயத்தில் அப்படி ஏதுமே இல்லை!" என்கிறார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.



"லட்சக்கணக்கான மக்கள் செத்துப்போன போபால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இரண்டு வருட சிறை. ஆனால், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் நலனுக்குச் செலவிட்டவருக்கு ஆயுள் தண்டனையா?" என்று கொந்தளித்து இருக்கிறார் அருந்ததி ராய்.
நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பினாயக் சென் தருகிற பதில் இதுதான்... "நான் நக்சல்களை ஆதரிக்கவில்லை. ஆனால், மனித உரிமைகளுக்காகப் போராடுகிறேன்! ஒரு மனிதன் துன்பப்படுவதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது!" என்பது மட்டுமே.
பினாயக் சென் மீதான ஆயுள் தண்டனை தீர்ப்பை மறுபரிசீலனை செய்து, அவரை விடுவிக்கவேண்டும் என்பதே உலகம் முழுதும் உள்ள மனிதநேய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!



ஜூனியர் விகடன் 02-ஜனவரி-2011

=====

Sign the Petition

http://www.petitiononline.com/sen2010/petition.html

Friday, December 24, 2010

தந்தை பெரியார்- அம்பேத்கர் சிந்தனைகள்'

நினைவு நாள் சிந்தனைடிசம்பர் 24
தந்தை பெரியார்தம் நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக்குறிப்பு நாளே தவிர, அன்று மட்டும்தான் நினைக்கப்படும் தலைவர் அல்ல,அவர்!காற்றுக்கென்று குறிப்பிட்ட நாள் உண்டா? கருத்துக் கதிரவன் தந்தைபெரியார் மானுட சமூகத்தில் கரைத்துவிட்ட சகாப்தவாதி.வருணம் என்று சொன்னாலும், வருக்கம் என்று சொன்னாலும், பாலியல் நீதி என்றுவந்தாலும் வாழ்வின் சகல பரப்புகள் மீதும் தன் சித்தாந்தத்தை ஆழமாகச்செதுக்கிச் சென்றுள்ள தலைவருக்கு ஒரு நாள் மட்டும் நினைவு நாளாக இருக்கமுடியாது.அதுவும் மத மாச்சரியங்களின் நச்சுக் கிருமிகள் மனிதனை மிருகமாக்கி சகமனிதனைப் பார்த்து உறுமும். ஒரு காலகட்டத்தில், அதன் சவாலாக எழுந்துநிற்கும் சரித்திர நாயகர் ஒவ்வொரு நொடியும் மானுடத்திற்குத்தேவைப்பட்டவராகிறார்.சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கிறது, அதன் தீய நஞ்சான தீண்டாமைஇருக்கிறது. சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப்பாதுகாக்கும் அரண் போன்ற பகுதிகள் உண்டு.ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும்நாட்டில் ஜாதி இருக்கலாமா என்ற பகுத்தறிவுப் பகலவனின் கேள்விக் கணைக்குஇந்நாள் வரை பதில் கிடையாது.ஆனாலும் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் -குடியரசு நாளும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிள்ளைகளுக்குமிட்டாய் கொடுக்கப்படுகிறது/எந்தெந்தப் பிரச்சினைகளை எல்லாமோ கையில் எடுத்துக்கொண்டு சிலம்பாட்டம்ஆடும் இந்திய அரசியல்வாதிகளுக்கு மனிதனைப் பிறப்பின் அடிப்படையிலேயேபேதப்படுத்தும் இந்த ஜாதிச் சழக்கை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்திற்குஆளானதில்லை.ஒழிக்க முன்வராவிட்டாலும் பரவாயில்லை; ஜாதிய உணர்வு நோய்க்குஆளாகிவிட்டவர்களாக ஆகிக் கிடக்கிறார்களே - அதை நினைத்தால் தான் ஆத்திரம்வருகிறது.வெட்கம் இல்லாமல் ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் என்ற சூளுரைக்கிறார்களேஅதன் பொருள் என்னவாம்! வருணாசிரமக் காப்புதானே?தனது இறுதிப் போராட்டம் என்று தந்தை பெரியார் அனைத்து ஜாதியினருக்கும்அர்ச்சகர் உரிமைக்கான போர்க் கொடியைத் தூக்கினார்.மானமிகு கலைஞர் அரசு இரண்டு முறை சட்டங்கள் செய்தது.இரண்டு முறையும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் செல்லுகின்றனர். இப்படிப்பச்சையாக ஜாதி வர்ணம் காட்டும் பார்ப்பனர்கள் நல்ல பாம்பாக நம்மிடையேவாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். நம் மக்களும் பொறுத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.சமூகத்திலே இந்த உயர்ஜாதித் தன்மையில் நிலைக்கக் கூடியவர்கள்,பெரும்பாலான மக்களுக்கான அரசியலிலும் கூட மூக்கை நுழைத்து நம் மக்களைக்கூறுபோட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.ஊடகங்கள் வாயிலாக அவர்களின் கருத்தை பொதுக் கருத்தாகத் திணித்துக் கொண்டுஇருக்கிறார்கள். பக்திப் போதையிலே சிக்குண்டு கிடக்கும் நம் மக்கள்பார்ப்பனியத்தின் கண்ணிவெடிகளில் சிக்குவது ஆச்சரியப் படத்தக்க ஒன்றல்ல.பெரும்பான்மை மக்களின் உரிமைகளை எதிர்த்து நீதிமன்றங்களுக்குச்செல்லுகிறார்களே பார்ப்பனர்கள் - அந்த நீதிமன்றத்தில் பெரும்பான்மைமக்களுக்கான நீதியாவது கிடைக்கிறதா?இதுதான் இன்றைய சமூகத்தின் யதார்த்தமான நிலைப்பாடு.சமுதாயத்தின் அடித்தளத்தில் புரட்சிகரமான சிந்தனை மாற்றங்களைஏற்படுத்தாமல் வெறும் கொசு வேட்டையாடுவதால் பயனில்லை.தந்தை பெரியார் நினைவு நாளில் அதனைத்தான் அசை போடவேண்டும். மூல பலத்தைநோக்கிப் போர் புரிய கிளர்ந்தெழவேண்டும்.இங்கு கடவுள் மறுப்பு என்பது வெறும் பகுத்தறிவைச் சார்ந்தது மட்டுமல்ல -ஜாதி எதிர்ப்பைச் சார்ந்தது - பாலியல் உரிமையைச் சார்ந்தது, சமூகநீதியைச்சார்ந்தது.காரணம் ஜாதியை உண்டாக்கியது கடவுள் என்றும், ஏற்ற தாழ்வுக்குக் காரணம்கர்மபலன் என்றும், பெண்ணடிமை என்பது சாஸ்திர ரீதியானது என்றும் ஆக்கிவைக்கப்பட்ட நிலையில், கடவுள்மீதும், மதத்தின் மீதும், வேத, இதிகாச,புராண, சாஸ்திரங்கள்மீதும் கை வைத்தாகியே தீரவேண்டும். இதனைப்புரிந்துகொள்ளாமல் பெரியார் ராமனை செருப்பால் அடித்தார், பிள்ளையாரைஉடைத்தார், மனுதர்மத்தைக் கொளுத்தினார் என்று மேம்போக்காகப் பேசும்படித்தவர்கள் முதலில் தந்தை பெரியாரின் உண்மை நோக்கினைப் புரிந்துகொள்ளவேண்டும்; ஆம், நாம் மேலும் புரிய வைக்கவேண்டும்.தந்தை பெரியார் நினைவு நாள் என்பது இத்தகு ஆக்க ரீதியான சிந்தனைகளைமேலும் கூர்தீட்டிக் கொள்ளக் கூடிய வரலாற்றுக் குறிப்பு நாள்.பெரியார் பணி முடிக்க உறுதி கொள்வோம்!
வாழ்க பெரியார்!வளர்க பகுத்தறிவு!!

தமிழில் அம்பேத்கர்' என்பது குறித்துப் பேசுகையில், அண்ணல் அம்பேத்கரையும், அவரது அடிப்படைக் குறிக்கோள்களையும் தமிழகத்திற்கு முதன் முதலில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் உண்மையிலிருந்தே தொடங்க வேண்டும். பெரியாரின் சுயமரியாதை ஏடுகளான "ரிவோல்ட்', "குடி அரசு' ஏடுகளில் அம்பேத்கர் பற்றிய முதல் பதிவுகள், எனக்குத் தெரிந்தவரை, 1929 இல் காணப்படுகின்றன. பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு செம்ஸ்போர்ட் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக நியமிக்கப்பட்ட சவுத்பரோ குழுவிடம் 1919 இல் தாழ்த்தப்பட்டோர் நிலைமைகளையும் உரிமைகளையும் குறித்து அம்பேத்கர் சாட்சியம் அளித்த நிகழ்வுதான் – அவரது தீவிரமான பொது வாழ்வின் தொடக்கமாக இருந்தது எனக் கொண்டால், அந்தப் பொதுவாழ்வு தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய அறிமுகம் தமிழகத்திற்குக் கிடைத்தது எனக் கருதலாம்.

அம்பேத்கர்ஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று மத்திய மாகாணங்கள் – பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை "பம்பாயில் சுயமரியாதை முழக்கம்' என்னும் தலைப்பில் "குடி அரசு' (16.6.1929) வெளியிட்டது. அம்பேத்கர் நிறுவிய "சமாஜ் சமதா சங்' (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையின் மிகச் செறிவான சுருக்கம், ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டன. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், "முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடு' என்று வர்ணித்தது. அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின்
பிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன'' என்னும் செய்திக் குறிப்பிலிருந்து–பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோ, இருவருக்கும் தொடர்பு இருந்தது என்றோ ஊகிக்கலாம் ("ரிவோல்ட்', 29.9.1929).
பின்னர் புனே நகரில் அம்பேத்கர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம் பற்றி சித்தரஞ்சன் என்பார் எழுதிய விரிவான கட்டுரையொன்றும் வெளிவந்தது. ("ரிவோல்ட்', 10.11.1929). அம்பேத்கரின் அரசியல், சமூக செயல்பாடுகள் பற்றிய செய்திகள் சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற சொற் போர்கள், தாழ்த்தப்பட்டோருக்குத் தனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை எதிர்த்து காந்தி நடத்திய உண்ணா நோன்பைக் கண்டனம் செய்த கட்டுரைகள், அம்பேத்கர் – ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை ஆதரித்தும் எம்.சி. ராஜாவின் நிலைப்பாட்டை விமர்சித்தும் எழுதப்பட்ட கட்டுரைகள், காந்தியின் "ஹரிஜன் சேவக் சங்'கின் நடவடிக்கைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் ஆகியன சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.
பெரியாரால் ஆதரிக்கப்பட்டு வந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு ஒரேயடியாகச் சரிந்து வந்த கொண்டிருந்த 1936 – 1937 ஆம் ஆண்டுகளில்தான், லாகூரிலிருந்த ஜாத் – பட் – தோடக் மண்டல் (சாதி ஒழிப்புச் சங்கம்) என்னும் அமைப்பின் மாநாட்டில் ஆற்றுவதற்காக அம்பேத்கர் எழுதியிருந்ததும், "தலித்துகளின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' எனச் சொல்லப்படுவதுமான 'அணணடிடடிடூச்tடிணிண ணிஞூ இச்ண்tஞு' என்னும் ஆங்கில உரை தமிழாக்கம் செய்யப்பட்டு "குடி அரசு' இதழில் "ஜாதியை ஒழிக்க வழி' என்னும் தலைப்பில் ஓராண்டுக் காலம் தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அது பின்னர் நூல் வடிவிலும் கொணரப்பட்டு பல பதிப்புகளைக் கண்டது. அதன் பின்னர், அந்த உரை அதைவிடச் சிறப்பான பல தமிழாக்கங்களைக் கண்டுள்ளது. இது குறித்து ஏறத்தாழ எட்டாண்டுகளுக்குப் பின் பெரியார் பாட்னாவில் "பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில்' கலந்து கொண்டபோது "குடி அரசு' எழுதிய தலையங்கம், சில சுவையான தகவல்களைக் கூறுகிறது :
“1920களின் இறுதியில் மேற்சொன்ன "ஜாத் – பட் – தோடக் மண்டலின்' துணைத் தலைவர்களிலொருவராக பெரியார் தேர்ந்
தெடுக்கப்பட்டிருக்கிறார்; பெரியார் இந்து மத விரோதி, நாத்திகர், முஸ்லிம் ஆதரவாளர் என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அந்த சங்கத்தாரிடம் புகார் சொன்னதன் பேரில், பெரியார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 1936 இல் அந்த அமைப்பின் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார் அம்பேத்கர். அப்போது அவர் மீதும் பல புகார்களைக் கூறினர் பார்ப்பனர்கள். அம்பேத்கர் தனது உரையில் இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்திருந்ததால், அந்த மாநாட்டையே அச்சங்கத்தார் கூட்டவில்லை. "டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவுக்கு எழுதிய சொற்பொழிவுத் தொகுதியை நமக்கு அனுப்பியதில், அதைத் தமிழில் மொழிபெயர்த்து "ஜாதியை ஒழிக்கும் வழி' என்னும் பெயரால் புத்தகம் ஒன்றுக்கு 0 – 4 – 0 வுக்கு விற்று வருகிறோம். அதைப் பார்த்தால் இந்து மதம் ஒழியாமல் ஜாதியும் ஒழியாது, சுயராஜ்ஜியமும் வராது, பொது உடைமையும் ஏற்படாது என்பதெல்லாம் மடையனுக்கும் விளங்கும்'' ("குடி அரசு' தலையங்கம், 13.1.1945).
மேற்சொன்ன உரையிலிருந்த சில கருத்துக்களை காந்தி விமர்சித்ததையும், காந்திக்கு அம்பேத்கர் கூறிய பதில்களையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும், அந்த பதில்களிலும் "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?' போன்ற நூல்களிலும் அம்பேத்கர் காந்தியின் வர்ண தர்மப் பார்ப்பனியத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்த போதிலும், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சமூக சீர்திருத்தவாதியும் படிக்க வேண்டும் என்று காந்தியாலேயே பரிந்துரைக்கப்பட்ட மகத்தான ஆக்கம் "சாதி ஒழிப்பு' நூல்தான்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், பிரிட்டிஷாரிடமிருந்து முழு அரசியல் அதிகாரத்தையும் தங்கள் கைக்கு மாற்றிக் கொள்ள காங்கிரசார் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது, 1940 இல் பம்பாயில் அம்பேத்கர், ஜின்னா, பெரியார் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். பிரிட்டிஷாரின் நாணயக் குறைவையும் காங்கிரசாரின் சூழ்ச்சிகளையும் விமர்சித்து, அவர்கள் விடுத்த கூட்டறிக்கையின் தமிழாக்கம் "குடி அரசு' இதழில் காணப்படுகிறது ("குடி அரசு', 28.1.1940). ஆனால், அதனுடைய ஆங்கில மூலம் இதுவரை நமது கண்ணுக்குப் படவில்லை. எனினும், அந்த சந்திப்பு குறித்து "தி பாம்பே குரோனிக்கிள்' என்னும் ஆங்கில நாளேடு வெளியிட்ட விரிவான செய்தி, மகராட்டிரா அரசாங்கத்தின் கல்வித் துறை 1982இல் வெளியிட்ட sorce material on dr.babasaheb ambedkar and the movement of untouchables என்ற நூலில் காணப்படுகிறது (பக்கம் 210). 1940 சனவரி 8 அன்று மும்பை தாராவியிலிருந்த தமிழர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தலைமை தாங்கிய செய்தியுடன் அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையை விரிவாக வெளியிட்டது அந்த நாளேடு. இந்தச் செய்தியும் பெரியாரின் உரையும் மேற்சொன்ன நூலின் 208 – 210 ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன.
வைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், சென்னைக்கு வருகை தந்த அம்பேத்கர், அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த பெரியாரை சந்தித்து, "திராவிட நாட்டில்', மகாராட்டிரத்தையும் வேறு சில மாகாணங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி கூறியதாகவும் "குடி அரசு' தலையங்கம் ஒன்று குறிப்பிடுகிறது "குடி அரசு', (30.4.1944) அது குறித்து அம்பேத்கர் ஆங்கிலத்திலோ, மராத்தி மொழியிலோ எழுதியவையும் நமக்குக் கிடைக்கவில்லை.
சுயமரியாதை ஏடுகள், எப்போதுமே காங்கிரஸ் இந்து – தேசிய நீரோட்டத்துடன் கலந்துவிட்ட தமிழகத் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை விமர்சித்தும், அம்பேத்கரை உயர்த்தியும் எழுதி வந்தன. ஓர் எடுத்துக்காட்டு :
“தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளலாகதென்றும், இவ்வளவு வேற்றுமைகளை இந்நாட்டிலேயுண்டு பண்ணி, இந்நாட்டு மக்களைக் குட்டிச்சுவராக்கிய வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லி வருகிறார். ஆனால், தென்னாட்டில் நாங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில தோழர்கள் – முனிசாமி பிள்ளை, சிவசண்முகம் போன்றவர்கள் “டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றி சமீபத்தில் சென்னையில் செய்த பிரச்சாரங்களை "ஹரிஜனங்கள் (தாழ்த்தப்பட்டோர்)' கவனிக்கக்கூடாது, இந்து மதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் தர்மங்களை அனுசரித்து நடக்க வேண்டும்'' என்றும் "அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை' என்றும் கூறிவருகிறார்கள். இவர்கள், நிலைமையையும் அதன் வரலாறுகளையும் உணர்ந்து சொல்லும் வார்த்தைகளா இவை என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்... தங்களுக்கு ஒரு சிலருடைய வாழ்த்தும் புகழும் அப்போதைக்குக் கிடைத்தால் போதும் என்று எண்ணி இவ்வாறு இவர்கள் பேசி வருவார்களேயானால், இவர்களைக் குறித்து எதிர்கால சரித்திரக்காரர்கள் கண்டிக்கவோ, எதிர்கால மக்கள் சிரிக்கவோ மாட்டார்களா?'' ("குடி அரசு', 6.1.1945)

பெரியார்1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு அம்பேத்கருடன் பெரியாருக்குச் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அவை கீழ்க்காணும்விசயங்கள் தொடர்பானவை 1. அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தது. 2. 1951இல் நேரு அமைச்சரவையில் சேர்ந்தது. 3. காஷ்மீர் விவகாரம் 4. சோசலிச சீனாவை அய்.நா. அவையில் சேர்க்கக்கூடாது என அம்பேத்கர் கருதியது. 4. இந்தியாவின் பாதுகாப்புக்காக அம்பேத்கர் பரிந்துரைத்த சில ஆலோசனைகள். இந்த விஷயங்கள் குறித்து "விடுதலை'யில் சா. குருசாமி எழுதிய விமர்சனங்களில் சில கடுமையான வார்த்தைகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மட்டும் கொண்டு சா. குருசாமி அம்பேத்கர் மீது வைத்திருந்த மதிப்பை தீர்மானித்துவிட முடியாது. அதுவும் தமிழகக் கிராமப்புறங்களில் தலித்துகள் மீது வன்கொடுமை புரிகின்ற இடைநிலைச் சாதிகளின் கூட்டமைப்புகளாக விளங்கும் அரசியல் கட்சிகளின், ஆளும் வர்க்கங்களை அண்டி நிற்கும் இயக்கங்களையும் கட்சிகளையும் சேர்ந்தவர்களும் அவர்களின் அனுதாபிகளாக இருக்கிறவர்களும் – "அம்பேத்கர் யார்' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சா. குருசாமி கட்டுரைகளைப் படித்தாக வேண்டும். அம்பேத்கருடன் கருத்து வேறுபாடுகள் இருந்த நாட்களிலும் கூட, அவர் மீது பெரியார் மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக 1947 சூலையில் மாயவரத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பெரியார் ஆற்றிய உரையைக் கூறலாம் :

“தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும் அவரால்தான் பஞ்சமர்கள், கடையர்கள், இழிபிறப்புக் கொடுமைகள் நீங்குமென்றும் நம்பினேன். அதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன். ஏன்? என்னைப் போலவே அவரும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வியாதிக்கு மருந்து சொன்னார். என்னவென்றால், “பஞ்சமர்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாம் (சமுதாய சமதர்மம்) மதத்தை சார வேண்டும்'' என்று பகிரங்கமாகச் சொன்னேன். அவர் 1930 இல் சொன்னார். அதனாலேயே நாங்கள் அதிக சிநேகிதர்களானோம். அவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் பிரச்சாரம் செய்தேன். அவ்வளவு மாத்திரமல்லாமல் அவர் ராமாயணத்தைக் கொளுத்தியவர். “கீதையைக் கொளுத்த வேண்டும். அது முட்டாள்களின் பிதற்றல்'' என்று கூட, அதுவும் சென்னை மாகாணத்துக்கு வந்து சொல்லிவிட்டுப் போனவர். “இந்து மதத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. இனியும் இருக்காது. இந்து மதத்தை விட்டொழித்தாலொழிய இழிவு நீங்காது'' என்று கர்ஜித்தவர். பட்டாங்கமாகப் பிரகடனம் செய்தவர். பல புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறவருமாவார். ஆதலால், அந்தக் கருத்தை நீங்கள் தழுவினாலொழிய உங்கள் குறையும் இழிவும் நீங்காது என்று சொல்லுகிறேன். அவர் அதை மாற்றிக் கொண்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் அதை சிறிதும்
மாற்றிக் கொள்ளவில்லை. எனக்கு அந்தக் கருத்து நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது ("விடுதலை' 10.7.1947).
அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இருந்த பொதுவான பண்புகளிலொன்று, அவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது கூட, அவர்கள் தனிப்பட்ட கசப்புணர்வை வளர்க்கவில்லை என்பதாகும். கருத்து வேறுபாடுகளைக் கடந்தும் இருவரது நட்பு தொடர்ந்தது என்பதுடன், இருவருக்குமிடையே ஒத்துழைப்புகளும் இருந்த வந்தன. எடுத்துக்காட்டாக, பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் இருந்த இட ஒதுக்கீட்டு முறையை "இந்திய சுதந்திர'த்திற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக்கியதை எதிர்த்து, பெரியார் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தியதை அடுத்து அரசியல் சட்டத்திற்கான முதல் திருத்தத்தை வரைந்து தந்து, "பிற்படுத்தப்பட்டோர்' என்பதற்கான வரையறையையும் வழங்கினார் அம்பேத்கர். 1955இல் பர்மாவில் நடைபெற்ற உலக பவுத்த மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து கலந்து கொண்டார் பெரியார். புத்த மதத்தில் சேர்வது குறித்து இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்களை "விடுதலை' ஏடு பதிவு செய்துள்ளது.
அம்பேத்கரின் "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்குச் செய்தது என்ன?' "இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்' போன்ற நூல்களிலுள்ள கருத்துக்கள், பெரியார் இயக்க ஏடுகளில் பல முறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அம்பேத்கர் காலமானபோது பெரியார் எழுதிய இரங்கலுரை (தலையங்கம்) அம்பேத்கர் குறித்து பெரியார் இயக்கம் கொண்டிருந்த மதிப்பீட்டைத் தொகுத்துக் கூறுகிறது :
“இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது, எந்தவிதத்திலும் சரிசெய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்ல பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

அம்பெத்கர் உடன் பெரியார்“உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னாபின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதான ஆரிய – ஆத்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கவரும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை "முட்டாள்களின் உளறல்கள்' என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான ராமனை மகாக் கொடியவன் என்றும், ராமாயணக் காவியம் எரிக்கத் தக்கது என்றும் சொல்லி, பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் ராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார். இந்து மதம் உள்ளவரை தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும் ஆராய்ச்சி நிபுணரும், சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தியதானது – இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்'' ("விடுதலை', 8.12.1956, வே. ஆனைமுத்து (பதிப்பாசிரியர்), பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 1934).
அம்பேத்கருக்கும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், ஒத்த கருத்துக்கள், அம்பேத்கருக்குப் பெரியார் இயக்கம் தந்து வந்த மதிப்பு, கருத்து வேறுபாடுகள், இவை குறித்த விளக்கங்கள் ஆகியன பெரும் ஆய்வு நூலுக்குரிய விஷயங்களாகும். இங்கு ஓரிரு செய்திகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அம்பேத்கர் "லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்கான கல்வி பயின்று கொண்டிருந்தபோது, பேபியன் சோசலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அந்தக் கல்வி நிறுவனத்தை நிறுவியவர்களிலொருவரான பொருளாதார அறிஞர் சிட்னி வெப், அவரது துணைவியார் பீட்ரிஸ் வெப் ஆகியோரும் பேபியன் சோசலிஸ்டுகளே. இவர்களால்தான் அம்பேத்கர் சோசலிசக் கருத்துகள்பால் ஈர்க்கப்பட்டார். பெர்னாட் ஷாவும் இந்த பேபியன் சோசலிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்தான். இந்த மூவரும் சோசலிசம், பெண்ணியம், சோவியத் ரஷ்யா ஆகியன குறித்து எழுதிய கட்டுரைகள்
பெரியாரின் "குடி அரசு' இதழில் வெளியாகியுள்ளன. அரசு எந்திரத்தில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கொண்டு வர முடியும் என்பது பேபியன் சோசலிஸ்டுகளின் கருத்து.
மேற்சொன்ன கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்களாக இருந்த ஜே.ஏ. ஹாப்ஸன், எல்.டி. ஹாப்வுஸ் ஆகியோரிடமிருந்துதான் ("பிரிட்டிஷ் கருத்து முதல்வாதச் சிந்தனைப் பள்ளி' எனச் சொல்லப்பட்ட சிந்தனைப் போக்கின் முக்கியப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்) அரசு என்பதற்கு மிகுந்த முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்குவதை அம்பேத்கர் கற்றுக் கொண்டார்.
II
"தமிழில் அம்பேத்கர்' என்று, அம்பேத்கரின் சிந்தனையையும் பணியையும் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த தலித் இயக்கச் செயல்வீரர்கள், அறிவாளிகளில் முன்னோடியாக இருந்தவர்கள் காலஞ்சென்ற முனுசாமி பறையர், அன்பு பொன்னோவியம் என்பதை இங்கு நினைவு கூர்ந்தாக வேண்டும். அதேபோல "எரிமலை' ரத்தினம், "எக்ஸ்ரே' மாணிக்கம், பெருமாள் போன்றோரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். "புத்தரும் அவர் தம்மமும்' நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்த பெரியார்தாசன், "எக்ஸ்ரே' மாணிக்கம், "எரிமலை' ரத்தினம் ஆகியோரும் அந்த நூலைத் தமிழில் கொண்டுவரத் தேவையான பொருள் செலவில் பெரும் தொகையை ஏற்றுக் கொண்ட ஒய்.எம். முத்து, திருமதி சந்தோஷம் முத்து ஆகியோரும் நமது வணக்கத்திற்குரியவர்கள். தியாகு மொழியாக்கம் செய்த "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?' என்ற நூலை தலித் எழில்மலை வெளியிட்டார். கடந்த 13 ஆண்டுகளாக "தலித் முரசு' தொடர்ந்து அம்பேத்கர் சிந்தனை குறித்த ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
இதற்கிடையே, பெரியாரையும் அவரது இயக்கத்தையும் "தலித்திய' கண்ணோட்டத்திலிருந்து விமர்சிப்பதாக உரிமை கொண்டாடிய சில நண்பர்கள் கூறிவந்த குற்றச்சாட்டுகளிலொன்று, பெரியாரும் திராவிட இயக்கமும் திட்டமிட்டு முதலில் அயோத்திதாசரையும் பின்னர் அம்பேத்கரையும் இருட்டடிப்புச் செய்துவிட்டனர் என்பதாகும். அயோத்திதாசரை குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்து தமிழகம் முழுவதற்கும் மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் அறிமுகம் செய்து வைத்தவர்கள் – பிறப்பால் தலித்துகளோ, தலித் இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ அல்லர். அவர்கள் அயோத்தி தாசர் பற்றி எழுதியதற்குப் பிறகே இன்றைய நவீனத்துவ, பின் நவீனத்துவ, தலித் அறிவுஜீவிகள் அயோத்திதாசரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்னும் மிக அண்மைய வரலாற்று நிகழ்வுகள்தான் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழகத்திற்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் என்பதும், "சாதி ஒழிப்பு' நூலின் பல்வேறு தமிழாக்கங்களை இதுவரை கொண்டு வந்தவர்களில் நூற்றுக்கு 99 விழுக்காட்டினர் தலித் அல்லாதவர்களும் தலித் இயக்கங்களைச் சாராதவர்களும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக வெளிவந்துள்ள தமிழாக்கமும் கூட, தமிழ் நாட்டிலுள்ள எந்த தலித் இயக்கத்தையோ, தலித் அரசியல் கட்சியையோ சாராத "தலித் முரசு' ஏட்டால்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் "புனே ஒப்பந்தம்' தொடர்பாகவும் அம்பேத்கரின் பவுத்த மத மாற்றம் தொடர்பாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாகவும் தமிழக தலித் அறிவுஜீவிகளிடையேயும் தலித் இயக்கங்களுக்குள்ளும் நடத்தப்பட்ட, நடத்தப்படும் விவாதங்களில் நூற்றிலொரு பங்கு விவாதம் கூட "சாதி ஒழிப்பு' குறித்து நடத்தப்படவில்லை. வரலாறு காணாத "தலித் எழுச்சி' தமிழகத்தில் கடந்த இருபதாண்டுகளாக ஏற்பட்டுள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து ஏறத்தாழ இருபதாண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழக தலித் இயக்கங்களால் எத்தனை அம்பேத்கரின் எழுத்துகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன? அவர்களால் செய்யத் தவறியவை ஒரு புறமிருக்கட்டும். என்.சி.பி.எச். நிறுவனத்தாரால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டுவரும் தமிழாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அம்பேத்கர் சிந்தனை குறித்த எத்தனை விவாதங்களை தலித் இயக்கங்கள் நடத்தியிருக்கின்றன?
இவை போகட்டும், கேரள நடிகர் மம்முட்டி அம்பேத்கராக மிகச் சிறப்பாக நடித்துள்ளதும் அம்பேத்கரின் வீரப்பயணத்தை முழுமையாகச் சித்தரிப்பதுமான திரைப்படத்தை தமிழில் "டப்பிங்' செய்து பரவலாகத் திரையிடப்பட வேண்டும் என்பதற்காகவாவது ஏதேனும் ஒரு தலித் இயக்கம் அல்லது கட்சி போராட்டம் நடத்தியுள்ளதா? இந்திய மொழிகள் அனைத்திலும் அதனை "டப்பிங்' செய்து வெளியிட
மத்திய அரசாங்கமோ, மாநில அரசாங்கங்களோ முன்வர வேண்டும் என "அதிகார'த்தில் பங்கு பெற்றவர்கள், பங்கு பெற்றுள்ளவர்கள் – ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி போன்றவர்களாவது முயற்சி செய்ததுண்டா? ஆகவே அம்பேத்கரை "இருட்டடிப்பு' செய்ததாக,
செய்வதாக யார் மீதும் குற்றம் சுமத்தும் தார்மீக உரிமை இந்த "தலித்' அறிவுஜீவிகளுக்கோ, இயக்கங்களுக்கோ இல்லை.
III
அம்பேத்கரை ஆழமாகக் கற்க விரும்புகிறவர்களோ, மேலோட்டமாக மட்டும் படிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறவர்களோ எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் சில உள்ளன. மகாராட்டிர மாநில அரசாங்கத்தால் இதுவரை தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை யாவும் அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதியவையும் பேசியவையும்தான். அந்த ஆங்கில ஆக்கங்களுக்குத் தொகுப்பாசிரியர்களாகவும் பதிப்பாசிரியர்களாகவும் இருந்தவர்களில் கணிசமானோர் – அம்பேத்கர் இயக்கத்தோடு, அவரது சிந்தனையோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள். ஓரிருவர் அம்பேத்கருடன் பழகியவர்கள். இக்காரணங்களால் அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிடுவது, ஒப்பீட்டு நோக்கில் அவர்களுக்கு எளிதானதாக இருந்தது. ஆனால், இதில் சிக்கல் இல்லாமல் இல்லை.
அம்பேத்கரின் எழுத்துகளுக்கு யார் வாரிசு என்னும் பிரச்சனையை அவர்கள் தீர்க்க வேண்டியிருந்தது. அம்பேத்கரின் ஆக்கங்கள் பல்வேறு நபர்களின் வசமிருந்தன. அவர்களது இசைவைப் பெற வேண்டியிருந்தது. எனவே, இந்தச் சிக்கல்கள் படிப்படியாகத் தீரத் தீரத்தான் அவருடைய ஆக்கங்களை அவ்வப்போது தொகுத்து வெளியிட வேண்டியிருந்தது. எனவே அம்பேத்கரின் ஆக்கங்கள் காலவரிசைப்படி வெளியிடப்படவில்லை. அதாவது அந்த மாபெரும் அறிஞரின், போராளியின் சிந்தனையிலும் பணிகளிலும் ஏற்பட்ட பரிணாமத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் அந்த தொகுப்புகள் அமையும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மேலும், அம்பேத்கரின் இரண்டு முனைவர் பட்ட ஆய்வுரைகள் தவிர, மற்றெல்லா எழுத்துகளும் பேச்சுகளும் அவர் மேற்கொண்ட அடிப்படையான லட்சியத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை. ஒவ்வொரு எழுத்தும் பேச்சும், குறிப்பிட்ட அரசியல், சமூகச் சூழலில் குறிப்பிட்ட வாசகர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. எனவே, எந்தச் சூழலில் எந்த நோக்கத்திற்காக அவர் குறிப்பிட்ட விஷயத்தை எழுதினார், பேசினார் என்பது அவரை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும். ஆனால் ஆங்கிலத் தொகுப்புகள் அம்பேத்கரின் எழுத்து களை சம்பந்தப்பட்ட வரலாற்று, அரசியல், சமூகச் சூழலுக்குள் வைத்துப் பார்க்கும் வகையில் விரிவான அறிமுகங்களை நமக்குத் தருவதில்லை. இந்தக் குறைபாடுகளை தமிழாக்கத் தொகுதிகளும் தொடர்வது வியப்புகுரியதல்ல.
அம்பேத்கரைப் படிப்பதற்கு முதல் நிபந்தனை, அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதாகும். இருபதாம் நூற்றாண்டு இந்தியத் தலைவர்களில் மிக உயர்ந்த கல்வித் தகுதி கொண்டிருந்தவர் அவர்தான். மேற்கத்தியப் பண்பாடு வழங்கிய தாராளவாதக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்ட அவர் – வரலாறு, பொருளாதாரம், மானுடவியல், அரசியல், சட்டம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். அத்தகைய கல்வி, அவரது சிந்தனையின் பன்முகத் தன்மையைக் கூர்மைப்படுத்தின. ஏறத்தாழ நாற்பதாண்டுக்கால எழுத்துப் பணிகளையும் சொற்பொழிவுப் பணிகளையும் மேற்கொண்டிருந்த அவரைப் போல வாழ்க்கையில் பல்வேறு பாத்திரங்களை வகித்தவர்கள் அரிது.
ஆராய்ச்சி அறிஞராக, கல்லூரிப் பேராசிரியராக, கல்வியாளராக, வழக்குரைஞராக, பரோடா சமஸ்தான ராணுவத்தின் லெப்டினண்டாக, வைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக, சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக, பிரசுரங்களை வெளியிடுபவராக, பத்திரிகையாளராக, கிளர்ச்சியாளராக, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுபவராக, அரசியல் சட்டத்தை வரைபவராக, புத்தரின் சீடராக, தாழ்த்தப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராகப் பல்வேறு பரிமாணங்களுடன் வாழ்ந்த அவர் தன் – வரலாறு எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் எழுத விரும்பிய இன்னும் பல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் போலவே அந்த தன்–வரலாற்றையும் அவரால் எழுத முடியவில்லை. எனினும் அவரது முக்கிய எழுத்து பலவற்றில் அவரது தன் – வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
அவர் தனது சிந்தனைகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுத்தார். எழுத்து என்பது பார்ப்பனிய – சாதிய ஆதிக்கத்தின் அதிகாரத்தின் குறியீடாக இருந்த சூழலில், அந்த அதிகாரத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து பறித்தெடுப்பதற்கான ஆயுதமே எழுத்து. அதுவும் ஆங்கில எழுத்து என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார். மேலும் இடத்தாலும் காலத்தாலும் வரம்புக்குட்படுத்தப்படும் பேச்சை ஒப்பிடுகையில், இன்னும் பரந்த வேறு இடங்களுக்கும் காலங்களுக்கும் பயணிக்கவும் அங்கு நிலை கொள்ளவுமான ஆற்றல் எழுத்துக்கு உண்டு என்பதை அறிந்திருந்தார். அவரது எழுத்தும் பேச்சும் பிற பணிகளைப் போலவே "தீண்டாமை' என்பதையே தமக்கான மேடையாகக் கொண்டிருந்தன. அந்த மேடையிலிருந்துதான், அவர் இந்தியாவின் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத மக்களின் விடுதலைக்காக மட்டுமின்றி, பிற அனைத்துச் சாதியினரும் மனிதத்துவம் பெற்று சகோதரத்துவ உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டார்.
சில பிரச்சனைகளில் அம்பேத்கர் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளத் தயங்கியதோ, அதனைப் பகிரங்கமாக அறிவிக்கத் தவறியதோ இல்லை. "வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை' என்பதை வலியுறுத்தி வந்தவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர். அந்தக் கோரிக்கை முதல் வட்டமேசை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படும் சாத்தியமே இல்லை என்பதைக் கண்ட பிறகே "தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதி' என்னும் கோரிக்கையை முன்வைத்துத் தொடங்கினர்.
அம்பேத்கர் தனது எழுத்துகள் சிலவற்றைத் திருத்தி தானே வெளியிட விரும்பினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எழுதிய, "இந்தியாவில் சாதிகள் : அவை செயல்படும் விதமும், தோற்றமும் வளர்ச்சியும்' (இச்ண்tஞு டிண ஐணஞீடிச் : கூடஞுடிணூ Mஞுஞிடச்ணடிண்ட், எஞுணஞுண்டிண் ச்ணஞீ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt) என்னும் ஆய்வுக் கட்டுரையை "சாதி ஒழிப்பு' நூலுடன் இணைத்து பின்னதை செழுமைப்படுத்த விரும்பினார். சில நூல்களைப் பொருத்தவரை, அவரது விருப்பம் நிறைவேறியது. ஆனால் தனது எல்லா நூல்களையும் செழுமைப்படுத்தவோ, திருத்தங்களுக்கு உட்படுத்தவோ முடியவில்லை. அவர் எழுதி முடிக்காத வரைவுகள் ஏராளமாக உள்ளன. ஒரே கட்டுரைக்கு பல வரைவுகள் எழுதியுமிருக்கிறார். அத்தகைய வரைவுகளில் சில பகுதிகள் சரிவர ஒழுங்கமைக்கப்படாதவையாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கட்டுரைக்கு முதலில் எழுதிய வரைவைக் காட்டிலும் கடைசியாக எழுதிய வரைவுதான் சிறந்தது எனக் கருத முடியாது என்றும், அதற்குக் காரணம் சில கட்டுரைகளின் முதல் வரைவுகள் அவற்றின் கடைசி வரைவுகளைக் காட்டிலும் செழுமையானவையாக இருப்பதுதான் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த வரைவுகளும்கூட அம்பேத்கரின் ஆழ்ந்த புலமைக்கும் சமூக அர்ப்பணிப்புக்கும் சான்றாக விளங்குகின்றன.
அம்பேத்கர் பிறருடன் இணைந்து எழுதியவையும் உண்டு. எடுத்துக்காட்டாக, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு எழுதி அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்கள், அரசியல் சட்டத்தின் வரைவு முதலியன. ஆயினும் மற்றவர்களுடன் இணைந்து எழுதப்பட்ட இவை எல்லாவற்றிலும் அவரது முத்திரைகள் இருப்பதை ஆய்வறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் "வேலை செய்யும் உரிமை' சேர்க்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு அவையில் போராடினார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதே போல, பொருளாதார சமத்துவத்தையும் சோசலிசத்தையும் ஆதரித்த அவரது விருப்பத்திற்கு மாறான முறையில் தனிச்சொத்து உரிமையை அடிப்படை உரிமையாக்கும் சட்டவிதி 31 சேர்க்கப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது, “அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியதல்ல. மாறாக, நேரு, பட்டேல், பந்த் ஆகிய முப்பெரும் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் விளைவு'' என்பதை பின்னாளில் அவர் மாநிலங்கள் அவையில் பேசுகையில் அம்பலப்படுத்தினார்.
வரலாற்று, பண்பாட்டு, மானுடவியல் ஆய்வுகளை மட்டுமே கொண்டவையாகத் தோன்றும் "சூத்திரரர்கள் யார்'? போன்ற நூல்களும் கூட மறைமுகமான அரசியல் குறிக்கோளைக் கொண்டிருந்தன. காந்தியின் செல்வாக்கிலிருந்து தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத சூத்திரர்கள், தீண்டத்தக்க சூத்திரர்கள் இருவரையும் விடுவித்து, அவர்களுக்கிடையே பரந்த, நேச அணியை உருவாக்குவதுதான் அந்த அரசியல் குறிக்கோள்.
இந்தியாவில் நிலவும் சுரண்டல், வறுமை ஆகியவற்றுக்கான தீர்வு சோசலிசம்தான் என்பதை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், சுரண்டலும் வறுமையும் ஏற்றத் தாழ்வும் பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்படவில்லை என்று கூறினார். வழக்கமான மார்க்சிய விளக்கமான "பொருளாதாரம் என்பது அடித்தளம், அரசியல், பண்பாடு முதலியன அந்த அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட மேலடுக்கு' என்னும் வழக்கமான மார்க்சிய விளக்கத்தைத் தலைகீழாகப் புரட்டினார் :
“ஆனால், அடித்தளம் என்பது கட்டடம் அல்ல. பொருளாதார உறவுகள் என்னும் அடிப்படையில் மத, சமூக, அரசியல் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டடம் தேவைப்படுகிறது. அடித்தளம் எவ்வளவு உண்மையானதோ, கட்டடமும் அந்த அளவுக்கு உண்மையானதுதான். அடித்தளத்தை நாம் மாற்றியமைக்க விரும்பினால், அந்த அடித்தளத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள கட்டடத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அதுபோல, சமூகத்தின் பொருளாதார உறவுகளை நாம் மாற்ற விரும்பினால், இருக்கும் சமூக, அரசியல் அமைப்புகளையும் இவற்றைப் போன்ற பிற அமைப்புகளையும் தகர்த்தெறிய வேண்டும். (மேற்கோள் இடம் பெற்றுள்ள கட்டுரை : : Gail Omvedt, Undoing the Bondage : Dr. Ambedkar's Theory of Dalit Liberation in K.C. Yadav (Ed.). From Periphery to Centre Stage : Ambedkar, Ambedkarism & Dalit Future, Manohar, Delhi, 2000, p.117
அம்பேத்கர் காந்தியத்தை மிகக் காத்திரமான முறையில் எதிர்கொண்டது போலவே, கம்யூனிசத்தையும் ஒரு காத்திரமான சவாலாகக் கருதினார். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் முக்கியப் பிரச்சனைகளில் ஒத்துழைத்ததுடன் அதனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரஷியா, சீனா ஆகியவற்றின் அயலுறவுக் கொள்கைகள் அவரது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளன. ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியை அவர் சில தயக்கங்களுக்கிடையே பாராட்டினார் : “ரஷிய புரட்சியை நாம் வரவேற்கிறோம். ஏனெனில் அதனுடைய குறிக்கோள் சமத்துவத்தை உருவாக்குவதாகும்'' எனக் கூறிய அவர், சமத்துவத்தை உருவாக்குவது என்பது சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்து விடுவதல்ல என்றார். சகோதரத்துவமோ சுதந்திரமோ இல்லாத சமத்துவத்துக்கு மதிப்பு ஏதும் இல்லை என்றும், இவை மூன்றையும் வழங்கக்கூடியது பவுத்தமேயன்றி கம்யூனிசம் அல்ல என்றும் கூறினார் (Ambedkar Writings and Speeches, Vol.3(1987), P.462)
இந்த அடிப்படையில் இருந்துதான் பிற்காலத்தில் கம்யூனிசம் பற்றி அவர் முன்வைத்த விமர்சனங்கள் அமைந்திருந்தன. எனினும் அவரது கடைசி ஆண்டுகளில் அவர் எந்த அளவுக்கு புத்தர் மீது கவனம் செலுத்தினாரோ, அந்த அளவுக்கு மார்க்ஸ் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினார். "புத்தரா, காரல் மார்க்ஸா' என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றி, அவர் தனது இறுதி நாட்களில் எழுதி முடித்த "புத்தரும் அவர் தம்மமும்' என்னும் நூலிலும் கூட புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சி செய்திருப்பதைக் காணலாம். அம்பேத்கர் புதுப்பித்த பவுத்தம், அறிவியல் பரிமாணத்தைக் கொண்ட சோசலித்தைப் பரிந்துரைக்கிறது. அது, பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பவுத்தத்தைப் புதுப்பிக்க இந்தியா, இலங்கை, ஜப்பான் முதலிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்திலிருந்தும் புரட்சிகரமான முறையில் வேறுபடுகிறது. “தம்ம நூல்களைக் கற்றல் தம்மம் அல்ல''; "தம்ம நூல்களில் தவறே நேராது என நம்புவது தம்மம் அல்ல'' என "புத்தரும் அவர் தம்மமும்' நூலில் அம்பேத்கர் கூறுகிறார்.
இந்தக் கூற்றுகளின் அடிப்படையில், அம்பேத்கர், பெரியார் காலத்திற்குப் பின்னர் இந்தியாவில் சாதிக்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருதில் கொள்ளவும், தலித் மக்களின் மேம்பாட்டிற்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும், பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும்தான் அம்பேத்கருக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை. முதலாவதாக, மத மாற்றம் என்னும் விஷயம். 1935 – 36 ஆம் ஆண்டுகளிலேயே அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து தீண்டத்தகாதவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார். அதற்கான முக்கியக் காரணங்களிலொன்று, கிராமப்புறங்களில் பெரும்பான்மையாக உள்ள சூத்திர விவசாயி சாதிகளின் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் பலகீனமான நிலையில் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதாகும்.
தலித்துகள் இந்து மதத்தை விட்டு ஏற்கனவே இருக்கின்ற, இந்து மதம் அல்லாத ஒரு மத சமூகத்திற்குள் இணைவதன் மூலம் அவர்களது எண்ணிக்கை பலம் கூடும் என்று கருதினார். ஆனால், அவர் பல்லாயிரக்கணக்கான தலித்துகளுடன் மதம் மாறியபோது, அவர்கள் ஏற்றுக் கொண்ட மதம், அம்பேத்கரால் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் மறுவார்ப்பு செய்யப்பட்ட பவுத்தமேயன்றி, ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையினரைக் கொண்டிருந்த ஒரு மத சமூகத்தில் அவர்கள் இணையவில்லை. அம்பேத்கருடன் பவுத்தம் தழுவியவர்களிடையே, இந்து சமுதாயத்திலுள்ள புரோகிதர்களின் இடத்தை பவுத்த பிக்குகள் பிடித்துக் கொண்டிருப்பதுடன், "புத்தரும் அவர் தம்மமும்' நூலில் அவர் முதன்மைப்படுத்திய சோசலிசப் பொருளாதாரத்திற்கான முயற்சிகளும் போராட்டங்களும் நடத்தப்படுவதில்லை என்பதோடு, இந்து மதத்திலிருந்து இன்னும் பெரிய எண்ணிக்கையில் தலித்துகளை வெளிக் கொணரவோ, கிராமப்புறங்களில் அவர்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.
தலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு மூல காரணம் பார்ப்பனர்கள் மட்டுமே என்றும், பார்ப்பனியக் கருத்து நிலையை ஏற்றுக் கொண்ட சூத்திரர்கள் துணைக்காரணமே என்றும், பார்ப்பனர்கள் தங்கள் கையிலுள்ள ஸ்விட்சை அழுத்தினால் சூத்திரர்கள் என்னும் பல்ப் எரிகிறது என்றும் அபத்தமான விளக்கத்தை இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் பொருளாதார, அரசியல், பண்பாட்டு அதிகாரங்கள் சூத்திர சாதிகளிலிருந்து உருவாகியுள்ள முதலாளி வர்க்கங்களால், பணக்கார விவசாயிகளால், வர்த்தகர்களால், பார்ப்பனர்களுடனும் பிற மேல் சாதியினருடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
வன்னியர் சங்கம், தேவர் பேரவை, கொங்கு வேளாளர் முன்னேற்ற சங்கம், நாடார் சங்கம் முதலியவை அனைத்து, அரசியல் அதிகாரமோ, பொருளாதார அதிகாரமோ இல்லாத ஆனால் பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வை அதிகரித்த அளவில் பெற்றுக் கொண்டிருக்கும் தலித்துகளை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான கருவிகளேயாகும். தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதில் அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் இந்த அமைப்புகள் தீர்மானகரமான பாத்திரம் வகிப்பதால், அவற்றின் ஆதரவை நாடாத அரசியல் கட்சிகள் அரிதாகவே உள்ளன. வன்கொடுமைத் தாக்குதல்கள் பலவீனமான தலித்துகள் மீது மட்டுமின்றி, ஒப்பீட்டளவில் பலமுள்ள தலித்துகள் மீதும் நடக்கின்றன (கொடியங்குளம்).
ஆளும் கட்சிகள் ஏதோவொன்றுடன் கூட்டு சேர்வதன் மூலம் தலித்துகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதும், கவர்ச்சிகரமான தலைவர்களின் பின்னால் அணி திரள்வதன் மூலமும், நீதிமன்றங்களை நாடுவதன் மூலமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் போன்ற சட்டப் பாதுகாப்புகளைத் தேடுவதன் மூலமும் தலித்துகள் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதும் தொடர்ந்து பொய்ப்பிக்கப்பட்டு வருகின்றன. தலித்துகள் மட்டுமே, அதிலும் குறிப்பாக கிராமப்புற தலித்துகள் மட்டுமே இன்று இந்து, கிறித்துவ, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினரால் "பிறத்தியாராக', "அந்நியராக', "மற்றவராக' பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் "வன்முறை', வன்முறை நாடாமை என்னும் அறிவியல் வகைப்பாடுகளை மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டிய சூழலை தலித்துகள் எதிர்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மறுபரிசீலனை என்பதும்கூட, அம்பேத்கரின் விடுதலைச் சிந்தனையையே தொடக்கப் புள்ளியாகக் கொள்ள வேண்டும். 
சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை, அம்பேத்கர் பொருளாதார ஆய்வு மய்யம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து 27.11.2009 அன்று நடத்திய "அறிஞர் அம்பேத்கர் சிந்தனைகள்' கருத்தரங்கில், "தமிழில் அம்பேத்கர்' என்ற தலைப்பில் எஸ்.வி. ராஜதுரை ஆற்றிய உரையின் சுருக்கமே இக்கட்டுரை.
-எஸ்.வி. ராஜதுரை

Sunday, December 19, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் - இந்தியாவின் பிரதமர் யார்?

நம்மை உண்மையில் ஆள்வது யார்?
இந்தியாவின் பிரதமர் யார்?

இந்தக் கேள்விக்கு ஒன்றாம் கிளாஸ் பிள்ளைகளாக இருந்தால் மன்மோகன் சிங் என்று பதிலளித்திருப்பார்கள். ஆனால் அது தவறு என்பது நாட்டு நடப்பை ஓரளவுக்காவது அறிந்த எந்தவொரு இந்தியனுக்கும் தெரிந்ததுதான்.
இந்தக் கேள்விக்கு, “சோனியா காந்தி” என்று பதிலளித்தால் ஐம்பது மார்க் கொடுக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் இந்தியாவின் பிரதமர் ”நீரா ராடியா” என்று நீங்கள் பதிலளித்திருப்பீர்கள் என்றால் உங்களுக்கு நூறு மார்க்குகள் நிச்சயம் வழங்கலாம்.
”நீரா ராடியா யார்?” என்பதை அறியாதவர்கள் மேலே படியுங்கள்.
காங்கிரஸ் காரர்களுக்கு சுயராஜ்யம் என்பது பிறப்புரிமையாக இருந்ததோ இல்லையோ; ஆனால் ஊழலும், கொள்ளையும் மட்டுமே காங்கிரசின் அதிகாரபூர்வ கொள்கையாக பிறப்புரிமையாக இன்று வரை இருந்து வருகிறது. காங்கிரசின் இந்தப் பிறப்புரிமைக்குப் பங்கம் வராமல் நம் மக்களும் சலிக்காமல் அக்கட்சிக்கு ஆதரவளித்து வருகிறார்கள். யதா பிரஜா, ததா ராஜா.
மாநிலக் கட்சிகள் வலுப்பெற ஆரம்பித்து மத்தியில் கூட்டணி ஆட்சியே யதார்த்த நிலையாக மாறிப் போய்விட்டது. இது ஆரம்பித்த வேளையில் இருந்து இந்தக் கொள்ளையடிக்கும் பிறப்புரிமையில் பிற மாநிலக் கட்சிகளும் உரிமை கோரவும், பங்கு கேட்கவும் ஆரம்பித்தார்கள். விளைவு: லல்லு யாதவ்களின் மாட்டுத் தீவன ஊழல்களும், முலாயம் யாதவ்களின் பல நூறு கோடி ஊழல்களும், கருணாநிதிகளின் தனி ஆவர்த்தன ஊழல்களும் - காங்கிரஸ் கலாச்சாரம் பிற கட்சிகளிடமும் ஆழமாக வேரூன்றிப் பரவ ஆரம்பித்தது.
இங்கே கொள்ளையடிக்கப்படும் பணம் வெளிநாடுகளில் சேமிக்கப்படுகிறது. ஸ்விஸ் போன்ற நாடுகள் நோகாமல் பணக்கார நாடுகளாக வளர்ந்து கொண்டு போக இந்தியாவில் இன்றைக்கும் ஒரு வேளை சோற்றிற்கு வழியில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. உலக வரலாற்றிலேயே, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலம் தொடங்கி, ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து கொள்ளையடிக்கப் பட்டு வரும் ஒரே நாடு இந்தியாவாக மட்டுமே இருக்க முடியும். இந்தக் கொள்ளை இப்போதும் தொடர்கிறது.
இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.
ஊழல்களின் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் இந்த ஊழலின் கதாநாயகனும் ஒரு ராஜாதான். ஆபாசகரமான இந்த ஊழலின் நாயகன் ஆ.ராசாவேதான் என்று ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சொல்லுவதன் அடிப்படையில், அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களைக் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் இது வரை அரசாங்க நிலத்தை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். நிலக்கரியை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். தண்ணீரை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். மண்ணெண்ணெயை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், ஜவுளி, வீடு, கார், பஸ், விமானம், தொலைபேசி, ராணுவம், மனிதர்கள், பெண்கள், சிறுவர்கள், மதங்கள், என்று உண்பது, உடுப்பது, படுப்பது, நின்றது, நடந்தது, பறப்பது, ஊர்வது, மிதப்பது என்று சகல விதமான உயிருள்ள உயிரற்ற படைப்புக்கள் அனைத்தையும் வைத்து ஊழல்கள் நடைபெற்று வந்தேயிருக்கின்றன. இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகளை வைத்து ஒரு மாபெரும் ஊழல் அரங்கேறியிருக்கிறது. அதுதான் இந்த மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல்.
இந்த ஊழல் உலக ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஊழல். ஏனென்றால் இந்த ஊழலின் மதிப்பு மொத்தமாக ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேலானது. ஒரு லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்கள் என்பது கூட நமக்கெல்லாம் தெரியாதுதான். 1 போட்டு பக்கத்தில் 12 சைபர்களை கை வலிக்கப் போட்டால்தான் இந்த ஒரு லட்சம் கோடிகள் என்ற கணக்கு வரும் என்று பொருளாதார மேதைகள் கம்ப்யூட்டரிடம் கேட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
முதலில் எப்படி இந்த ஒரு லட்சம் கோடியை கொள்ளையடித்தார்கள், யார் அடித்தார்கள் என்பவை பற்றி ஊடகங்கள் சொல்லுவதைப் பார்க்கலாம். ஒரு லட்சம் கோடி வருமானம் வரும் அளவுக்கு அது என்ன ஆகப் பெரிய விஷயம் என்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்.
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?
வானொலி, தொலைக்காட்சி, செல் ஃபோன் என்று அனைத்து விதமான கம்பியில்லாத தொலைத் தொடர்புகளுக்கும் மின்காந்த அலைகளே ஊடகமாகச் செயல் பட்டு வருகின்றன. இந்த மின்காந்த அலைகளின் அலை நீளம், வகை ஆகியவற்றை வைத்து பகுத்து பல்வேறு தொடர்புகளுக்கு பயன் படுத்தி வருகிறார்கள். அதாவது, வானொலியின் ஷார்ட் வேவ், மீடியம் வேவ், எஃப் எம் போல, தொலைக்காட்சிகளுக்குரிய அலைவரிசைகள் போல, செல் ஃபோன்களின் பயன்பாட்டிற்கும் மின்காந்த அலைவரிசைகளே பயன்படுத்தப் படுகின்றன.

இதில் வெறும் ஒலிகளை மட்டும் அனுப்பக் கூடிய பிரிவில் வரும் அலைப் பரவல்களை 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றும், தகவல், பேச்சு, படங்கள் போன்ற அனைத்து விதமான தகவல் பரிமாற்றங்களையும் பரிமாறக் கூடிய அலைப் பரவல்களை 3ஜி ஸ்பெக்ட்ரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி பல்வேறு வகையில் உபயோகமாகும் அலைவரிசைகளை அரசாங்கமே கட்டுப் படுத்தி யார், யார் எந்தெந்த அலைவரிசையை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பதை பிரித்து வழங்கி நிர்வாகித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அலை அதிர்வெண்ணை செல்ஃ போன் மூலமான தகவல் தொடர்புக்கு மத்திய அரசாங்கம் ஒதுக்குகிறது. ஒதுக்கப்பட்ட அந்த அலைப் பரவல்களில், சிலவற்றை பயன்படுத்தத் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறுகின்றன. பெற்ற பயன்பாட்டு உரிமையின் அடிப்படையில் தத்தம் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குகின்றன.
அந்த அலைப்பரவல்கள் மூலமாக தனியார் நிறுவனங்களும், அரசாங்கத்தின் பொது நிறுவனங்களும் தொலைத் தொடர்பு சேவைகளை தத்தம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். (இது குறித்த மேலதிக அறிவியல் தகவல்களை பத்ரி அவர்களின் வலைப்பதிவில் படித்துக் கொள்ளலாம். வலைப்பதிவு
இங்கே.)
இந்த அலைப்பரவல்களை கணக்கு வழக்கு இல்லாமல் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில், எப்பொழுது தேவை (demand) ஆதாரத்தை (supply) விட அதிகமாகிறதோ, அப்பொழுது அளவில் குறைந்த வளங்களை ஏதாவது ஒரு பொது அடிப்படையில்தான் பயனர்களுக்கு வழங்க முடியும். அதுதான் எந்தவொரு இருப்பு/தேவை சமானத்திற்குமான அடிப்படையே. அதன்படி மின்காந்த அலைப்பரவல் வளமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்தான் இயங்க முடியும்; இவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறுவனங்கள் மட்டுமே இயக்க முடியும்.
நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது எந்தவொரு அரசாங்கமும் அந்த வளங்களை, ஏலத்தின் அடிப்படையில் யார் அதிக விலையை அரசுக்குக் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் வழங்க முடியும். வழங்க வேண்டும். அப்படித்தான் எந்தவொரு அரசாங்க வளங்களுமே பிரித்து வழங்கப் படுகின்றது. அதன்படி இந்த அலைப்பரவல்களை வேண்டுபவர்களுக்கு அரசாங்கம் ஏலத்தின் அடிப்படையில் பிரித்து வழங்க முடிவு செய்தது. அங்குதான் இந்த ஊழலுக்கு அஸ்திவாரமும் போடப் பட்டது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு உதாரணம் பார்க்கலாம். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பெரிய அளவிலான நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலம் சென்னையின் மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த நிலத்தை பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு வேண்டும் என்று கோருகிறார்கள். பலத்த போட்டி நிலவுகிறது. ஆனால் இருப்பதோ பத்து ஏக்கர் நிலம் மட்டுமே. இருக்கும் பத்து ஏக்கர்களுக்கோ ஆயிரக்கணக்கான கட்டுமான வியாபாரிகளும், பெரு நிறுவனங்களும் போட்டி போடுகிறார்கள். அரசாங்கத்திற்கோ அந்த நிலம் விற்பதன் மூலமான வருவாய் தேவைப் படுகிறது. ஏனெனில், வருவாயை வைத்து அரசாங்கம் நிறைய மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம். மக்களுக்கு அந்த வருவாயையை தக்க விதத்தில் பயன் படுத்தலாம். அப்படியானால் அரசாங்கம் யாருக்கு அந்த நிலத்தை பிரித்து வழங்க வேண்டும்?
அரசாங்கத்தின் ஆட்சியாளர்களுக்கா? அவர்களது உறவினர்களுக்கா? அதிகாரிகளுக்கா? அல்லது எந்த நிறுவனம் அதிகம் ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தருகிறதோ அந்த நிறுவனங்களுக்கா? யாருக்குத் தர வேண்டும்? எப்படித் தர வேண்டும்? எலிமெண்டரி ஸ்கூல் பையனிடம் இந்தக் கேள்விவைக் கேட்டால் கூட மிக எளிதாக விடையைச் சொல்லி விடுவானே? நிலத்தின் மதிப்பை ஏலத்துக்கு விட்டு யார் அதிக விலைக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கே அந்த நிலம் விற்கப் பட வேண்டும் என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?
இந்த ஒரு எளிய விடை இந்திய அரசாங்கத்திற்கு, அதிலும் உலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதையான மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் இயங்கும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் போகுமா? தெரியாமல் போய் விட்டது என்றுதான் அதிகாரபூர்வ அரசு அறிக்கைகள் சொல்கின்றன; அவரும் சொல்கிறார். கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரரான மிஸ்டர் உத்தமரான அப்பழுக்கற்ற தூய்மையாளரான திருவாளர் மன்மோகன் சிங்கனார் அவர்கள் தலைமையில் உள்ள அரசாங்கம் இது போன்ற ஒரு விற்பனையில் எந்தவித சந்தேகத்திற்கும், எந்தவித ஊழல்களுக்கும், எந்தவித முரண்பாடுகளுக்கும், எந்தவித லஞ்சங்களுக்கும், எந்தவிதமான சிபாரிசுகளுக்கும் இடமில்லாமல் அரசுக்கு அதிக பட்ச வருமானம் உள்ள வழியைத்தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன?
மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான ஊ பி ஏ (ஊழலைப் பின்பற்றும் ஏஜென்ஸி) செய்த ஒரு மாபெரும் அயோக்யத்தனத்தால் இன்று இந்தியாவுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு.
ஸ்பெக்ட்ரம் என்பது ஏன் ஒரு பெரும் விலை மதிப்புள்ள ஒரு வளமாகிறது?
ஸ்பெக்ட்ரம் எனப்படும் கம்பியில்லாத தொலைத் தொடர்பு, வலைப் பின்னல்களுக்கான ஊடகம். அரசாங்கத்தின் கட்டுப்பாடில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அளவுள்ள ஒரு வளம். நீர்வளம், நில வளம், விவசாய வளம், மனித வளம், கனிம வளம், மின் வளம், கடல் வளம், வன வளம், மலை வளம், நதி வளம் போல இதுவும் ஒரு வளம். ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு வளம். இந்தியாவின் வான் வெளி எப்படி கண்ணுக்குத் தெரியாத ஒரு வளமோ அதே போல வான்வெளியில் விரிந்திருக்கும் இந்த அலைப் பரவல்களும் ஒரு வளமே.
இந்த வளத்தை பெற உலக அளவிலும், இந்திய அளவிலும் பெரும் தொலைத் தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்குள் பலத்த போட்டி நிலவுகிறது. ஏன் பலத்த போட்டி? உலகத்திலேயே மிக அதிக அளவு செல் ஃபோன் பேசும் பயனர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள்.
இன்று இந்தியாவில் ஒரு மிகப் பெரிய நடுத்தர வர்க்கம் உருவாகி வருகிறது. அவர்களது வாங்கும் திறனும், சக்தியும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. செல் ஃபோன் பயன்பாடு என்பது இன்று வெறும் நடுத்தரவர்க்கத்தினரால் மட்டும் பயன் படுத்தப் படும் ஒரு சந்தை என்பதையும் தாண்டி கீழ் நடுத்தர மக்களிடம் பரவலாகப் புழங்கும் ஒரு சாதனமாகவும் மாறி வருகிறது. அதன் பயன்பாடும், அது பயன் படுத்தப் படும் விதமும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டும் புதிய பரிமாணங்களை அடைந்தும் வருகிறது.
ஆக இந்தியாவின் பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்களும் அவர்களின் பயன்பாடுகளும் அவை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான சந்தையும் உலக அளவில் பெரு நிறுவனங்களைக் கவர்ந்து அவர்கள் அனைவரையும் இந்தியச் சந்தைக்கு இழுத்து வருகிறது.
செல் ஃபோன் என்பது பேசுவதற்கு மட்டுமே பயன்படும் ஒரு தொலைபேசி சாதனமாக மட்டும் இன்று பயன் படுவதில்லை. இணையம், புகைப்படம், பங்கு வர்த்தகம், இணைய வர்த்தகம், பொழுது போக்கு என்று பல்வேறு விதமான செயல் பாடுகளுக்கும் செல்ஃ போன் என்ற ஒரே சாதனம் இன்று பயன் படுத்தப் பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைக்கு ஒரு ஃபோன் விகிதம் செல்ஃபோன் வைத்திராத இந்தியர்களே கிடையாது என்ற நிலைக்கு இதன் சந்தை பெருத்து வருகிறது.
கிராமங்களில் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் கூட செல்ஃபோன் பயன் படுத்தி வருகிறார்கள். இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் செல் ஃபோன் கோபுரங்கள் ஊடுருவி வருகின்றன.
செல் ஃபோன் சாதனம், அதில் பேசும் நிமிடங்களுக்கான கட்டணங்கள், அதில் இறக்கப் படும் விளையாட்டு மென்பொருள்கள் மற்றும் இசைகளுக்கான சந்தைகள், அதன் மூலம் செய்யப் படும் விளம்பரத்திற்கான சந்தை, வாங்கப் படும் பொருட்கள், பிற பயன்பாடுகள் என்று செல்ஃபோன் மூலமாக விளையும் உபரி வணிகத்தின் பெருக்கம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ளவை.
பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்கள் இன்று இந்தியாவில் உருவாகி வருகிறார்கள். கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தும் எந்தவொரு பொருளின் வியாபார மதிப்பும் பல கோடி மதிப்புள்ளவையாகவே இருக்கும்.
இவை அளிக்கும் மிகப் பெரிய உலகளாவிய வர்த்தக வாய்ப்பும் அவை ஏற்படுத்தும் சந்தைகளும் அதனால் விளையும் லாபங்களும் பிரமிக்கத் தக்கவை. ஆகவே இந்த செல்ஃபோன்களுக்குத் தேவைப் படும் அலைவரிசைகளின் உரிமைகளைப் பெறுவதிலும் உலக அளவில் பெரும் போட்டி நிலவி வருகிறது.
ஆக இந்த அலைப் பரவல் வளத்தினை உரிய முறையில் ஏலம் மூலமாக விநியோகித்திருந்தால் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் வரை நிதி ஆதாரத்தைப் நிச்சயமாகப் பெற்றுத் தந்திருக்கும். ஆனால் இது முறைகேடாக, மக்கள் விரோதமாக, அரசுக்குப் பெரும் நஷ்டத்தையும் தனியார்களுக்குப் பெரும் ஊழல் பணத்தையும் பெற்றுத் தரும் விதமாக அமைந்து விட்டது. இந்தியாவில் இதுவரை நடந்த அத்தனை ஊழல்களின் ஒட்டு மொத்த மதிப்பினைக் கூட்டினாலும் அதை விட பல மடங்கு அதிக அளவில் இதில் பொது மக்களாகிய உங்களுக்குச் சேர வேண்டிய பணம் கையாடல் செய்யப் பட்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு முன்னோட்டம்:
ஸ்பெக்ட்ரம் ஊழலை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால் இதன் பின்ணணியில் அமைந்த அரசியல் சூழ்நிலைகளைச் சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
சென்ற முறை திரு. மன்மோகன் சிங் தலமையில் அரசு அமைந்த பொழுது காங்கிரஸ் கட்சி, திமுக போன்ற உதிரி மாநிலக் கட்சிகளின் தயவிலேயே ஆட்சியைப் பிடித்தது. அப்பொழுது மத்திய அரசின் மிக முக்கியமான துறையான தொலைத் தொடர்புத் துறை மந்திரிப் பதவியை திமுக வின் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான திரு கருணாநிதி தன் மருமகனின் மகனான தயாநிதி மாறனுக்குப் பெற்றுத் தந்தார்.
தயாநிதி சன் டிவி எனப்படும் மாபெரும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். அப்படி ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் முதலாளி ஒருவரிடம் அந்தத் துறையின் மந்திரிப் பதவிப் பொறுப்பும் அளிக்கப் படுவது நேர்மையான ஒரு செயலாக இருக்காது. Conflict of Interest எனப்படும் நியாயமில்லாத ஒரு பதவி வழங்கலாக அது கருதப் பட்டு நியாயப் படி தயாநிதி மாறனுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கவே கூடாது. ஆனால் நமது மிஸ்டர் க்ளீன் மன்மோகன் சிங் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டணிக் கட்சியின் நிர்ப்பந்தத்தில் அந்தப் பதவியை தயாநிதி மாறனுக்கே அளித்தார்.
மேலும் தயாநிதி மாறனுக்கு எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதிகளுக்கு அளிக்கப் படும் கேபினட் பொறுப்பு மந்திரி பதவி அளிக்கப் பட்டது பலரது கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. ஆனால் நேர்மை, நியாயம், விதிமுறைகள், அறவுணர்வு போன்ற லட்சியங்கள் கிஞ்சித்தும் இல்லாத காங்கிரஸ் கட்சி அவற்றையெல்லாம் குப்பையில் வீசி எறிந்து விட்டு மாறனுக்கு முக்கியமான துறையை வழங்கியது. உண்மையில் இந்தத் துறையின் மேல் திமுக கண் வைத்ததன் காரணமே, இந்தத் துறையின் மூலமாகச் சாத்தியப் படும் விநியோகமும் அதன் மூலமாக செய்யக் கூடிய பெரும் ஊழலின் சாத்தியக் கூறுகளுமேயாகும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை இந்தப் பதவிக்காக அக்கட்சி செய்த பெரும் நிர்ப்பந்தங்களும் பேரங்களுமே நிறுவத் தேவையான சாட்சிகளாக அமைகின்றன.
குடும்ப உறுப்பினரான தயாநிதி மாறனுக்கு முக்கியமான துறையைப் பெற்றுத் தந்து விட்டாலும் கூட அவர்கள் குடும்பத்துக்குள் நடந்த சொத்துத் தகராறுகளின் காரணமாக பாதியிலேயே அவரது பதவி பறிக்கப் பட்டு விட்டது. அந்த நேரத்தில் அது வரையில் சுற்றுச் சூழல் துறை மந்திரியாக இருந்த மற்றொரு திமுக மந்திரியான ஆ.ராஜாவிடம் தொலைத் தொடர்புத் துறை அளிக்கப் பட்டது. அதில் இருந்து இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்ச கட்ட கியருக்கு மாறியது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது எப்படி?
ஆ.ராஜா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் மந்திரியாக இருந்த பொழுதே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. லஞ்சம் வாங்கிக் கொண்டு முறை கேடான கட்டிடங்கள் கட்டுவதற்கு சூழல் துறையின் அனுமதியை அளிக்கிறார் என்பது அவர் மீது பல தரப்புக்களில் இருந்தும் எழுந்த முக்கியக் குற்றசாட்டு. “தந்திரமும், தரகும் செழித்து வளர்ந்த தலைநகரில் ராஜாவுக்கு புதிய நண்பர்கள் பலர் சுற்றுச் சூழல் துறையில் உருவாகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் வணிகத்தின் அதிபர்கள்” என்றெல்லாம் புலனாய்வுப் பத்திரிக்கைகள் தெரிவித்தன. பிரதமர் ராஜா மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன.

இந்தத் தருணத்தில் தமிழ் நாட்டில் மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தாருக்கும் பெரும் உள்குடும்ப யுத்தம் ஒன்று துவங்கியிருந்தது. 60கள் வரையிலும் கூட பணத்தட்டுப்பாட்டில் தடுமாறிய கருணாநிதி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு இப்போது பல்லாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டி விடுகிறது. சன் டிவி என்னும் ராட்சச தொலைக்காட்சி நிறுவனம் அவர் குடும்பத்தில் இருந்து கிளைகள் பிரிந்து அசுர வேகத்தில் மாநில, மத்திய அரசுகளில் அவரது கட்சிக்கு இருந்த செல்வாக்கின் மூலம் வளர்கிறது. அதன் பாகப்பிரிவினை யுத்தத்தின் நடுவே அப்பாவி இளைஞர்கள் மூவர் மதுரையில் எரித்துக் கொல்லப் பட, சன் டிவி பாகஸ்தர்களில் ஒருவராகிய தயாநிதி மாறனின் பதவி பறிக்கப் பட்டு, அந்தப் பதவி ஏற்கனவே தலைநகர் டெல்லியில் ஊழல் வித்தகராக மாறிவிட்டிருந்த ஆ.ராஜாவிடம் அளிக்கப் படுகிறது.
ஊடகங்கள் சொல்லும் கதையின்படி, சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாகிய ராஜா தன் ரியல் எஸ்டேட் படை சூழ சஞ்சார் பவன் அலுவலகத்தில் தொலைத் தொடர்பு மந்திரியாகிறார். அவரது தரகர்கள் அனைவரும் புதிய துறைக்கு ராஜாவுடன் சேர்ந்தே இடம் பெயர்கிறார்கள். புதிய துறையில் பணம் கொழிக்கும் வாய்ப்புக்களை இனம் காண்கிறார்கள். வனத்துறையில் சில கோடிகள்தான் கிட்டின, இங்கு ஒரு பெரிய தங்கச் சுரங்கமே ஸ்பெக்ட்ரம் விநியோகத்தின் மூலமாக மறைந்து கிடக்கிறது எனக் கண்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். புதிய துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விநியோகிக்க வேண்டிய தங்கச் சுரங்கம் இருப்பதைக் கண்டறியும் ராஜா அதை கடத்திச் சென்ற திட்டம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல். தங்கச் சுரங்கத்தை வெட்டிக் கொள்ளையடிக்கும் திட்டம் உருவாகிறது.
அப்படி ஏற்கனவே ராஜாவுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு சக்தி வாய்ந்த இடைத் தரகர்தான் ராஜாவின், ஸ்பெக்ட்ரத்தின், ஏன் இந்தியாவின் தலைவிதியையே தீர்மானிக்கும் சகல வல்லமை படைத்த அதிகார பீடமாக மாறுகிறார் என்று ஹெட்லைன்ஸ் சானல் சொல்லுகிறது. அவரைப் பற்றி பின்னால் பார்க்கலாம். முதலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் எப்படி நடத்தப் பட்டது என்பதை பார்த்து விடலாம்.
ராஜாவின் ஊழல்களா? அல்லது ஊழல்களின் ராஜாவா?
1900ம் ஆண்டு சென்னை போட் கிளப் நிலத்தில் ஒரு கிரவுண்டு என்ன விலையில் விற்றதோ அதே விலையை 2010ல் அதே கிரவுண்டுக்கு யாராவது விற்கத் தீர்மானம் செய்வார்களா? செய்தார் ராஜா ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில்!
2001ம் ஆண்டு வெறும் 40 லட்சம் பேர்களே செல்ஃபோன்கள் பயன் படுத்துபவர்களாக இந்தியாவில் இருந்தார்கள். இந்த செல் ஃபோன் பயனர்களின் எண்ணிக்கையின்படி ஒரு விலை 2001ல் தீர்மானிக்கப் பட்டது.
2001ல் 40 லட்சமாக இருந்த செல்ஃபோன் பயனர்களின் எண்ணிக்கை 2008ல் 30 கோடியாக உயர்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. பயனர்கள் அதிகரித்துவிட்ட 2008ம் ஆண்டிற்கான விலை, பல ஆண்டுகள் முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகத்தான் இருக்கும். அப்படி, ஒரு சேவையின் தேவை நூறு மடங்கு அதிகரித்திருக்கும் பொழுது அதன் விலை குறைந்தது ஒரு பத்து மடங்காவது அதிகரித்திருக்க வேண்டும் அல்லவா? அதுதான் நடக்கவில்லை என்று பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. ஏன் நடக்கவில்லை? மேலே படியுங்கள்.
ஸ்பெக்ட்ரம் வரிசைகளை 2008ம் ஆண்டில் விற்க வேண்டிய அடிப்படை விலையாக 2001ல் நிர்ணயத்த குறைந்த விலையையே முடிவு செய்கிறார் ராஜா. டிராய் அமைப்பும், பத்திரிகைகளும், பிரதமர் அலுவலகமும் இந்த குறைந்த விலை நிர்ணயத்தை மாற்றச் சொல்லியும் பிடிவாதமாக அந்தக் குறைந்த விலையே அடிப்படை விலை என்று ராஜா நிர்பந்தித்து விடுகிறார் என்பது ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
அவர்களது கூற்றுப்படி, விலையைக் குறைவாக நிர்ணயித்ததும் அல்லாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வரிசைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாமல் மிகவும் ரகசியமாக, சந்தேகம் தரும் வகையில், முறையான நெறிமுறைகளைப் பின்பற்றாமல், முறைகேடாக, யாருக்கும் அறிவிக்காமல் பெரிய நிறுவனங்கள் யாரும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்காமல், ராஜாவே இந்த விற்பனையை தனியாக நடத்தி முடித்து விடுகிறார்.
அதாவது ஏலத்திற்கு விடாமல் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் என்று அறிவித்து விடுகிறார். ஒரு சில ஊர் பேர் தெரியாத, திடீரென்று முளைத்த, ரியல் எஸ்டேட் கம்பெனிகள்தான் முதலில் வந்தன என்று அறிவித்து விடுகிறார். அந்த சந்தேகத்திற்கு உரிய ரகசியமான கம்பெனிகளுக்கே ஸ்பெக்ட்ரம் எல்லாம் சொந்தம் என்று சொல்லி, முன்கூட்டியே சதித் திட்டம் போட்டு வைத்திருந்த குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரெம் வரிசைகளை விற்று விட்டு, அதற்குப் பின்னால் முறையாக வந்த பெரும் நிறுவனங்கள் அனைத்திற்கும் பெப்பே காட்டி விடுகிறார் ராஜா.
“சரி இதனால் அரசுக்கு என்ன நஷ்டம்? விற்பனைதான் நடந்து விட்டதே? காசுதான் வ்ந்து விட்டதே?” என்று அப்பாவித்தனமாக நீங்கள் யாரேனும் கேட்கலாம். ஒரு சில ஊடகங்கள் கசியவிடும் குற்றச்சாட்டு உண்மையானால், உங்களது புரிதல் ஏன் சரி இல்லை என்பதையும் இப்படி பின்வாசல் வழியாக செய்த விற்பனை மூலமாக அரசுக்கு எப்படி ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டது என்பதையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1. முதலில் அரசிற்குச் சொந்தமான, தேவை மிக அதிகம் உள்ள ஒரு மாபெரும் வளத்தை, அந்த வளத்தைப் பெற கடும் போட்டிகள் நிறைந்த ஒரு சூழலில், அதன் அடிப்படை விலையைத் தற்கால தேவையைப் பொருத்தே நிர்ணயித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் உள்நோக்கத்துடனும் சதித்திட்டத்துடனும் 2001ல் குறைந்த பயனர்கள் இருந்த சூழலில் தீர்மானிக்கப் பட்ட விலையை நிர்ணயித்தது ராஜாவின் முதல் குற்றம்.
2. இரண்டாவதாக, அப்படியே குறைந்த பட்ச அடிப்படை விலையை நிர்ணயித்திருந்தாலும் கூட கடும் போட்டி நிலவும் சூழலில் அந்த வளங்களை ஏலம் விடுவதின் மூலமாகவே விற்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி ஏலத்திற்கு விட்டிருந்தால் ராஜா விற்ற அடிப்படை விலையை விட பத்திருபது மடங்கு அதிகமாக அவை விலை போயிருக்கும். அரசுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய்கள் வருமானத்தை ஈட்டித் தந்திருக்கும்.
அப்படி ஏலத்திற்கு விடாமல் தான்தோன்றித்தனமாக ரகசியமான முறையில் அனைத்து நிறுவனங்களையும் போட்டி போட விடாமல் முன்னால் வருபவர்களுக்கே விற்பேன் என்று கள்ள ஆட்டம் ஆடி குறைந்த விலைக்கு விற்று அரசுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுத்தியது ராஜாவின் இரண்டாவது குற்றம்.
3. சரி அப்படி குறைந்த விலைக்கு வைத்து அவர் யாருக்கு விற்றிருக்கிறார் என்று பார்த்தால் அங்குதான் அவரது சகுனி வேலைகள் யாவும் அம்பலத்துக்கு வருகின்றன என்பது ஊடகங்கள் சொல்லும் கதை.
முதலில் சில தில்லு முல்லுகள் செய்து முறையாக இந்தத் தொழிலில் இருக்கும் பெரு நிறுவனங்கள் எவையும் விண்ணப்பம் சமர்ப்பிக்காமல் செய்து விடுகிறார். அதாவது விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய நேரம் காலாவதியாகி விட்டது என்று சொல்லி பெரிய நிறுவனங்களை நிராகரித்து விட்டு தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே விற்று விடுகிறார். அந்த நிறுவனங்கள் எவை என்று பார்த்தால் நமக்கு அடுத்த கடும் அதிர்ச்சி காத்திருக்கிறது.
ராஜா முதலில் விற்பனை செய்த நிறுவனங்கள் இரண்டு - ஸ்வான் என்ற நிறுவனமும், யுனிடெக் என்ற நிறுவனமும். இந்த இரண்டு நிறுவனங்களும் முதலில் தொலைத் தொடர்பு நிறுவனங்களே அல்ல. ரியல் எஸ்டேட் கம்பெனிகள்.
எந்தவிதமான தொலைத் தொடர்பு கட்டுமானங்களிலும் அனுபவம் இல்லாத, முதலீடு செய்யாத நிறுவனங்கள். அவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலாவது ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அவைகள் அதிலும் ஈடுபட்டவை அல்ல. புதிதாக இந்த விற்பனையை வாங்குவதற்காகவே திடீரென்று முளைத்த கம்பெனிகள்.
இவை எங்கிருந்து வந்தன? யார் உருவாக்கினார்கள்? இவைகளுக்கும் ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்? அவற்றிற்கும் கருணாநிதியின் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் “தி பயனீர்”, “ஹெட்லைன்ஸ் டுடே”, “டைம்ஸ் நௌ” போன்ற ஊடகங்கள் தருகின்றன. அவர்கள் சொல்லும் தகவல்களின்படி இந்த ஊழல் மிகுந்த எச்சரிக்கையுடன், நேரடியாகக் குற்றம் சாட்ட முடியாதபடி வடிவமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் அப்படி என்னதான் சொல்லுகிறார்கள் ?
ஊர் பேர் தெரியாத இரு கட்டிட வணிக நிறுவனங்களுக்கு கடும் தொழில்நுட்ப அனுபவமும் அறிவும் தேவைப் படும் ஒரு புதிய தொழில்நுட்ப வளம் அடிமாட்டு விலைக்கு விற்கப் படுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்ற கதையாக, கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இந்த வளம் விற்கப் பட்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் போன்ற ஒரு உயர் தொழில்நுட்பம் கோரும் வளத்தை சம்பந்தமேயில்லாமல் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு எதற்காக விற்க வேண்டும்?
ஏன் 2008ல் 2001ல் இருந்த விலை வைத்து விற்கப் பட வேண்டும்?
ஏன் தொலைத் தொடர்பிலும் செல்ஃபோன் தொழிலிலும் பழம் தின்று கொட்டை போட்ட உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் எதுவும் இந்த விற்பனையில் கலந்து கொள்ள முடியாமல் துரத்தி அடிக்கப் பட்டன?
ஏன் முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று விற்பனை உத்தி மாற்றப் பட்டது? இது என்ன பள்ளிக்கூடத்தில் வைக்கப் படும் ஓட்டப் பந்தயமா?
ஒரு சில ஊடகங்கள் எழுப்பும் மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒவ்வொன்றாக அதே ஊடகங்கள் தரும் பதிலைக் காணும் பொழுது இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் முழு மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பித்து, இதில் யார் யார் பங்குதாரர்கள்? யார் யார் கூட்டாளிகள்? யார் யார் குற்றவாளிகள்? என்பவை தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும். அவற்றை ஒவ்வொன்றாக விடுவித்து இந்த உலக மகா ஊழலின் புதிரை விடுவிக்கலாம். சற்று பொறுமையாகவும் ஆழமாகவும் இவற்றைப் படித்து உள்வாங்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்.
இந்த ஊழல் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பெரும் அளவில் பாதிக்கக் கூடியது.
இந்த ஊழல் குறித்து ஊடகங்கள் தெரிவிப்பவை என்ன?
ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் சம்பந்தேமேயில்லாமல் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டது என்று ஒரு சில ஊடகங்கள் சொல்வதைப் பார்த்தோம்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு பாமரனுக்கும் எழும் சில அடிப்படைக் கேள்விகளையும் அதற்கு ஊடகங்கள் தரும் பதில்களையும் கீழே காணலாம்:
1. ஏன் தொலைத் தொடர்பு சம்பந்தப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப வளமான ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கப் படாமல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்கப் பட்டன?
நியாயமான கேள்வி. இந்த நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரத்திற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. இருந்தாலும் இந்தக் கம்பெனிகளுக்கு அரசாங்கம் தனது அரிய வளம் ஒன்றை தானம் செய்தது போல 2001ல் நிர்ணயிக்கப் பட்ட விலைக்கு விற்றிருக்கிறது.
ஏன்?
ஏனென்றால் இந்த நிறுவனங்கள் எல்லாம் மந்திரி ராஜாவின் மற்றும் அவரது கட்சித் தலைவரின் உறவினர்களின் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லுகின்றன ஊடகங்கள். இதை பயனீர் பத்திரிக்கையும் (The Pioneer), அதன் பிறகு அரசு உளவு அமைப்பான சிபிஐயும் கண்டு பிடித்திருக்கின்றனர். ஆக ஆதாயம் இல்லாமல் ஆண்டிமுத்து ராஜா இந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்கவில்லை என்கின்றனர் இவர்கள்.
அவர்கள் கூற்றுப்படி, அரசு வளத்தைக் குறைந்த விலைக்கு தனக்கும் தனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். கடைத்தேங்காயை எடுத்துத் தனக்குத் தானே உடைத்துக் கொண்டிருக்கிறார்.
2. அப்படி இவரது பினாமி கம்பெனிகளுக்கு விற்றதால் இவருக்கு என்ன லாபம்?
நல்ல சந்தேகம்.
2001ல் முடிவு செய்யப் பட்ட விலையின் அடிப்படையிலேயேதான் ஸ்பெக்ட்ரம் விற்கப் பட வேண்டும் என்று இவர் பிடிவாதமாக பல எதிர்ப்புக்களையும் மீறி முடிவு செய்யும் பொழுதே மத்திய மந்திரி சபை சுதாரித்துக் கொண்டு இவரைக் கட்டுப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால், லேசான சில எதிர்ப்புக்களுடன் இவர் தொடர்ந்து தன் விற்பனையை மேற்கொள்கிறார்.
அப்படி மேற்கொள்ளும் பொழுது திட்டமிட்டு குறிப்பிட்ட சில கம்பெனிகளுக்கு மட்டுமே இந்த விற்பனையை செய்து முடித்து விடுகிறார். ஏனென்றால் இவர் விற்ற நிறுவனங்களுக்கும் இவருக்கும், இவரது கட்சித் தலைவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருக்கின்றன என்று ஊடகங்கள் சொல்லுகின்றன. அடிப்படையில் இவை யாவுமே இவரது மறைமுகமான நிறுவனங்களே அல்லது இவருக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே என்பதை சிபிஐ இப்பொழுது கண்டு பிடித்திருக்கிறது என்பதையும் இந்த ஊடகங்கள் மறக்காமல் சொல்லுகின்றன.
பண்டோராவின் பெட்டி போல ஆரம்பம் எது, முடிவு எது, குற்றம் செய்தவர்கள் யார் என்பவற்றைத் தெளிவாகச் சொல்ல முடியாதபடி வலைப் பின்னல்களாக மிகக் கச்சிதமாக இந்த ஊழல் நடந்திருக்கிறது.
இவர் உரிமைகளை விற்றதாகச் சொல்லப்படும் சில கம்பெனிகளின் வண்டவாளங்களைப் பார்க்கலாம்.
முதலில் ஸ்வான் என்னும் கம்பெனிக்கு 13 வட்டாரங்களுக்குரிய ஸ்பெக்ட்ரம் பங்குகள் 1537 கோடி ரூபாய்களுக்கு விற்கப் பட்டிருக்கின்றன என்கின்றன தகவல்கள். அந்த ஸ்வான் நிறுவனமோ தன்னை ஒரு கட்டிட நிறுவனமாக பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அனில் அம்பானி வசம் இருந்த இந்த நிறுவனத்தை இன்னொருவர் மூலமாக வாங்கி, இந்த ஸ்பெக்ட்ரத்தை வெறும் 1537 கோடி ரூபாய்களுக்கு முதலில் அரசிடம் இருந்து இந்தக் கம்பனியார் வாங்குகிறார்கள். வாங்கிய கையோடு எலிஸாட் என்றொரு மத்திய கிழக்கு நிறுவனம் ஒன்றிற்கு 4500 கோடி ரூபாய்க்கு 100% மேல் லாபம் வைத்து விற்கிறார்கள். பின்னர் அந்தக் கம்பெனியோ வேறு ஒரு நிறுவனத்திற்கு இன்னும் அதிக விலைக்கு வாங்கிய பங்குகளை விற்கிறது!
இதைப் போலவே இன்னும் சில வட்டாரங்களுக்கான உரிமை யுனிடெக் என்றொரு மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்கப் பட்டிருக்கிறது. அந்த நிறுவனமோ அரசிடம் இருந்து 22 வட்டாரங்களுக்கு 1651 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமையை டெல்நார் எனப்படும் நார்வே கம்பெனி ஒன்றிற்கு 6120 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கிறது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன.
இந்த பரிவர்த்தனையில் கிடைத்த கொள்ளை லாபம் பல்வேறு இடைத்தரகு கம்பெனிகள் மூலமாக கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்றப் பட்டிருக்கின்றது.
அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன.
இந்தத் தகவல்களின் சாரம் என்ன ?

நீங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறீர்கள். அதற்கு மத்திய அரசு உடந்தையாகவோ அல்லது மறைமுக கூட்டாளியாகவோ இருந்திருக்கிறது.
நம் சொந்தப் பணம் நூறு ரூபாய்கள் பிக்பாக்கெட் அடிக்கப் பட்டால் கூட கிடந்து பதறும் பொதுஜனம், திருடியவனைப் பிடிக்கத் துடிக்கும் பொது மக்கள், தங்கள் பொதுப்பணம் 1 லட்சம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப் பட்டிருந்தும் கொஞ்சம் கூட சுய பிரக்ஞை இன்றி , சுய உணர்வு இன்றி, கவலை இன்றி, விழிப்புணர்வு இன்றி கொள்ளையடிக்கும் அதே அரசியல்வாதிகளைத் துதி பாடி, புகழ்ந்து, பாராட்டித் திரிகிறார்கள்.
இப்படி ஒரு நாட்டின் மக்கள் இருந்தால் அந்த நாடு எங்கனம் உருப்படும்?
3. 2ஜி குறைந்த விலைக்கு விற்கப் பட்டிருக்கிறது என்பது எப்படி உறுதியாகத் தெரியும்?
இப்பொழுது 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்காக முறையான ஏலம் நடந்து வருகிறது. கோர்ட், மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பினால் ராஜாவின் விருப்பத்தை மீறி இந்த 3ஜி ஏலம் வேறு ஒரு மந்திரி குழுவின் தலைமையில் நடந்து வருகிறது. அதன் விற்பனை நிலவரத்தின் படி 2 ஜி விற்பனை அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டிருப்பது உறுதிப் பட்டு விட்டது.
சந்தை நிலவரப்படி அரசாங்கமே நேரடியாக உண்மையான தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டால், 1000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட 2ஜி அலைவரிசைக்கு ஈடான 3ஜி அலைவரிசையை கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கலாம் என்பதைத்தான் தற்பொழுது நடை பெறும் 3 ஜி ஏலம் உறுதிப் படுத்துகிறது.
அதன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.
2ஜி மோசடி விற்பனைக்கும் 3 ஜி ஏல விற்பனைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும். தனது பினாமி கம்பெனிகளுக்கு ஆ.ராஜா விற்ற விலைக்கும் தற்பொழுது சந்தை நிலவரப் படி முறையான ஏலத்தில் போகும் விலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கீழ்க்கண்ட பட்டியலில் காணலாம்.
(இது ஒரு சாம்பிள் மட்டுமே. மொத்தப் பட்டியல் அல்ல. அதனால் கூட்டினால் லாபக் கணக்கு 1 லட்சம் கோடி வராது.)

ஆக நியாயமான முறையில் பல்வேறு வட்டாரங்களுக்கான 2ஜி ஸ்ப்கெட்ரம் உரிமை ஏலத்தில் விடப் பட்டு விற்கப் பட்டிருக்குமேயானால் 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு கிடைத்த அதே அமோக விலை கிட்டியிருக்கும் என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் இப்பொழுது உறுதியாகியிருக்கிறது என்கின்றன இந்த ஊடகங்கள்.
இப்பொழுது மீண்டும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப் பட்ட நிறுவனங்களின் ஜாதகங்களை நாம் அலசலாம்.
ஸ்பான் நிறுவனத்தின் பின்னணி என்ன? அது எப்படி தனக்குக் கிடைத்த லாபத்தை யார் கண்களிலும் படாமல் ஒளித்து வைக்கிறது?
முதலில் ஸ்பான் எனப்படும் நிறுவனம். இந்த நிறுவனத்தை யார் துவக்கியது? பின்னால் யார் வாங்கினார்கள் ? இதன் முதல் கட்ட முதலீடு என்ன? இவர்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்குவதற்குத் தேவையான பணம் எங்கிருந்து வந்தது? அதற்கு முறையான கணக்குக் காட்டப் பட்டுள்ளதா? வரி கட்டப் பட்டுள்ளதா? எவ்வளவு நாட்கள் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள்? இவர்கள் பின்ணணி என்ன? ஸ்பெக்ட்ரத்தை வாங்கியவுடன் அந்த உரிமையை யாருக்கு விற்றார்கள்? அந்த விற்பனையின் லாபத்திற்கு வரி கட்டப் பட்டதா அந்த லாபப் பணம் எங்கு சென்றது? யாருக்குப் போனது ? எந்தக் கணக்கிற்கு சென்றது?

இந்தக் கேள்விகளையெல்லாம் ஆராயும் பொழுது இந்த மொத்த விற்பனையினால் ஏற்பட்ட லாபப் பணம் அனைத்துமே கனிமொழி, ராஜா, கருணாநிதியின் துணைவியான ராஜாத்தி அம்மாள் ஆகியோர்களுக்குச் சென்றிருப்பதாக சி பி ஐ கண்டுபிடித்துள்ளதாக சிபிஐ வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆவணங்களை மேராமன் என்ற பதிவில் நீங்கள் நேரடியாகப் படிக்கலாம். தளம் இங்கே.
இதை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதைச் சொல்லும் இந்தத் தகவல்களைப் படிக்கும் பொழுது நமக்குத் தலை சுற்றுகிறது. ஒரு சின்ன வட்டத்தை மட்டும் இங்கு கவனிக்கலாம்.
ஸ்வான் என்ற நிறுவனத்தை முதலில் யார் என்றே தெரியாது என்று ராஜா மறுத்திருக்கிறார். அவர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள். எனக்குத் தெரியவே தெரியாத நிறுவனங்கள். அவர்கள் முதலில் வந்தார்கள், ஆதலால் நான் முதலில் கொடுத்து விட்டேன் என்று ஒன்றுமே தெரியாத அப்பாவி போல, வாயில் விரலைக் கொடுத்தால் கடிக்கக் கூடத் தெரியாத அப்பாவிச் சிறு குழந்தை போல ராஜா பேசியிருக்கிறார். ஆனால் ஸ்வான் நிறுவனத்தின் பங்குதாரர்களைத் தேடினால் அது சுற்றிச் சுற்றி ராஜாவுக்கு நெருங்கியவர்களிடம் வந்து முடிகிறது என்கின்றன இந்தத் தகவல்கள்.
அந்த ஊடகத் தகவல்களின் கூற்றுப் படி, ஸ்வான் நிறுவனத்தை 2006லேயே ஷாகித் பால்வா என்பவர் ராஜாவின் கட்டளையின் பெயரில் வாங்கியிருக்கிறார். அதன் உரிமையாளர்களாக மொரீஷியஷில் உள்ள பாரட் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் உரிமையாளர்களான டைகர் டிரஸ்டீஸ். அதன் உரிமையாளர்கள் இந்தியப் பெருங்கடல் தீவு ஒன்றில் உள்ள ஸீப்ரா இன்வெஸ்ட்மெண்ட்ஸ். இப்படி வனவிலங்குகளின் பெயர்களில் போலியாக வெளிநாடுகளில் பதிவு செய்யப் பட்ட ஃபோர்ஜரி நிறுவனங்களின் பெயர்களில் இந்த ஸ்வான் நிறுவனத்தின் உரிமை போய்க் கொண்டேயிருக்கிறது.
நம் தொன்மக் கதைகளில் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உள்ள ஒரு குகையில் உள்ள கிளியிடம் ராட்சதனின் உயிர் இருப்பது போலவே ராஜா விற்பனை செய்த இந்த போலிக் கம்பெனிகளின் உண்மையான உரிமையாளர்கள் கண்டு பிடிக்கவே முடியாத பல்வேறு அடையாளங்களில் மர்மமான பெயர்களில், தூர தேசங்களில் உள்ள தீவுகளில் ஒளிந்திருக்கிறார்கள். அவர்களின் கணக்கு யாவுமே இறுதியில் ராஜாவின் அல்லது அவரது எஜமானர்களின் கணக்காக இருக்கவே செய்யும் என்பதை யாரும் எளிதில் கண்டு பிடித்து விட முடியாது.
ஒரு நேர்மையான அரசாங்கம் முறையாக விசாரிக்குமானால் இந்த வெளிநாட்டுக் கணக்குகளில் கடத்திச் செல்லப் பட்டுப் பதுக்கி வைக்கப் பட்டுள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் வெளிவரும். அதன் உண்மையான உரிமையாளர்களின் பெயரும் வெளி வரும். அது வரை இவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது.

ஸ்வான் கம்பெனியை சையத் ஜலாலுதீன், முகமது காதீர் என்ற இரு கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ‘ஜென் எக்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரால் வாங்குகிறார்கள். அந்த நிறுவனத்திற்கும் துபாயைச் சேர்ந்த இடிஏ என்ற நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது. (இடிஏ நிறுவனத்திலும் கீழக்கரைக் காரர்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.)
அந்த நிறுவனத்திற்கு தமிழ் நாட்டின் புதிய சட்டசபை, மேம்பாலங்கள் போன்ற எண்ணற்ற கட்டுமான காண்டிராக்டுகள் வழங்கப் பட்டுள்ளன என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக ஸ்வான் நிறுவனம் தான் விற்ற லாபத்தை தனது எண்ணற்ற துணை நிறுவனங்கள் மூலமாகக் கடத்திக் கடத்தி இறுதியில் யாருமே கண்டுபிடித்து விட முடியாத வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்து விடுகிறது. வெட்ட வெட்ட முளைக்கும் மயில் ராவணன் கதை போலத் தோண்டத் தோண்ட ஒரு கம்பெனியின் பின் இன்னொரு கம்பெனியாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. திட்டமிட்டு மிகத் திறமையாக இந்த ஊழலைச் செய்திருக்கிறார்கள். இதற்கு உடைந்தையாக பல்வேறு இடைத்தரகர்களும் செயல் பட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது. இந்திய அரசின் பட்ஜெட்டையே தொடும் அளவுக்குப் பணம் கையாடல் செய்யப் பட்டிருக்கிறது. இதை ஒருவர் கூடவா கண்டு பிடிக்கவில்லை? எதிர்க்கவில்லை? ஒரு அரசு ஏஜென்சி கூடவா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? நடவடிக்கை எடுக்கவில்லை?
நியாயமான கேள்விகள்தான்.
2008ல் இந்த பரிவர்த்தனை நடந்தது. நடப்பதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகளும், பயனீர் போன்ற பொறுப்பான பத்திரிகைகளும், சுப்ரமணியன் சுவாமி போன்ற சிலரும், இந்த ஊழலின் ஆரம்ப கட்ட நிலையிலேயே அரசாங்கத்திற்குத் தங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
ஆனால் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு இவர்களின் எதிர்ப்புக்களை சட்டையே செய்யவில்லை. சும்மா, மேம்போக்காக எல்லாம் முறையாக வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதோடு சரி.
அரசிடம் முறையிட்டால் நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த எதிர்கட்சிகள் இந்தியாவின் பல்வேறு அமைப்புகளிடம் முறையிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக டெல்லி ஹைக்கோர்ட் இந்த ஊழலை விசாரித்து சினிமாக் கொட்டகைகளில் டிக்கெட் விற்பது போல 2ஜி ஸ்பெக்ட்ரத்தை விற்றிருக்கிறார்கள் என்று கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் காம்ப்ட்ரோலர் ஜெனரல் அமைப்பு ஸ்பெக்ட்ரம் விற்பனையை விசாரித்து அரசுக்கு 25000 கோடி வரையிலான பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஏன் காங்கிரஸ் எம் பிக்கள் கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி சகல தரப்புகளிலும் வந்த அனைத்துக் கண்டனங்களும் கூட, இந்த ஊழலின் மையப் புள்ளியான ராஜாவை அசைக்கவே முடியவில்லை. ஏனென்றால் ராஜாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிபூரண ஆசிகளும் பாதுகாப்பும் இருக்கின்றன என்று மறைமுகமாகக் குற்றம் சாட்டுகின்றன ஊடகங்கள்.
பல முறை ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் மன்மோகன் சிங் மொளனம் சாதித்து வருகிறார்.
இந்தியாவின் தலைமை கண்காணிப்பு அலுவலரான (சீஃப் விஜிலென்ஸ் ஆபீசர்) பிரத்யுஷ் சின்ஹா, 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் மாபெரும் முறைகேடும் ஊழலும் அரசுக்கு பெரும் பொருள் இழப்பும் லஞ்ச லாவண்யங்களும் நடந்திருப்பதாக பல முறை சொல்லியிருக்கிறார்.
ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி என்னென்ன குற்றங்கள் நடந்திருக்கின்றன ?
ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அடிப்படை விலையை சந்தை நிலவரத்திற்கு மாறாக மிகக் குறைவாக 2001ல் இருந்த விலை நிலவரத்தில் நிர்ணயம் செய்தது முதல் குற்றம்.
அப்படி குறைந்த விலைக்கு விலை வைத்து அவற்றை தனக்கு வேண்டிய போலிக் கம்பெனிகளுக்கு விற்றது இரண்டாவது குற்றம்.
அப்படி ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமையை வாங்கிய டுபாக்கூர் கம்பெனிகள் வாங்கிய உடனேயே பத்து மடங்கு கூடுதல் விலை வைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றது மூன்றாவது குற்றம்.
அப்படி நடந்த பரிவர்த்தனைகளை எல்லாம் கண்டு கொள்ளாமலும், மறைத்தும், அவர்களுக்குச் சாதகமாகச் செயல் பட்டதும் நான்காவது குற்றம்.
இந்த குற்றங்கள் மூலமாக நாட்டுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது ஐந்தாவது குற்றம்.
என்று குற்றசாட்டுக்களை அடுக்கடுக்கடுக்காக அடுக்குகிறார் இந்தியாவின் தலைமை விஜிலென்ஸ் ஆஃபீசர் சின்ஹா. இந்தக் குற்றங்களுக்கு எல்லாம் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் சிவிசி